லேண்ட் லைன் பகுதியில் அடுத்த தலைமுறை தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்கிறது BSNL !
BSNL தனது பழைய தொழில்நுட்பமான சுவிட்சிங்கிலிருந்து நான்காம் தலைமுறை நெட்வொர்க முறைக்கு மாற இருக்கிறது. இதன்மூலம் வருங்கால தொலைதொடர்பின் சவால்களை சந்திக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் மற்றும் சென்னை தொலைபேசியில் உள்ள அனைத்து இணைப்பகங்களும் இந்த முறைக்கு மாற்றப்படும். இதன் மூலம் நமது சந்தாதாரர்கள் அதிநவீன் தொழில் நுட்பத்தை பெற்று வாய்ஸ் மற்றும் அகன்ற அலைக்கற்றை ((voice quality and broadband) வசதியை பெறுவார்கள்.
இந்த தொழில்நுட்பம் மூலம் வீடு, அலுவலகம் மற்றும் ரோமிங் இவை ப்ராட்பேண்ட் அதி வேகத்தில் துல்லியமாக பெற இயலும். இது அகில இந்தியா முழுவதிலும் உள்ள நமது இணைப்பகங்களில் இன்னும் நான்கு வருடங்களுக்குள் செய்து முடிக்கப்படும்.
இதற்கான் வடிவமைப்பு நமது சீனாவின் ஹூவாய் கம்பெனிமூலம் பெறப்படும்.
சென்னை தொலைபேசியில் இரண்டு கட்டங்களாக 48 தொலைபேசி இணைப்பகங்கள் NGN level-க்கு மாற்றப்படும் முதல் கட்டமாக. சுமார் 15 வருடங்களாக உள்ள பழைய தொழில்நுட்பத்துடன் வேலை செய்யும் 11 தொலைபேசி நிலையங்களில் குறிப்பாக கோடம்பாக்கம், கே.கே.நகர் மற்றும் மாம்பலம் பகுதியில் மாற்றப்படும்.
“சுமார் 55,000 தொலைதொடர்பு லைன்கள் NGN தொழில் நுட்பத்திற்கு மாற்றப்படும்”. இது வரும் டிசம்பருக்குள் முடியும்.
இரண்டாவது கட்டத்தில் சுமார் மீதமுள்ள 37 தொலைபேசி இணைப்பகங்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு கொண்டு வரப்படும்.
மூன்று வருடத்திற்குள் சுமார் 1 மில்லியன் லேண்டலைன் இந்த நெட்வொர்கிற்குள் வரும்.
இதற்காக தமிழ் மாநில தொலைதொடர்பு வட்டம் சுமார் ரூ.11 கோடிக்கான ஆர்டரை கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 21 தொலைதொடர்பு மாவட்டங்கள் குறிப்பாக கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி இவை ஏழு மாதத்திற்குள் மாற்றப்பட்டு பயன்பெறும்.
தகவல்:The Hindu....26-07-13
தகவல்:The Hindu....26-07-13
No comments:
Post a Comment