Thursday, 11 July 2013


செய்திகள் 

ஓய்வு  பெற்ற ஊழியர்களுக்கு குடியிருப்பு ஒதுக்குவதற்கான மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை BSNL நிர்வாகம் 10/07/2013 அன்று வெளியிட்டுள்ளது. அநேகமாக.. யாருமே குடிவர முன்வராத அளவில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக.. TYPE III குடியிருப்பிற்கு C பிரிவு ஊர்களுக்கு 3070ம், B பிரிவு ஊர்களுக்கு 6140ம், A1 பிரிவு ஊர்களுக்கு 9210ம் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சட்ட திட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

JAO தேர்வில் தேர்ச்சியுறாத SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய BSNL நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
மாநில நிர்வாகங்கள் 11/07/2013க்குள் தேவையான விவரங்களை  டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இம்மாத இறுதிக்குள் மறுபரிசீலனை செய்யப்பட்ட
 தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

BSNL நிர்வாகம் ஊர்சுற்றிகளுக்கான 2 புதிய ROAMING TARIFF PLANகளை அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 5 ரூபாயும், மாதத்திற்கு 69 ரூபாய் என்ற அளவில் அளவற்ற உள்நுழைவு அழைப்புக்கள் அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment