Friday 22 January 2016

           தலைக்கு  மேல் தொங்கும் கத்தி !!
    
                Image result for damocles sword


BSNL CDA 2006, விதி 55ii (b), ஊழியர்களின்  தலைமேல் தொங்கும் கத்தி 
என்று அது அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நமது  சங்கம் எதிர்த்து 
குரல் கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே !

2006ல் கோவையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் கூட்டத்தில்  
தோழர் மதி அவர்கள் அந்த விதியை படித்துக்காட்டி  விளக்கியதை 
ஞாபகம் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள்.

55 வயதான ஊழியர்களின் செயல்பாடுகளை பரிசீலித்து அதன் 
அடிப்படையில் சிறப்பாக செயல்பட முடியாத ஊழியர்களை 
வீட்டுக்கு அனுப்பலாம் என்று அந்த விதி கூறுகிறது.

 நமது சங்கம் அங்கீகாரம் பெற்றவுடன்  அந்த பிரச்னையை 
தேசிய கவுன்சிலில் எடுத்தது. கடுமையான வாதங்களை முன்
வைத்து அதனை நீக்க கோரியது.

பிரச்னை standing committeக்கு அனுப்பப்பட்ட பின்னணியில், 
BSNL தலைமையகம் தன்னிச்சையாக ஒரு உத்திரவை பிறப்பித்து
உள்ளது.   

இவ்வாண்டின் கடந்த மூன்று காலாண்டுகளில் எத்தனை ஊழியர்கள் 
அந்த மாதிரியான பரிசீலனைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள், எத்தனை 
ஊழியர்கள், தங்கள் வழக்கமான ஓய்வு  தேதிக்கு முன்னரே வீட்டுக்கு அனுப்பபட்டார்கள் (retired prematurely)  என்ற விவரத்தை 25-1-2016க்குள் அனுப்பவேண்டும் என்று தலமட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு
உள்ளது. 

இந்த உத்திரவின்படி அந்த மோசமான பரிசீலனைக்கு ஆட்படுத்தப்
-படுபவர்கள்  Non Executive ஊழியர்கள்  மற்றும்  JTOக்கள் மட்டுமே 
என்று பாரபட்சத்துடன் உள்ளது அந்த உத்திரவு.

தற்போது உள்ள ஊழியர்களில் ஆகப் பெரும்பாலானோர் 55 வயதை 
தாண்டியவ்ர்கள் என்பது யாவரும் அறிந்ததே !

Corporate office letter to all CGMs to undertake periodical review in accordance with 

Rule 55(ii)(b) of BSNL CDA Rules 2006. Letter No.-252-1/2016-Estt. III, (Misc),
dt- 18-01-2016. 


நன்றி: கோவை வளைதலம்.

Tuesday 5 January 2016



இரங்கல் கூட்டம்

04/01/2016 அன்று மறைந்த தோழர் A.B. பரதன் அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஊராட்சியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரா. தங்கராஜ் சி.பி.ஐ.முன்னால் மாவட்ட செயளாலர் கலந்து கொண்டார்.


Friday 1 January 2016



  IDA  உயர்வு      =  4.5 %
  தற்போது        =  107.9 %
                                 ----------
01/01/2016 முதல்  = 112.4 %
                                   ----------

 தோழர்  சி.கே.எம் அவர்களின்  புது வருட செய்தி 

 

                         வரவேற்போம் 2016 !


               இன்னும் ஒரு சில மணிகளில் புத்தாண்டு பிறக்க உள்ளது. 
புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம்.

   2015ன்  மோசமான நினைவுகள் நமது நினைவை விட்டு அகல 
வேண்டும்.

2016ல் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் தங்களது சக்தி வாய்ந்த வாக்குரிமையை முதிர்ச்சியுடன் பயன்படுத்தி  நன்றாக ஆளத் தெரிந்த சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிபார்ப்போம்.



 நமது நிறுவனத்தில் இவ்வாண்டு  ஏப்ரல்/ மே திங்களில் 7வது அங்கீகாரத் தே
ர்தல் நடைபெறவுள்ளது. அது மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 

மேலும் மூன்றாண்டுகளுக்கு நமது சங்கம் அங்கீகாரத்துடன் பணியாற்ற நாம் தேர்தல் பணியை காலதாமதமின்றி துவங்க வேண்டும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் பெறும் வகையில் 
தற்போதைய அங்கீகார விதிகள் உள்ளபோதும், முதன்மைச் சங்கம் 51 சதம் பெற்று விட்டால், அந்த சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்ற விதியும் உள்ளது. ஆகவே மெத்தனமாக இருக்கக்
கூடாது.

நமது சங்கம் முதன்மை அங்கீகாரச் சங்கமாக இருந்தால்தான் கோரிக்கைகளில் சமரசமின்றி போராட முடியும் என்பதை ஊழியர்களிடம் விளக்கிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. 

BSNLEU சங்கம் மட்டுமே அங்கீகாரத்தில் இருந்த காலத்தில் 10  ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்பதை ஏற்றுக் கொண்டதால்தான்   நமக்கு அடுத்த ஊதிய மாற்றம் 1-1-2017 முதல் 
அமலாக வேண்டும் நிலை உள்ளது. நமது சங்கம் அங்கீகாரத்தோடு இருந்தால்தான், 78.2 சத ஊதிய நிர்ணயம், அனைவருக்கு 30 சத ஊதிய நிர்ணயப்பலன், போனஸ் போன்ற பிரச்னைகளில் BSNLEU சமரசம் செய்து இழப்பை ஏற்படுத்தியது போல அல்லாமல் நமது கோரிக்கை முழுமையாக பெற முடியும். அந்த பிரச்னைகள் இன்னமும்கூட தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது நாம் அனைவரும்  அறிந்ததே. 

மிகவும் அனுபவமும் ஆழ்ந்த அறிவாற்றலும் பெற்ற தோழர் குப்தா அவர்களின் முயற்சியால் முதல் ஊதிய மாற்றத்தின்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் நல்ல ஊதிய ஒப்பந்தம் சாத்தியமானது.

  ஆனால் BSNLEU சங்கத்தின் மேலாதிக்க போக்கால் இரண்டாவது ஊதிய ஒப்பந்தமும் NEPPயும் பல குறைபாடுகளோடு உருவானது.

  மூன்றாவது  ஊதிய ஒப்பந்தம்முழுமையானதாக அமைய நமது
 
சங்கத்திற்கு முதன்மை அங்கீகாரம் இன்றிமையாதது என்பதை 
 
அனைத்து ஊழியர்க்கும் விளக்கி வெற்றி வாகை 
 
சூடுவதோடு அனைத்து ஊழியர்களையும் 
 
ஒன்றினைத்து நல்ல ஊதிய ஒப்பந்தம் 
 
 உருவாக  பாடுபடுவோம், முன்னேற்றம் காண்போம்  என்று 
 
புத்தாண்டில் உறுதி ஏற்போம்.