Tuesday 31 December 2013

















IDA = 5% உயர்வு.

தற்போது பெறுவது = 85.5 %


உயர்வு            =   5.0 %


01-01-2014 முதல்  =  90.5 %
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பணிநிறைவு நாள்.

இன்று வேலூர் மாவட்டத்தில் பணிநிறைவு பெறும் 

கீழ்கண்ட தோழர்களின் வாழ்வில் அமைதியும் 

மகிழ்ச்சியும் நிலைத்திருக்க நாம் வாழ்த்துவோம்.


1.     திரு. எஸ். வேதாசலம்    --- Sr.TS \ வேலூர்

2.     திரு. பி. அர்ஜுணன்       --- Sr.TS \ வந்தவாசி

3.     திரு. அலி முகமது        --- TTA \  வேலூர்

4.     திரு. எ.எஸ். ஜனகிராமன்  --- TM \ மேல்விஷாரம்

5.     திரு. சுந்தரம்              ---  TM \ முனுகுபட்டு

6.     திரு. சுப்ரமணியன்         --- TM \ இராணிப்பேட்டை   

Monday 30 December 2013




ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு: பரபரப்பு ஏற்படுத்தும் தகவல்










ஈரோடு : தமிழகத்தின், 'டாப் 16' அரசுத்துறை லஞ்ச அதிகாரிகள் பட்டியலை லஞ்சம் கொடதோர் அமைப்பினர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் .

ஈரோட்டில், கடந்த வாரம், பத்திரிகையாளர்களை சந்தித்த, தமிழ் மீட்சி இயக்கத்தினர், தமிழக அரசுத்துறையில், 'டாப் 16' லஞ்ச அதிகாரிகளின் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்தனர். இந்த அமைப்பு தன்னார்வ தொண்டு அமைப்பாகும். இதனால், அரசுத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.நேற்று காலை, ஈரோட்டில் தமிழ் மீட்சி இயக்கத்தின் கலந்துரையாடல் கருத்தரங்க கூட்டம், மாநில செயலரும் சமூக ஆர்வலருமான நந்தகோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின், 'டாப் 16' ஊழல் அரசுத்துறை அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டனர்.மாநில தகவல் ஆணையர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன், சென்னை பால் கூட்டுறவுத்துறை தணிக்கை இணைப்பதிவாளர் ஜவகர் பிரசாத்ராஜ், சென்னை மகளிர் மேம்பாட்டு திட்ட இணை இயக்குனர் ராதா, பெரம்பலுார் டாஸ்மாக் உதவி மேலாளர் கல்யாணி, கரூர், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் குமரேசன், தமிழக முதல்வர் தொகுதியை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெய ஸ்ரீ முரளிதரன், முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் பவானி, உட்பட ஊழல் மற்றும் பணி நேர்மையற்ற அதிகாரிகள் 16 பேர் பட்டியலில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லுாரை சேர்ந்த சீனிவாசன். இவர், தனது கிராமத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.தகவல் உரிமை சட்டத்தில் பதில் கோரிய போது, 2,000 பக்கம், வெற்று தாள் அவருக்கு பதிலாக கிடைத்ததாக இங்கு தெரிவித்தனர்.தொடர்ந்து, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிடப்போவதாக, தமிழ் மீட்சி இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Click Here

செய்தி: தினமலர் (30/12/2013)

Saturday 28 December 2013

முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள்

டெல்லி முதல்வராக இன்று அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஒவ்வொருவரின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் அரவிந்த் உள்துறை, நிதி, ஊழல் கண்காணிப்பு, மின் திட்டம், சேவைகள் துறைகளை தன் வசம் வைத்துக்கொள்கிறார்.
மனிஷ் சிசோதயா, கல்வி, பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறைகளை கவனித்துக் கொள்கிறார். சோம்நாத் பார்தி, நிர்வாக சீர்திருத்தம், சட்டம், சுற்றுலா, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகள் அமைச்சராகிறார். சவுரவ் பரத்வாஜ் போக்குவரத்து, உணவு வழங்கல், சுற்றுச்சூழல் துறையையும், ராக்கி பிர்லா மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையையும், கிரிஷ் சோனி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின துறையை கவனித்துக் கொள்கின்றனர். அமைச்சர் சத்யேந்திரா ஜெயின், சுகாதாரம், தொழிற்சாலை துறைகளை கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


பட்டினி போர்
 
 
 
நிர்வாகத்தின் நியாயமற்ற போக்கை கண்டித்து சென்னை  மாநிலச் செயலாளர்  சி.கே.மதிவாணன் திங்கள்கிழமை 30-12-2013 காலை 9 மணியிலிருந்து  பட்டினி போராட்டத்தை  துவங்குகிறார்.

நிர்வாகம் 16/12/2013-ல் நடத்திய பேச்சு வார்த்தையின் போது ஒப்புக்கொண்ட அம்சங்களை கூட நிறைவேற்றாமல் காலம்கடத்தும் போக்கினை இன்று 28/12/2013 கூடிய மாநிலச் செயலகக் கூட்டம் ஆழமாக பரிசீலத்ததில் நிர்வாகம் மாற்றுச் சங்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் பல நிர்வாகிகளாலும் தெரிவிக்கப்பட்டது. 

எனவே, நியாயம் காண நிர்வாகம் ஒப்புக்கொண்ட பிரச்சனைகளில் தீர்வுகாண மாநிலச்செயலாளர் சி.கே.மதிவாணன்  புரசைவாக்கம் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் திங்கள் காலை 9 மணி முதல் பட்டினிப் போராட்டத்தை துவங்கத் தீர்மானிக்கப்பட்டது.

தோழர்கள் அனைவரும் போராட்டத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய CGM அலுவலத்திற்கு பெரும் திரளாக வர அன்புடன் வேண்டுகிறோம்.

--NFTE-BSNL 
சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்.


                                                  

                                        அஞ்சலி

தந்திப் பிரிவு சங்கத்தின் மாநிலச் செயலராக நீண்டகாலம்
சிறப்பாக பணியாற்றிய தோழர் T.S.ராஜன் 28-12-2013 அன்று
மும்பையில் காலாமாகி விட்டார்.
  அவருக்கு நமது இதய அஞ்சலி.
                      அஞ்சலி 

ஞ்சை மாவட்டச் சங்கத்தின் செயலர் தோழர் T. பன்னீ ர் செல்வம் அவர்களின் தாயார் தனது 90ஆவது வயதில் நேற்று இரவு  
காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

 தாயாரின் மறைவால் வாடும் தோழரின் குடும்பத்தாருக்கு நமது 

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்


அவரது தாயாருக்கு நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறோம்

Friday 27 December 2013


குப்தாவின் தீர்க்க தரிசனம்

MTNL தோழர்களுக்கு ஓய்வூதியம் 

ஏறத்தாழ 43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாளாக  BSNLக்கு இணையான ஓய்வூதியம் தேவை என்று கோரி வருவது அனைவரும் அறிந்தததே. அதனை  தற்போது மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.. 

BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY ஊழியர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.

இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.. 

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.. 

இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குப்தா முன்மொழிந்த யோசனை. ஏதாவது ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்றை பெற முடியும் என அவர் நம்பினார்.

BSNL உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர். 

MTNL ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றால் மிகையாகாது.

Thursday 26 December 2013

ஈரோடு மாவட்டத்தின் சாதனை

APPRICIATION OF GENERAL MANAGER BSNL ERODE IN THE MANAGEMENT MEETING HELD ON 06.12.2013.

“GM congratulated the entire SSA staff for the revenue achievement for November 2013 at +7.7%, securing 2nd position in the Circle.
For the month of November 2013, Erode SSA has increased the revenue by more than 5% compared to November of last year.
 GM credited this achievement for the extremely hard work and sincere efforts by the field staff which would not have been possible otherwise.”
பொது மேலாளர் ஈரோடு அவர்கள் கடந்த 06.12.20013 அன்று நடைபெற்ற வளர்ச்சி மற்றும் நிர்வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்
நவம்பர் 2013ல் ஈரோடு மாவட்டத்தில் நமது நிறுவனத்துக்கு 7.7 சதவிகித அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்தமைக்காகவும், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்தமைக்காகவும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
நவம்பர் 2013ல் ஈரோடு மாவட்டத்தில் நமது நிறுவனத்துக்கு நவம்பர் 2012ஐ ஒப்பிடும்போது 5 சதவிகித அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்துள்ளோம்
அனைவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த பணிகளும் சிறப்பாக அமைந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்று பொதுமேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமேலாளரின் பாராட்டுக்கு  
நன்றி.
இன்று 89வது பிறந்த நாள் காணும் தோழரை வாழ்த்துவோம். வாருங்கள்.

வாழும் வரலாறு தோழர் இரா.நல்லகண்ணு....


வாழும் வரலாறு தோழர் இரா.நல்லகண்ணு....
அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
அந்த மாமனிதரை வணங்குகிறேன் !!! 
இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதுதான் பெருமை .. ஆட்டோவில் பயணம் செய்யும் "தேசிய கட்சியின் " தலைவர் ....நேர்மையான அரசியல்வாதி மரியாதைக்குரிய " நல்லகண்ணு " அய்யாஅவர்கள் .... "பெரியவர் நல்லகண்ணு அவர்கள் தொண்டால் உயர்ந்த தலைவர்; ; பண்பில் நமக்கு ஆசான்; மனிதநேயம் போற்றும் மார்க்சிய ’மகாத்மா." 
கட்சி அவருக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை , அந்த மேடையிலேயே கட்சி நிதியாக திருப்பிக் கொடுத்து விட்டார் ..." .GREAT "#
நல்லகண்ணு அய்யா! வாழ்க! வாழ்க பல்லாண்டு!!!

Monday 23 December 2013



பணிநிறைவு பாராட்டு விழா
காரைக்குடியில் 22-12-2013 அன்று அமராவதி திருமண ம்ண்டபத்தில் தோழ ஆர்.பூபதி 22-12-2013 அன்று அமராவதி திருமண ம்ண்டபத்தில் தோழ ஆர்.பூபதிSDE SSDE  அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழாவும், இரா.பூபதி – இராமலதா இவர்களின் மணி விழாவும் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தோழர் பி.எல். இராமச்சந்திரன் CPI  முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார்கள். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர் குணசேகரன் MLA, எழுத்தாளர் பொன்னீலன், தோழர் C. மகேந்திரன் CPI மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், NFTE சம்மேளன துனை பொதுச்செயலாளர் தோழர் C.K. மதிவாணன், NFTE சம்மேளன செயலாளர் தோழர் G. ஜெயராமன், NFTE  முன்னாள் மாநில செயலளர் தோழர் மாலி, AIBSNLOA மாநில தலைவர் தோழர் R.R. பாலசுப்ரமணியன், AIBSNLOA, AIBSNLEA, SNEA(I), BSNLEU,FNTO  தொழிற்ச்சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், நிர்வாகத்தின் சார்பில் DGM-CFA, DGM-CM ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். NFTE மாநில சங்கநிர்வாகிகள் அசோகராஜன், சுப்பராயன், கணேசன், பழனியப்பன், சுந்தரம், இராஜ மற்றும் பல முன்னனி தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். காரைக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர்கள் மாரி, நாகேஷ்வரன், முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று சிற்ப்பாக உபசரித்தனர். நிகழ்ச்சியின் பட காட்ச்சிகள் கீழே காண்க.