Thursday 30 July 2015



நமது முன்னால் குடியரசு த்லைவர் டாக்டர் ஏ.பி.ஜே. 

அப்துல் கலாம் அவைகளின் மறைவுக்கு இன்று 

(30/7/2015) திருவண்ணமலை பி.எஸ்.என்.எல் 

அனைத்து ஊழியர்களின் சார்பில் மவுன அஞ்சலி 

செலுத்தப்பட்டது.

 

 

Tuesday 28 July 2015

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிர் பிரிந்தது


Thursday 23 July 2015



State executive meeting of telecom contract labours Union (NFTCL) of Tamilnadu:
The state executive meeting of telecom contract labours Union (NFTCL) of Tamilnadu was held today in Chintadripet AITUC office.The meeting decided to hold the state conference in Trichy in February 2016.  It also decided to organise a full day dharna to demand settlement of contract labour demands on 02-10-2015 at Valluvar Kottam in chennai.
http://www.nftechennai.org/images/NFTE210715.jpg 
 http://www.nftechennai.org/images/NFTE1210715.jpg 
 http://www.nftechennai.org/images/NFTE2210715.jpg












http://www.nftechennai.org/images/NFTE3210715.jpg

Tuesday 14 July 2015

திட்டமிட்ட தீய சதி

BSNL நிர்வாகம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சதியை அரங்கேற்றியுள்ளது. நமது நிறுவனத்திற்கு கணிசமான வருமானம் தருவது லேண்ட்லைன் ப்ராட்பேண்ட் சேவை.
இந்த சேவையை தருவது, பராமரிப்பது, பழுதுகளைச் சரிசெய்வது போன்றவற்றை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில்   தனியாருக்கு வழங்க BSNL நிர்வாகம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும்   குறிப்பிட்ட நகரங்க்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, ஆந்திராவில் ஹைதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, குஜராத்தில் அகமதாபாத்,மகராடிரத்தில் புனே-நாக்பூர், உத்தரப்பிரதேசத்தில் மீரட்-நொய்டா-காசியாபாத், ஹரியானாவில் குர்கான்-பரிதாபாத், உத்தராஞ்சலில் டேராடூன் ஆகிய நகரங்கள் அவுட்சோர்சிங் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நமது தூறையில் TM,RM, SR TOA கேடர்களில் ஏற்கெனவே ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என நிர்வாகம் கதறுகிறது. இவர்களின் நிலை என்னவாகும்? TTA கேடரில் உள்ளாவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதா?
ப்ராட்பேண்ட் சேவையை நல்ல முறையில் பராமரிக்கவும் அதை விரிவுபடித்துவதும் அவசியம்.
நம்மிடம் உள்ள மனித வளத்தையும், மனித ஆற்றலையும் வைத்து இதைச்  செய்ய திட்டமிட்டிருக்கல்லாம். அதற்கு வழிவகைகளைக் கண்டு பிடித்திருக்கலாம். இந்த வழியில் சிந்தித்து தொழிற்சங்கங்க்களுடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கலாம்.
ஆனால் எதிர்மறைச் சிந்தனையோடு அவுட்சோர்சிங் என முடிவெடுத்தது ஒரு சதியே.
இது யாருடைய ஆணையின் பேரில் யாருக்காக, யார் பயன் பெற உருவாக்கப்பட்ட சதி?
இதன் மூலம் தனியார் நமது நெட் ஒர்க்கில்   நுழைய வாய்ப்பு ஏற்படாதா?
இது குறித்து நிர்வாகத்துடன் விவாதிக்க வேண்டும். சேவையை சிறப்பாகத் தர திட்டமிடல் வேண்டும்.
நிர்வாகம் இதை செய்யத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
நிச்சயம் நமது தலைவர்கள் தகுந்த நடவ்டிக்கை எடுப்பார்கள்.

இது குறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மனம் திறந்த ஆய்வு தேவை.

நன்றி:ஈரோடு NFTE.