Sunday, 14 July 2013

இன்றுடன் தந்தி சேவை நிறைவு :


    கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த தந்தி சேவை ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராகேஷ் சர்மா உபாத்யாய கூறியதாவது:÷""ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் சேவை, இரவு 9 மணியுடன் முடிவுக்கு வருகிறது. திங்கள்கிழமையிலிருந்து இச்சேவை இருக்காது'' என்றார்.
தந்தி சேவையின் மூலம் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்புப் பணிக்காக ஆண்டுக்கு ரூ. 100 கோடியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் செலவிடுகிறது. செல்போன் மற்றும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், தந்தி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
நாட்டில் இப்போது 75 தந்தி சேவை மையங்கள் உள்ளன. இதில் 1,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் செல்போன், லேண்ட் லைன் மற்றும் பிராட் பேண்ட் சேவையில் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தியாவில் தந்தி சேவை முதல் முறையாக பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்தால் கொல்கத்தாவுக்கும், டையமண்ட் ஹார்பருக்கும் இடையே 1850-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், 1854-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment