Sunday 31 March 2013

தினம் ஒரு கேள்வி (நான்கு)
78.2% IDA இணைப்பு நிர்வாகம் ஏற்றுக் கொண்ட்தாகச் சொல்லி 12/06/2013 அன்று நட்த்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை BSNLEU சங்கம் விலக்கிக் கொண்டது.  ஆனால், 10 மாதங்களாகியும், இந்த நேரம் வரை 78.2% IDA நாம் பெற முடியவில்லை. இதனால் நமது ஊழியர்கள் இதுவரை 6000 கோடி இழந்துள்ளார்கள். மேலும் 100000 ஊழியர்கள் 78.2% பெறாமலேயே ஓய்வு பெற்று சென்று விட்டார்கள். நிலைமை இப்படி இருக்க BSNLEU சங்கம் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வெட்கமில்லாமல் தேர்தல் பிரச்சார போஸ்.டர்களில் 78.2% IDA பிரச்சனை தீர்வு கண்டுள்ளது/அடைந்துவிட்டோம்/உத்தரவாதம் பெற்றுள்ளோம். என வெளியிடுகிறது. ஒரு சில வாக்கினை பெருவதற்க்காக ஒரு தொழிற்சங்கம் இப்படிபட பொய்யான் தேர்தல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது சரிதானா?

நன்றி: NFTE சென்னை

தினம் ஒரு கேள்வி - மூன்று

“போனஸ்  என்பது கொடுபடா ஊதியம்” என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும், நட்டத்தில் இயங்கினாலும் 13 வது மாத ஊதியம் என்ற அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு உண்டு. அது சி.ஐ.டி.யூ சங்கத்தின் வழிகாட்டுதல்படி  செயல்படுகிறது. அப்படிப்பட்ட சங்கம் போனஸ் வழங்கப்படுவதை லாபத்துடன் இணைந்து உடன்பாடு போட்டது. தன்னை இடதுசாரி, புரட்சிகர சங்கம் என பறைசாற்றிக் கொள்ளும் ஒரு சங்கத்தின் செயல்பாடு சரியானது தானா?  தோழர் குப்தா உற்பத்தியோடு இணைந்த போனஸ் உடன்பாடு கண்ட போது அவரை அவதூறு செய்தார்கள். ஆனால் அங்கீகார அதிகாரம் கிடைத்தவுடன் போனஸை லாபத்துடன் இணைத்து உடன்பாடு போட்டார்கள். இந்த ஒரு மாபெரும் தவறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்தபட்ச போனஸ் கூட பி.எஸ்.என்.எல்.ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பொதுத்துறை நிறுவன இலாக்கா பி.எஸ்.என்.எல். நிறுவனம் “மிகச் சிறப்பாக” செயல்படுவதாக சான்றளித்துள்ளது. போனஸை லாபத்துடன் இணைத்த காரணத்தால் நிர்வாகம் போனஸ் தர மறுக்கிறது. இதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இது சரியா?
நன்றி: சென்னை இணைய தளம்.

தினம் ஒரு கேள்வி - இரண்டு


புதிய பதவி உயர்வு திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் மிகப் பெரும் சாதனையாக சொல்லிக் கொள்கிறது. பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவி பெறுகிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கோ 8 ஆண்டு இடைவெளி என்பதால் இரண்டு பதவி உயர்வுகள் மட்டுமே பெறுகிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்? பதவி உயர்வு காரணமாக பெறவேண்டிய ஊதிய நிலுவையை  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சரண்டர் செய்தது ஏன்? பதவி உயர்வில் நியாயமாக எஸ்.சி / எஸ்.டி ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டினை நிர்வாகம் மறுத்ததை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏன் ஏற்றுக் கொண்டது? பதவி உயர்வுக்கான சேவையில் 2000 க்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் 2000 க்குப் பின் வேலையில் சேர்ந்தவர்கள் என வேறுபாடு காட்டுவதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஒப்புக் கொண்டது ஏன்?
நன்றி: சென்னை இணைய தளம்
வெற்றிக்கூட்டணியில்  மேலும் ஒரு சங்கம்  !
                 


  மேற்கு வங்க வெற்றி மங்கையின் தலைமை யிலான சங்கம் ஏற்கனவே  வரும் தேர்தலில் நமது சங்கத்திற்கு ஆதரவு தர முன்வந்துள்ளதை அறிவித்தோம் !

தற்போது  தமிழகத்திலும் சென்னை தொலைபேசி யிலும் கணிசமான ஊழியர் ஆதரவைப் பெற்ற  BSNL Employees  Anna Union (BSNLEAU)  சங்கமும் நமது NFTE-BSNL சங்கத்திற்கு இந்த தேர்தலில் நல்லாதரவு தரவும், நமது சங்கத்தின் வெற்றிக்கு களப்பணி ஆற்றவும் ஒப்புக் கொண்டுள்ளது மனமுவந்து  வரவேற்கத் தக்கது.

 அநியாயம் அகல !  அராஜகத்தை அடியோடு விரட்டிட,
 செயலற்ற சங்கம் செயலற்று போக,
அனைவரையும் அரவணைப்போம் !! 
வெற்றி நமதே ! என்று வீர முரசு கொட்டிட
அயராது பாடுபடுவோம் !! 
நன்றி: NFTE கோவை
SUN குழுமம் கட்டிய ரூ. 60 கோடி அபராதம்.
ஜெட் விமானத்தை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றத்துக்காக கலாநிதி மாறன் நிர்வகிக்கும் சன் குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 60 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளது
பாம்பார்டியர் வகை சிறிய ரக விமானத்தை இறக்குமதி செய்ததில் சன் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததை வருவாய் புலனாய்வுத் துறை கண்டறிந்தது. இதையடுத்து சன் குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து சன் குழுமம் உடனடியாக ரூ.60 கோடியை அபராதமாகச் செலுத்தியது.
வரி ஏய்ப்பு செய்யப்பட்டது உறுதியானதும், வருவாய் புலனாய்வு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு எந்த முறையீடும் செய்யாமல் உடனடியாக அபராதத்தை செலுத்தியுள்ளது சன் குழுமம்.
தகவல்: ஜனசக்தி நாளிதழ் 31.03.2013

Saturday 30 March 2013

LTC, MEDICAL BILL மீண்டும் கிடைக்க NFTE CHQ  கடிதம்

Friday 29 March 2013

தினமும் ஒரு கேள்வி:

       2000
த்தில் பொதுதுறை ஆனதுதான் இப்போது நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் என்றுதோழர்அபிமன்யுதொடர்ந்து பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுகொண்டிருப்பதால் கேட்கிறோம் ஏன் அபிமன்யுஅடுத்த 3 வருடத்திற்கு அங்கீகாரம் கேட்கிறார்? BSNL பொதுத்துறையிலிருந்து திரும்பவும் அரசு துறையாக மாறபோகிறதா? அப்படி மாறாத நிலைமையில் BSNLEU எந்த பிரச்சனையையும் தீர்க்காதா? அப்படியென்றால் ஏன் தொழிலாளி பிரச்சனைகளை தீர்கக முடியாத ஒரு சங்கத்திற்கு தன் வாக்கினை போட்டு வேஸ்ட் செய்ய வேண்டும்? அப்படி என்றால் மாண்புமிகு டாக்டர்.மன்மோகன்சிங் ஆட்சியில் அரசு துறையில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கிறதா?

Thursday 28 March 2013

  IDA  உயர்வு:
 IDA  மார்ச் மாதத்துடன் 3.4 சதவீதம்

உயர்ந்துள்ளது. எனவே ஏப்ரல்-2013 சம்பளத்தில்


3.4+71.5=74.9 சதவீதம் IDA  கிடைக்கும்.



தாம்பரம் கோட்டத்தின் சார்பாக பிரச்சார
கூட்டம் 28/03/13 அன்று தாம்பரம் 
தொலைபேசி இணைப்பகத்தில் தோழர்ராமகிருஷ்ணன் 
தலைமையில் நடைபெற்றது. 
நமதுமாநிலச்செயலர் C.K.மதிவாணன்சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும் போதுநாம் ஒரு மாதம் முன்னால் பிரச்சாரம் ஆரம்பித்தபோது, நாம் வெற்றி பெறுவது உறுதி என்று சொன்னேன்.ஆனால்,நான் ஒரு மாதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு வந்த பிறகு ,51% நாம் பெறுவது உறுதி என்று ஆகிவிட்டது.இதனை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.அபிமன்யூ இன்று நிலவும் சூழ்நிலைக்கு  NFTE தான் காரணம் என்று கூறுவது எப்படி இருக்கிறது என்றால், ””மன்மோகன் சிங், இன்று இந்தியாவில் உள்ள விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம்,பாலியல் பலாத்காரங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணம் வாஜ்பாய் அரசுதான் காரணம்”” என்று சொன்னால் எப்படி இருக்குமோ? அது போல் உள்ளது.ஆதலால் மக்கள் இதனை நம்ப தயாராக இல்லை. அனைவரும் இனி ஏமாறவும் தயாரில்லை .நம்மை பொருத்தவரை நாம் கூறுகிறோம் நாம் இந்த போனஸை கிடைக்க வைப்போம்” “போனஸ் கிடைக்கும் இதனை பார்த்து உங்களிடம் என்ன திட்டம் இருக்கிரது என்று அபிமன்யூ கோபத்தோடு கேட்கிறார், நான் சொல்கிறேன் போனஸ் என்பது கொடுபடா ஊதியம்” நீங்கள் உதாரணமாக ரூ10,000/- சம்பளம் என்றால் அதில் 300 பிடித்தம் செய்யப்பட்டு மீதம் தான் நம்க்கு சம்பளமாக தரப்படுகிறது,பிடித்தம் செய்த பணத்தை 12 ஆல் பெருக்கி அதனை 13வது மாத சம்பளமாக தருவதுதான் போனஸ்.ஆதலால் அதனை பெற லாபம் வந்தால் போனஸ் கொடுங்கள் என்று நம்பூதிரி ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டு.அதனை நாம் நிச்சயமாக செய்து போனஸ் வாங்கி தருவோம்.Productivity Linked Bonus குப்தா போட்ட ஒப்பந்தம் Profit linked bonus நம்பூதிரி போட்ட ஒப்பந்தம...நம்பூதிரி போட்ட ஒப்பந்தத்தால் போனஸ் கிடைக்கவில்லை.. ஆகவே அனைத்து இழந்த  சலுகைகளையும் திரும்ப பெற்று தருவோம்.ஆதலால்  அனைவரும் NFTE-BSNL க்கு வரிசை எண்:15 – ல் வாக்களிக்க வேண்டும்.




நன்றி: NFTE காஞ்சிபுரம் வலைதளம்

Tuesday 26 March 2013

JAO-PART-II தேர்வு முடிவு

ந்மது மாவட்டத்தை சேர்ந்த கீழ்கண்ட தோழர்கள்/தோழியர்கள் JAO PART-II
தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

1. இராஜேஸ்வரி குப்பன்   SSS  வேலூர்

2. அஃசாரி K ஜமான்     SS

3. P. சரவணன்  TS   திருவண்ணாமலை

4. பிரபா சோமசுந்தரம் (JAO OFFICI)  வேலூர்

Tuesday 19 March 2013

NFTE-  யின்  தேர்தல்  அறிக்கை







COURTESY: NFTE-VELLORE





 அமைச்சர் கபில் சிபலின் மனம் திறந்த பதில் :

  BSNL & MTNL உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்கும் கம்பெனிகள் அல்ல அவர்கள்  நஷ்டம் தரும் கபெனியாக எப்படி ஆனார்கள் ?ஸ்பெக்ட்ரம் வாங்க அவர்கள் 28,000 கோடி ரூபாய் கட்டினார்கள் !அந்த அளவு பணம் கட்ட நிர்பந்திக்கப்பட்டனர். MTNL வங்கிகளிடம் கடன் வாங்கி அரசுக்கு அந்த பணத்தி கட்டினார்கள். வங்கி கடனுக்கு வட்டி கட்டுவதால்தான் நஷ்டம் ஏற்பட்டது. அதே போலத்தான் BSNLன் நிலையும் ....
இந்நிலையில் அரசு ஏதாவது வகையில் அவர்களுக்கு நஷ்டத்திலிருந்து மீள ஒரு வழி கண்டாக வேண்டும் ! ஏனென்றால், 28,000 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு விட்டு அவர்களை நலிந்த கம்பெனி என்று கூறி, மேலும் சம்பாதியுங்கள் என்று கூறுவது சரியாக இருக்காது.இந்த மோசமான சூழலில் அந்த கம்பெனிகளின் ஷேர்களை தனியாருக்கு விற்பது சாதமாக இருக்காது .நல்ல மதிப்புள்ள தங்கத்தை அடிமாட்டு விலைக்கு விற்க முடியாது.ஆகவே,ஸ்பெக்ட்ரத்திற்கு கொடுத்த பணத்தை எப்படியாவது ஈடு செய்யவேண்டும் என்று அரசிடம் கூறுவோம் !   


தகவல்: NFTE-கோவை.  

Sunday 17 March 2013

Congratulations !!! SNATTA has decided to vote and support NFTE BSNL in 6th Verification !

தகவல் : NFTE COIMBATORE
      வணக்கம். இந்த வலைதளம் வரும் தேர்தலில் நமக்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற் வகையில் உருவாக்கியுள்ளோம்.இதை மேலும் செலுமை படுதத கருத்துக்களை வரவேற்கிறோம்.

Friday 1 March 2013

Welcome to our Thiruvannamali NFTE

Dear Comrade I Welcome all to view our website and

give your valuable suggestion to improve our site


        tvmalai selvaraj