Thursday, 25 July 2013


கனிமொழி மனு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு- குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மனு!ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு- குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மனு


 டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் அக்கட்சி எம்.பியுமான கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார். டாடா குழுமத்தின் யூனிடெக் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி தொலைக்காட்சிக்கு ரூ200 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது சிபிஐயின் புகார். இந்த வழக்கில் கலைஞர் டிவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த கனிமொழி கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கனிமொழிக்கு ஆதரவாக கலைஞர் டிவியின் நிர்வாகி அமிர்தம் ஏற்கெனவே சாட்சியம் அளித்திருக்கிறார். இதே வழக்கில் கனிமொழியின் பெரியம்மாவும் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவருமான தயாளு அம்மாளையும் சாட்சியம் அளிக்க சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் உடல்நலக் குறைவால் தம்மால் ஆஜராக முடியவில்லை என்று தயாளு அம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கலைஞர் டிவி நிர்வாகம் ரூ200 கோடி கடன் வாங்க முடிவு செய்த போது அங்கு நான் இயக்குநராக இருக்கவில்லை. நான் 2007ஆம் ஆண்டே அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன்..இந்த கடன் வாங்கும் முடிவு 2009ஆம் ஆண்டுதான் எடுக்கப்பட்டது. அப்போது இயக்குநர்களாக ஷரத்தும் தயாளு அம்மாளும்தான் இருந்தனர். இதனால் தமக்கும் ரூ200 கோடி பண பரிமாற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தம்மை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி கோரியுள்ளார். இந்த மனு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment