நீரா ராடியா "டேப் லீக்' குறித்து நடவடிக்கை எடுக்காதது
ஏன்?
வருமானவரித் துறைக்கு குட்டு !!
வருமானவரித் துறைக்கு குட்டு !!
புதுதில்லி:
"2ஜி'
வழக்கில் தொடர்புடைய அரசியல் தரகர் நீரா ராடியாவின், தொலைபேசி உரையாடல் பதிவுகள்,
வெளியானது குறித்து, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என, சுப்ரீம்
கோர்ட் கேள்வி எழுப்பியது. "2ஜி' வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்
சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' முன், சி.பி.ஐ., அறிக்கை ஒன்றை
தாக்கல் செய்தது. அதில் கூறியதாவது:
இவ்
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன், நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்களின்
பதிவின் மூலம், உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றப் பின்னணி உள்ளது தெரிய
வருகிறது. எனவே, இந்த உரையாடல் பதிவுகளை சாட்சியாக ஏற்று, மற்றவர்களையும்
கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்குடன் தொடர்புடைய பத்து வழக்குகளையும்
விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுப்படி நாங்கள்
செயல்பட தயாராக உள்ளோம். இவ்வாறு, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் வெளியானது குறித்து, வருமான வரித்துறை எவ்வித
நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த உரையாடல்களை வைத்து பார்க்கும்போது, பல்வேறு
கேள்விகள் எழுகின்றன. எனவே, அனைத்து விஷயங்களையும் ஆராய வேண்டியிருப்பதால், நாங்கள்
விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கிறது. இதுபற்றி கேள்வி எழும்போது, நாங்கள்
சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவோம். இவ்வாறு, நீதிபதிகள்
கூறினர்.
நன்றி: கோவை வலைதளம்
No comments:
Post a Comment