பயனுள்ள டெல்லி கருத்தரங்கம் ....சில காட்சிகள்
அனைத்து
சங்கங்களை உள்ளடக்கிய ஃபோரம் (Forum) சார்பாக, டெல்லியில் மாவ்லங்கர்
ஹாலில் 3-8-2013 அன்று நடந்த BSNLஐ புத்தாக்கம் செய்வது என்ற நல்ல நோக்கத்தோடு
கூட்டப் பட்ட அகில இந்திய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாகவும் எழுச்சிமிக்கதாகவும்
அமைந்தது.
NFTE-BSNL சங்கத்தின் பொதுச் செயலர்,தோழர் சந்தேஷ்வர் சிங், " ஃபோரம் " அமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் அந்த கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
"ஃபோரம் "அமைப்பின் கன்வீனர் என்ற அடிப்படையில் தோழர் VAN நம்பூதிரி, அந்த கருத்தரங்கத்தில் விவாதித்து நிறைவேற்ற உத்தேசித்த எழுத்துபூர்வமான தீர்மானத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
அனைத்து மத்திய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றும்போது, BSNLஐ மீட்பதற்கான அனைத்து சங்க முயற்சிகளுக்கு தங்களது முழுமையான ஆதரவையும் தெரிவித்தனர்.
AITUC பொதுச் செயலர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா,M.P வழக்கமான தனது எழுச்சிமிக்க உரையில் BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். CITU சார்பாக ஸ்வதேஷ் தேவ் ராய், BMS சார்பாக பொதுச் செயலர் தோழர் B.N.ரே, SC/ST ஊழியர் நல சங்கத்தின் கான்ஃபெடரேஷன் தலைவர் தோழர் உதித் ராஜ்,உள்ளிட்டோர் உரையாற்றினர்.
BSNLல் உள்ள அனைத்து சங்களின் தலைவர்களும் தீர்மானத்தின் மீதான தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
NFTE-BSNL சார்பாக நமது துணை பொதுச் செயலர் தோழர் C.K.மதிவாணன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் சமீபத்தில் மத்திய அரசு அந்நிய முதலீட்டை டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளில் உயர்த்தியதன் பின்னணியை விளக்கினார். மத்திய அரசில் ராணுவ அமைச்சராக உள்ள திரு A.K.அந்தோனி, நாட்டின் பாதுகாப்பு கருதி அந்நிய முதலீட்டை எதிர்த்துள்ளதையும், டெலிகாம் துறையில் அந்நிய முதலீட்டின் காரணமாக அரசு நிறுவனமான BSNL/MTNLக்கு எந்த பயனும் இல்லை என்று திரு.அந்தோனி தனது கடிதத்தில் விவரித்ததையும் எடுத்துரைத்தார்.அதையும் மீறி மன்மோகன் அரசு எடுத்த நடவடிக்கை தேச விரோதமானது என்று விளக்கினார்.
டெலிகாம் துறையில் அந்நிய முதலீட்டை100 சதமாக உயர்த்தியதால், தனியார் கம்பெனிகள் மேலும் நிதி பெற்று வளர வைப்பதும், அதே சமயம் நமது அரசு நிறுவனங்களை நிதி பற்றாகுறை காரணமாக தவிக்க வைப்பதுமே அரசின் கொள்கை, அதனை எதிர்த்து அனைத்து சங்கங்களும் சமரசமற்று போராட வேண்டும் ; மேலும் ஃபோரம் தலைமை, தற்போது விடுபட்டுள்ள மற்ற சங்கங்களையும் இந்த அமைப்பில் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், வங்கித் துறையில், ஃபோரம் அமைக்கப்பட்ட பிறகு, அனைத்து போராட்டங்களும் அந்த ஒன்றுபட்ட ஃபோரம் சார்பாகவே நடத்தப்படுகின்றன. ஆனால் நமது பகுதியில் ஃபோரம், யுனைட்டட் ஃபோரம், ஜாயிண்ட் ஃபோரம் என்று அடிக்கடி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடக்கும் செயல்களை தவிர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நிர்வாகத்தின் சார்பாக ஒரு பிரதிநிதியை அழைத்து இருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று தெரிவித்தார்.
BSNLஐ புத்தாக்கம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கோரும் விரிவான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களில் ஒன்றுபட்ட கருத்தரங்கத்தை நடத்து
முடிவெடுக்கப்பட்டது

No comments:
Post a Comment