CHQ OFFICE
BEARERS அவசர
கூட்டத்தின் முடிவுகள்::
03-08-2013
அன்று நமது அகில
இந்திய நிர்வாகிகள் நம்முடைய உடனடி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதம்
நடத்தினர்.: அவை
1. பழைய
போனஸ் பார்முலா மாற்றப்பட வேண்டும். ஒருமாத சம்பளம் கட்டாய போனஸ் தரப்படவேண்டும்.
BSNL நட்டம் என்பது நிர்வாகத்தின் பொறுப்பே தவிர போனஸை எக்காரணம் கொண்டும்
லாபத்துடன் இணைக்க கூடாது என
வலியுறுத்தப்பட்டது.
2. 78.2 கிராக்கிபடி
இணைப்பு 10/6/2013 அமுல்படுத்த்தியதில் நமது நான்காம் பிரிவு தோழர்களுக்கு
சம்பளக்குறைவோடு ஊதிய பிடித்தமும் செய்துள்ளது. இது பெரும் பாரபட்சம் ஆகும். சில
பேருக்கு ஊதிய உச்சத்தை (STAGNATION PAY) அடைந்துள்ளதால் எந்த பிரயோசனமும் இல்லை என
ஏற்பட்டுள்ளது. இது நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இதற்கு ஒரு
போராட்டத்தை நாம் செய்யவேண்டும்.
3. 30% ஊதிய நிர்ணயம்
கிடைக்காத BSNL DIRECT RECRUIT தோழர்களுக்கு அது
விரிவுபடுத்தப்படவேண்டும்.
இது ஊழியர்களுக்கான பொதுவான பிரச்சனை என்பதால் நாம்
BSNLEU சங்கத்தையையும் கலந்து பேசி அவர்களோடு இணைந்து போராட்டம் செய்ய முடிவு
செய்யவேண்டும். ஆனால் இதில் அவர்கள் உடன்படாவிட்டால் நாம் தனித்து போராட தயார் ஆக
வேண்டும். போராட்டம் எத்தகைய வகையில் நடைபெற வேண்டும் என்பது வர இருக்கின்ற நமது
அகில இந்திய செயற்குழுவில் முடிவு செய்திட
வேண்டும்.
--தகவல்:
சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்
No comments:
Post a Comment