ஏற்கப்பட்ட நமது நிலைபாடு
!
தனி ஆவர்த்தனம் ஏன்? தோழர்.மதிவாணன் கேள்வி?
சென்ற தேர்தல் முடிந்தவுடன் BSNLEU சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இனி இரண்டு அங்கீகாரச் சங்கங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தல் முடிந்து கல்கத்தாவில் 7-9,ஜூன்- 2013 தேதிகளில் கூடிய முதல் செயற் குழுவிலேயே தனித்த போராட்டத்திற்கான அறைகூவல் விடப்பட்டது. உடனடியாக தனி ஆவர்த்தனம் ஏன்? என்று கேள்வி கேட்டு ஒரு கட்டுரையை நாம் வெளியிட்டோம்.
3-8-13 அன்று டெல்லியில் நடந்த கருத்தரங்கத்திற்கு வந்திருந்த நமது அகில இந்திய சங்க நிர்வாகிகள், மாநிலச் செயலர்கள் 3,4-8-13 தேதிகளில் நடத்திய கலந்துரையாடலில் அதே கருத்து வலுவாக வெளிப்பட்டு தீர்மானமாக வெளிவந்துள்ளது மகிழ்வை அளிக்கிறது.
அந்த கூட்டத்தில், இவ்வாண்டு போனசை கண்டிப்பாக வழங்க வேண்டும், அது குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், 78.2 IDA இணைப்பின் போது, பெரும்பாலான குரூப் D மற்றும் RM ஊழியர்க்கு Stagnation காரணமாக மறுக்கப்படுவது அநியாயம், அதை சரிசெய்ய மாற்று வழி காண வேண்டும் என்று வலியுறுத்தியதும் சரியான முடிவுகளாகும்.
அதே சமயம் நமது துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன், டெல்லி கருத்தரங்கில் நாசூக்காக தெரிவித்தது போல, BSNLEU தனது தனித்த போராட்ட அறைகூவலை கைவிட்டு விட்டு ஒன்றுபட்ட போராட்ட அறைகூவலாக ஆக்கிட முன்முயற்சி மேற்கொள்ளும் வகையில் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், BSNLEU தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் தனித்து போராடுவது என்ற தீர்மானமும் வரவேற்கத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------
தனக்கு தேவையென்றால் BSNLEU ஒற்றுமை வேடத்தை புனையும் : தனது நோக்கம் நிறைவேறியவுடன் அந்த வேடத்தை கலைத்து விடும் என்பது நாம் அறிந்தே !
தேர்தல் முடிந்து 78.2 சத உத்திரவு வரும்வரை ஒற்றுமை வேடம் புனைந்த BSNLEU, தற்போது அந்த வேடத்தை கலைத்து விட்டு போரம் அமைப்பை தூக்கி பரண் மேல் வைத்துவிட்டதாக தெரிகிறது.
காலாவதியாகிப் போன தந்தி சேவையை தொடர வேண்டும் என்று கோரி கடைசி கடமைக்காக ஒரு தர்ணா தன்னந்தனியே !!
கல்கத்தா செயற்குழுவில் கூடி 8 ஆண்டுகளாக தனியே பேசி தீர்க்க முடியாத பிரச்னைகளுக்காக மீண்டும் ஒரு போராட்ட திட்ட அறிவிப்பாம் !!!
நேற்றுவரை ஒன்று படுவோம்! போராடுவோம் !! இனி ஒன்றாகத்தான் போராடவேண்டும் என்றெல்லாம் கூறியவர்கள், தற்போது திடீரென்று தனி ஆவர்த்தனம் நடத்துவது ஏன் ?
BSNLEUவிற்கு கண்ணை மூடிக் கொண்டு வக்காலத்து வாங்கும் நமது தலைவர்கள் சிந்திப்பார்களா ?
நன்றி: கோவை வலைதளம்

No comments:
Post a Comment