குரங்கு கையில் பூமாலை
குரங்கு கையில் பூமாலை என்பது ஒரு பழமொழி.......பூமாலை என்பது எல்லோரும் விரும்புவது. மிகவும் நறுமணம் மிக்கது.ஆனால் குரங்கு கையில் அது கிடைத்து விட்டால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.
அதுபோல சில நல்ல விஷயங்கள் ஒரு சிலரின் கையில் சென்று விட்டால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.
78.2 பிரச்னை அப்படித்தான். Fix it Right First Time என்று ஆங்கிலத்தில் சொல்வது போல 1-1-2007ல் லாபம் வரும்போது அதை வாங்காமல் கோட்டை விட்ட காரணத்தால் இன்று அது சின்னா பின்னமாகி விட்டது. முதலில் அரியர்ஸ் இல்லை என்று சொன்னார்கள், பிறகு அதற்கு HRA AND ALLOWANCES கிடையாது என்று சொன்னார்கள்..... தற்போது அது பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று சொல்கிறார்கள்......... இந்த உண்மைகளையெல்லாம் நாம் அம்பலப்படுத்தினால் ஒரு சிலருக்கு கோபம் வருகிறது. ஆனால் எட்டு ஆண்டு ஒரு சங்க அங்கீகாரம் என்பது நமக்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சொன்னால் வெட்கமடா ! சொல்லாவிட்டால் துக்கமடா !!
தகவல்: NFTE தென் சென்னை மாவட்டம்
No comments:
Post a Comment