FDI எதிர்ப்பு மாநாடு!
நிரம்பி வழிந்த 
நாயக்பவன்!!
NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் சார்பாக 
15/8/2013 அன்று நேரடி அந்நிய முதலீட்டுக்கு எதிரான மாநாடு எழுச்சியுற நடந்தது. 
தேசிய விடுமுறை என்ற போதிலும் மழைபெய்தவண்ணம் இருந்த போதிலும் நானூற்றுக்கும் 
அதிகமான தோழர்கள் தோழியர்கள் திரளாகப் பங்கேற்றது அனைவருக்கும் மகிழ்வினை தந்தது. 
FDI எதிர்ப்பு மாநாட்டிற்கு தோழர்.C.K.மதிவாணன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் 
M.K.ராமசாமி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைச் செயலர் S.C.போஸ் வரவேற்புரை 
ஆற்றினார். தோழர்கள் ஸ்ரீகுமார் (பொ.செ.AIDEF), ஜே.லட்சுமணன் (மா.செ.AITUC), 
எஸ்.லிங்கமூர்த்தி (மா.செ.FNTO), நாகராஜன் (பொ.செ.AIBOA), ஆர்.குணசேகரன் 
(மா.செ.BSNLDEU) , கு.பாலசுப்ரமணியன் (பொ.செ.மாநில அரசு பணியாளர் மகா சம்மேளனம்) 
கருத்துரை ஆற்றினர்.
FDI எதிர்ப்பினை மிகப்பெரிய அளவில் தொழிற்சங்கங்கள் காட்ட 
வேண்டும் என்ற பொதுவான கருத்து மாநாட்டில் 
எதிரொலித்தது.
தோழர்.சி.ரவி மாநிலப் பொருளாளர் மாநாட்டினை நன்றி கூறி 
முடித்து வைத்தார். 
.jpg)


 
No comments:
Post a Comment