Friday, 9 August 2013

என் குணம் appease அல்ல! போராட்டமே என நிரூபித்த தலைவன் தோழர் CKM




From Kanchipuram Website
இன்று மதியம் சென்னை தொலைபேசியின் முன்னாள் தலைமை மேலாளர் திரு.M.P.வேலுச்சாமி அவர்களின் வீட்டை CBI அதிகாரிகள் திரு.தயாநிதி மாறன் வீட்டிற்கு 323 ISDN இணைப்புகள் வழங்கிய புகார் சம்மந்தமாக சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு தஸ்தாவேஜ்களை கைப்பைற்றினர். வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
     2011 அக்டோபரில் நம்முடைய மாநிலச் செயலர் தோழர்.C.K.மதிவாணன் தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். எதற்காகத் தெரியுமா? தயாநிதி மாறன் வீட்டிற்கு சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 323 ISDN இணைப்புகள் சம்மந்தமான CBI விசாரணை துவங்கிய நேரத்தில் திரு.வேலுச்சாமி பணி ஓய்வில் சென்றபிறகும் CGM அலுவலகத்திற்கு வந்து முக்கியமான கோப்புகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை அப்போதைய பொது மேலாளர் திரு.A.சுப்ரமணியன் கண்டும் காணாமல் அனுமதித்தார். இந்த மோசடியை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற நிர்வாகம் 70க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு FR17-A விதியின் கீழ் சேவை முறிவு தண்டனையை தந்தது. தோழர். C.K.மதிவாணன் மீது மட்டும் CDA விதி 36 பிரிவின் கீழ் விசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு அவர் பணிஓய்வு பெற்றபோது ஓய்வுகால பலன்கள் கிடைக்காதவாறு முடக்கப்பட்டது.
     தோழர். C.K.மதிவாணன் 30/6/2013 பணிஓய்வு பெற்றபோதிலும் இன்றுவரை அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய ஓய்வுகாலப் பலன்கள் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
     எனினும் காலம் கடந்த பிறகாவது நமது குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை CBI –இன் இன்றைய Raid-உம் வீட்டை சீல்செய்த நடவடிக்கையும் நீரூபித்துள்ளன. அந்த வகையில் நமது மாநிலச் சங்கத்தின் முன்முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. இந்த பிரச்சனையில் வேறு எந்த அகில இந்திய சங்கமும் ஏன் எந்த மாநிலச் சங்கமும் எடுக்கத் துணியாத நடவடிக்கைகளை அசாத்திய துணிச்சலுடன் மேற்கொண்ட தோழர். C.K.மதிவாணன் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி இறுதியில் கிடைத்தே தீரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

No comments:

Post a Comment