Tuesday, 27 August 2013

வருந்துகிறோம் !  ஏமாளியான குற்றத்திற்கு............





தகவல்: தென் சென்னை NFTE    

தகவல்: காஞ்சி வலைதளம்
Govt to bring parity between pay scales of MTNL, BSNLàCLICKHERE

Wednesday, 21 August 2013

                                                                21-8-2013 
                                 இலக்கிய பேராசான் 
                            ஜீவா 107வது பிறந்த நாள்

                                      

           தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் ; சென்னை மாகாணத்திற்கு 
 " தமிழ்நாடு " என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சட்ட சபையில் முழங்கியவர் ஜீவா.

" ஜனசக்தி "யை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பொறுப்பேற்று தமிழக அரசியலில் தடம் பதித்துச் சென்றவர் ஜீவா.

தரமான இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வதற்காக ' தாமரை "இதழை தொடங்கியவர் ஜீவா.

அனைத்து முற்போக்கு கலைஞர்களையும் ஒன்றிணைப்பதற்காக "தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் " என்ற அமைப்பை உருவாக்கியவர் ஜீவா.

    இயக்க கட்டுப்பாடு என்பதை கண்ணிண் மணிபோல காத்தவர் தோழர் ஜீவா. ஒருமுறை கட்சி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல எனக்கு மனமில்லை, ஆகவே கட்சி அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியை எனக்கு தாருங்கள் ; அதை செய்கிறேன் என்று சொல்லி பணியாற்றியவர் ஜீவா.

தேசபக்தர்களுக்கும் சுயமரியாதை சிந்தனையாளர்களுக்கும் பொதுவுடமையாளர்களுக்கும் இன்றும் கலங்கரை விளக்கமாக திகழ்பவர் ஜீவா.

நன்றி: NFTE கோவை

                               குரங்கு கையில் பூமாலை

                                               
 குரங்கு கையில் பூமாலை என்பது ஒரு பழமொழி.......பூமாலை என்பது எல்லோரும் விரும்புவது. மிகவும் நறுமணம் மிக்கது.ஆனால் குரங்கு கையில் அது கிடைத்து விட்டால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும். 

  அதுபோல சில நல்ல விஷயங்கள் ஒரு சிலரின் கையில் சென்று விட்டால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும். 

78.2 பிரச்னை அப்படித்தான். Fix it Right First Time  என்று ஆங்கிலத்தில் சொல்வது போல 1-1-2007ல் லாபம் வரும்போது அதை வாங்காமல் கோட்டை விட்ட காரணத்தால் இன்று அது சின்னா பின்னமாகி விட்டது. முதலில் அரியர்ஸ் இல்லை என்று சொன்னார்கள், பிறகு அதற்கு HRA AND ALLOWANCES கிடையாது என்று சொன்னார்கள்..... தற்போது அது பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று சொல்கிறார்கள்......... இந்த உண்மைகளையெல்லாம் நாம் அம்பலப்படுத்தினால் ஒரு சிலருக்கு கோபம் வருகிறது. ஆனால் எட்டு ஆண்டு ஒரு சங்க அங்கீகாரம் என்பது நமக்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

        சொன்னால் வெட்கமடா ! சொல்லாவிட்டால் துக்கமடா !!

தகவல்: NFTE தென் சென்னை மாவட்டம்

Tuesday, 20 August 2013



(மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்)
கட்டாயம் படிக்கவும், பகிரவும்.

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..?!

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .

தகவல்: தென் சென்னை மாவட்டம்


   USO FUND சுவாகா!சுவாகா!!


டாடாடெலி  சர்வீஸ் ராஜஸ்தான் மாநிலத்திற்கு
ஒதுக்கியUSO FUND பணத்தை கபளீகரம் செய்து விட்டது தெரிய வந்துள்ளது. அந்தபணத்தை ராஜஸ்தானின் பின் தங்கிய பகுதிகளுக்கு தொலைதொடர்பு வசதி செய்து தர அமைக்கப்பட்ட அமைப்பு ( CCA) டாடாடெலி சர்வீஸ் கம்பெனிக்கு தாராளமாக எதனையும் சரி பார்க்காமல் கொடுத்துள்ளது. இதனை சரி பார்க்க வேண்டிய  The P and T Audit Team, Jaipur இதனை கண்டுபிடித்து பெரிய அளவில் ஊழல், மற்றும் ஏமாற்றுவேலை நடந்திருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. 

DoT இதனை உடனடியாக இந்த கையாடலை  CBI வசம் ஒப்படைத்து இதன் மூலம் யார் யார் பயனடைந்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமேன கோருகிறோம்.
Courtesy:Karaikudi Web

Friday, 16 August 2013

FDI எதிர்ப்பு மாநாடு!
நிரம்பி வழிந்த நாயக்பவன்!!
NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் சார்பாக 15/8/2013 அன்று நேரடி அந்நிய முதலீட்டுக்கு எதிரான மாநாடு எழுச்சியுற நடந்தது. தேசிய விடுமுறை என்ற போதிலும் மழைபெய்தவண்ணம் இருந்த போதிலும் நானூற்றுக்கும் அதிகமான தோழர்கள் தோழியர்கள் திரளாகப் பங்கேற்றது அனைவருக்கும் மகிழ்வினை தந்தது. FDI எதிர்ப்பு மாநாட்டிற்கு தோழர்.C.K.மதிவாணன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் M.K.ராமசாமி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைச் செயலர் S.C.போஸ் வரவேற்புரை ஆற்றினார். தோழர்கள் ஸ்ரீகுமார் (பொ.செ.AIDEF), ஜே.லட்சுமணன் (மா.செ.AITUC), எஸ்.லிங்கமூர்த்தி (மா.செ.FNTO), நாகராஜன் (பொ.செ.AIBOA), ஆர்.குணசேகரன் (மா.செ.BSNLDEU) , கு.பாலசுப்ரமணியன் (பொ.செ.மாநில அரசு பணியாளர் மகா சம்மேளனம்) கருத்துரை ஆற்றினர்.
FDI எதிர்ப்பினை மிகப்பெரிய அளவில் தொழிற்சங்கங்கள் காட்ட வேண்டும் என்ற பொதுவான கருத்து மாநாட்டில் எதிரொலித்தது.
தோழர்.சி.ரவி மாநிலப் பொருளாளர் மாநாட்டினை நன்றி கூறி முடித்து வைத்தார். 





   
மாநில செயலரின் சுற்றறிக்கை  படிக்க

Thursday, 15 August 2013



               சிதைந்து  போன   கனவுகள்?

நாம் அறுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் 1947 வருடத்திலிருந்து ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுபற்றி சிறிது பரிசீலனை செய்வது நல்லது. சுமார் நம்மை ஐம்பது வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒருவேளை சோறு கூட இல்லாத ஏழை மக்களைப் பற்றி இப்போதுதான் நினைக்க ஆரம்பித்திருக்கிறது. 

நம் நாட்டின் பொருளாதாரம் டாக்டர்.மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் வழிகாட்டுதலில் மிக மிக மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஒருகிலோ வெங்காயத்தின் விலை கிலோ எண்பது ரூபாயும் வார வாரம் பெட்ரோல் டீசல் விலையேற்றமும் அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் விலையும் சாதாரண மனிதனை கடுமையாக பாதித்துள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்த 1947-இல் ஒருரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு சமமாக இருந்த நிலைமை மாறி இன்று ஒரு டாலர் அறுபத்திஒரு ரூபாய்க்கு ஆகி உள்ளது. 

இருபது வருடத்திற்கு முன்பு திரு.நரசிம்மராவ் அவர்களால் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நம்மை சொர்கத்திற்கே அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று ஏழைக்கும் பணக்காரணக்கும் உள்ள இடைவெளி பெரிதானதுமட்டுமல்லாமல் வேலையில்லா திண்டாட்டம் நம்மை பயமுறுத்துகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால் ஏழை மேலும் மேலும் பிச்சைகாரனாகவும் பணம் படைத்த பெரு முதலாளிகள் மேலும் மேலும் செல்வத்தை குவித்தவண்ணமும் உள்ளனர். இதுதான் நாம் காந்தி போன்ற தேசத் தலைவர்களால்  பெற்ற சுதந்திரத்தின் பலன்.

சுதந்திரத்தின் பலன் என்பது நம்முடைய நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்வை உயர்த்தி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வருவது நமது தலையாய கடமை ஆகும்.

நம்முடைய சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்க வந்துள்ள பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் நமது அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் இவற்றிலிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை  காப்பாற்றுவது நமது உடனடி வேலையாகும்.

--கட்டுரை : தோழர்.C.K.மதிவாணன், NFTE-BSNL , அகில இந்திய உதவி பொதுச் செயலர். 15/08/2013




Wednesday, 14 August 2013

பண்டிகை கால சலுகை(சுதந்திர தினம்-2013)

Full usage Value equal to MRP on Top-up Voucher/C TOP-UP/Flexi

TOP-UP with MRP of Rs. 200 to Rs 990.

Period of Offer 15.08.2013 to 24.08.2013.

Applicable for

TOP-UP of MRP Rs.200 to Rs.990 in Top-up voucher/C-TOP-UP/Flexi

TOP-UP for Tamil Nadu Circle & Chennai Telecom District.

Note: Wherever, the usage value offered with top-up voucher is more than the MRP, the higher usage val  
Holding of any agitational programme in the BSNL premises, viz dharna, demonstration etc guidelines-reg. see the co order.

Tuesday, 13 August 2013


ONGC  நிறுவனத்தில் VRS அறிவிக்கப்பட்டுள்ளது 

அதன் சில சிறப்பு அம்சங்கள்:

1.40 வயது அல்லது 15 வருட சர்வீஸ் .


2. EX-GRATIA தொகைஇதுவரை சர்வீஸ் செய்த வருடங்களுக்கு

 வருடத்திற்கு 60 நாள் சம்பளம் அல்லது மீதி இருக்கும் 

வருடங்கள் X 60 நாள் சம்பளம் எது குறைவு அந்த தொகை (Salary 

Means only Basic Pay + DA only)



மற்றபடி GPF, Leave Encashment, Commutation, கிராஜுவிட்டி 

 முதலியன வழக்கம் போல் தரபடும்.

தோழர்களே , இதேபோல் நமக்கும் வருமா? என்று கேட்டால் 

தெரியாது. நம்மை பொறுத்தவரை VRS அனைத்து சங்ககளாலும் 

கடுமையாக எதிர்க்கபடுகிறது ? 

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

       கிங் ஃபிஷெர்க்கு ஏற்பட்ட கதி !

   சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் King Fisher என்னும் விமான கம்பெனி பல்வேறு கவர்ச்சிகளில் இறங்கி ஏர் இந்தியா உட்பட மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ள முயன்றது. வங்கிகளிடம் தில்லுமுல்லு செய்து கடன் பெற்று இயங்கியது. 

  அதற்கு உதவ மன்மோகன் சிங் உட்பட பலர் முன் வந்தனர். ஆனால யாராலும் தில்லுமுல்லு செய்த அந்த நிறுவனத்தை காப்பாற்ற முடியவில்லை.

 இன்று கடன் கொடுத்த வங்கிகள் எல்லாம் அந்த கம்பெனியை முற்றுகை இடுகின்றன. தலைமை அலுவலகத்தையே கைப்பற்றியுள்ளன.

    பொய்மையும் ஏமாற்றுவேலையும்  நீண்ட நாள் நிலைக்காது.


                              Vijay Mallya

Saturday, 10 August 2013

                                 ஏற்கப்பட்ட நமது  நிலைபாடு !

                                  

      தனி ஆவர்த்தனம் ஏன்? தோழர்.மதிவாணன் கேள்வி?


சென்ற தேர்தல் முடிந்தவுடன் BSNLEU சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது.  அதில் இனி இரண்டு அங்கீகாரச் சங்கங்களும்  ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் முடிந்து கல்கத்தாவில் 7-9,ஜூன்- 2013 தேதிகளில் கூடிய  முதல் செயற் குழுவிலேயே தனித்த போராட்டத்திற்கான அறைகூவல் விடப்பட்டது. உடனடியாக தனி ஆவர்த்தனம் ஏன்? என்று கேள்வி கேட்டு ஒரு கட்டுரையை நாம் வெளியிட்டோம்.

 3-8-13 அன்று டெல்லியில் நடந்த கருத்தரங்கத்திற்கு வந்திருந்த  நமது அகில இந்திய சங்க நிர்வாகிகள்,  மாநிலச் செயலர்கள் 3,4-8-13 தேதிகளில் நடத்திய கலந்துரையாடலில் அதே கருத்து வலுவாக வெளிப்பட்டு தீர்மானமாக வெளிவந்துள்ளது  மகிழ்வை அளிக்கிறது.

அந்த கூட்டத்தில், இவ்வாண்டு  போனசை கண்டிப்பாக வழங்க வேண்டும், அது குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், 78.2 IDA இணைப்பின் போது, பெரும்பாலான  குரூப் D மற்றும்  RM ஊழியர்க்கு Stagnation காரணமாக மறுக்கப்படுவது அநியாயம், அதை சரிசெய்ய மாற்று வழி காண வேண்டும் என்று வலியுறுத்தியதும் சரியான முடிவுகளாகும்.

அதே சமயம் நமது துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன், டெல்லி கருத்தரங்கில் நாசூக்காக தெரிவித்தது போல,  BSNLEU தனது தனித்த போராட்ட அறைகூவலை கைவிட்டு விட்டு  ஒன்றுபட்ட போராட்ட அறைகூவலாக ஆக்கிட முன்முயற்சி மேற்கொள்ளும் வகையில் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், BSNLEU தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் தனித்து போராடுவது என்ற தீர்மானமும் வரவேற்கத்தக்கது.       
 -------------------------------------------------------------------------------------------------------------                      
                                  

தனக்கு தேவையென்றால்  BSNLEU ஒற்றுமை வேடத்தை புனையும் : தனது நோக்கம் நிறைவேறியவுடன் அந்த வேடத்தை கலைத்து விடும் என்பது நாம் அறிந்தே ! 

தேர்தல் முடிந்து 78.2 சத உத்திரவு வரும்வரை ஒற்றுமை வேடம் புனைந்த BSNLEU, தற்போது அந்த வேடத்தை கலைத்து விட்டு போரம் அமைப்பை தூக்கி பரண் மேல் வைத்துவிட்டதாக தெரிகிறது.

 காலாவதியாகிப் போன தந்தி சேவையை தொடர வேண்டும் என்று கோரி    கடைசி கடமைக்காக ஒரு தர்ணா தன்னந்தனியே !!

 கல்கத்தா செயற்குழுவில் கூடி 8 ஆண்டுகளாக தனியே பேசி தீர்க்க முடியாத பிரச்னைகளுக்காக மீண்டும் ஒரு போராட்ட திட்ட அறிவிப்பாம் !!!

நேற்றுவரை ஒன்று படுவோம்! போராடுவோம் !! இனி ஒன்றாகத்தான் போராடவேண்டும் என்றெல்லாம் கூறியவர்கள், தற்போது திடீரென்று தனி ஆவர்த்தனம் நடத்துவது ஏன் ?  

BSNLEUவிற்கு  கண்ணை மூடிக் கொண்டு வக்காலத்து வாங்கும் நமது தலைவர்கள் சிந்திப்பார்களா ?   


நன்றி: கோவை வலைதளம்

Friday, 9 August 2013

என் குணம் appease அல்ல! போராட்டமே என நிரூபித்த தலைவன் தோழர் CKM




From Kanchipuram Website
இன்று மதியம் சென்னை தொலைபேசியின் முன்னாள் தலைமை மேலாளர் திரு.M.P.வேலுச்சாமி அவர்களின் வீட்டை CBI அதிகாரிகள் திரு.தயாநிதி மாறன் வீட்டிற்கு 323 ISDN இணைப்புகள் வழங்கிய புகார் சம்மந்தமாக சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு தஸ்தாவேஜ்களை கைப்பைற்றினர். வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
     2011 அக்டோபரில் நம்முடைய மாநிலச் செயலர் தோழர்.C.K.மதிவாணன் தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். எதற்காகத் தெரியுமா? தயாநிதி மாறன் வீட்டிற்கு சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 323 ISDN இணைப்புகள் சம்மந்தமான CBI விசாரணை துவங்கிய நேரத்தில் திரு.வேலுச்சாமி பணி ஓய்வில் சென்றபிறகும் CGM அலுவலகத்திற்கு வந்து முக்கியமான கோப்புகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை அப்போதைய பொது மேலாளர் திரு.A.சுப்ரமணியன் கண்டும் காணாமல் அனுமதித்தார். இந்த மோசடியை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற நிர்வாகம் 70க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு FR17-A விதியின் கீழ் சேவை முறிவு தண்டனையை தந்தது. தோழர். C.K.மதிவாணன் மீது மட்டும் CDA விதி 36 பிரிவின் கீழ் விசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு அவர் பணிஓய்வு பெற்றபோது ஓய்வுகால பலன்கள் கிடைக்காதவாறு முடக்கப்பட்டது.
     தோழர். C.K.மதிவாணன் 30/6/2013 பணிஓய்வு பெற்றபோதிலும் இன்றுவரை அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய ஓய்வுகாலப் பலன்கள் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
     எனினும் காலம் கடந்த பிறகாவது நமது குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை CBI –இன் இன்றைய Raid-உம் வீட்டை சீல்செய்த நடவடிக்கையும் நீரூபித்துள்ளன. அந்த வகையில் நமது மாநிலச் சங்கத்தின் முன்முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. இந்த பிரச்சனையில் வேறு எந்த அகில இந்திய சங்கமும் ஏன் எந்த மாநிலச் சங்கமும் எடுக்கத் துணியாத நடவடிக்கைகளை அசாத்திய துணிச்சலுடன் மேற்கொண்ட தோழர். C.K.மதிவாணன் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி இறுதியில் கிடைத்தே தீரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62ஆக உயர்த்த உள்ளதாக செய்தி. படிக்க

Thursday, 8 August 2013

அனைத்து முஸ்லீம் சமூகத்து தோழர்களுக்கும்


“ இரமலான் நல் வாழ்த்துக்கள் “
CHQ OFFICE BEARERS  அவசர கூட்டத்தின் முடிவுகள்::
03-08-2013 அன்று நமது அகில இந்திய நிர்வாகிகள் நம்முடைய உடனடி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்தினர்.: அவை
1.   பழைய போனஸ் பார்முலா மாற்றப்பட வேண்டும். ஒருமாத சம்பளம் கட்டாய போனஸ் தரப்படவேண்டும். BSNL நட்டம் என்பது நிர்வாகத்தின் பொறுப்பே தவிர போனஸை எக்காரணம் கொண்டும் லாபத்துடன் இணைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
2.   78.2 கிராக்கிபடி இணைப்பு 10/6/2013 அமுல்படுத்த்தியதில் நமது நான்காம் பிரிவு தோழர்களுக்கு சம்பளக்குறைவோடு ஊதிய பிடித்தமும் செய்துள்ளது. இது பெரும் பாரபட்சம் ஆகும். சில பேருக்கு ஊதிய உச்சத்தை (STAGNATION PAY) அடைந்துள்ளதால் எந்த பிரயோசனமும் இல்லை என ஏற்பட்டுள்ளது. இது நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இதற்கு ஒரு போராட்டத்தை நாம் செய்யவேண்டும்.
3.  30% ஊதிய நிர்ணயம் கிடைக்காத BSNL DIRECT RECRUIT தோழர்களுக்கு அது விரிவுபடுத்தப்படவேண்டும்.
இது ஊழியர்களுக்கான பொதுவான பிரச்சனை என்பதால் நாம் BSNLEU சங்கத்தையையும் கலந்து பேசி அவர்களோடு இணைந்து போராட்டம் செய்ய முடிவு செய்யவேண்டும். ஆனால் இதில் அவர்கள் உடன்படாவிட்டால் நாம் தனித்து போராட தயார் ஆக வேண்டும். போராட்டம் எத்தகைய வகையில் நடைபெற வேண்டும் என்பது வர இருக்கின்ற நமது அகில இந்திய செயற்குழுவில் முடிவு செய்திட வேண்டும்.


--தகவல்: சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்
1. மாநில செயலரின் சுற்றறிக்கை 28 படிக்க இங்கே சொடுக்கவும்

மாநில செயலரின் சுற்றறிக்கை 29 படிக்க இங்கே சொடுக்கவும்


NFTEயின் தேசிய செயற்குழு கூட்டம் ( NATIONAL EXCECUTIVE 

MEETING ) வரும் செப்டம்பர் மாதம் 24 & 25 ஆகிய

தேதிகளில் குஜராத் மாநிலம் ஜுனாகத் என்ற 

இடத்தில் நடக்க உள்ளது. மேலும் விபரம் அறிய இங்கே 

Wednesday, 7 August 2013

78.2% IDA இணைப்பினால் பென்சனில் மாற்றங்களை 

எற்படுத்த DOT  சில விளக்கங்களை கேட்டு BSNLக்கு 

கடிதம் அனுப்பியுள்ளது. படிக்க

Tuesday, 6 August 2013

CHQ NEWS
04-08-2013 : National Convention of Forum on revival of BSNL on 03-08-2013:- At Mavlankar Hall in New Delhi the National convention called by the Forum of BSNL unions/Associations was held under the Chairmanship of Com. Chandeshwar Singh. Nearly 1000 delegates took part in it from all over the Country. NFTE BSNL mobilized morethan 200 Comrades mainly from adjacent circles. Com. VAN. Namboodri, the convener introduced the declaration for the approval of the convention. Com. Gurudas Das Gupta, Com. Swadesh Roy, Com. B.N. Rai and Com. Thomas Jhon spoke respectively on behalf of AITUC, CITU, BMS and INTUC, Com. Uditraj, SC/ST leader also addressed the convention. All the General Secretaries of Union/Association in the forum spoke at the convention highlighting the issues for the survival of BSNL. Com. C.K. Mathivanan, Dy. G/Secy addressed the convention on behalf of NFTE-BSNL. In the end the convention approved the declaration unanimously. Now it is the duty of our circle/District secretaries to conduct the convention at their level on the revival of BSNL unitedly.


04-08-2013 : For kind attention of circle and District Secretaries: Circle and District Secretaries are requested to send details of RMs, Group ‘D’ and other staff to CHQ who have reached to the stagnation stage due to 78.2% IDA fixation benefit by 15th August positively. 

Monday, 5 August 2013

                                           Latest CHQ News

3 ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்டது அநியாயம். நமது நிறுவனம் லாப நோக்கோடு மட்டும் செயல்படும் நிறுவனம் அல்ல..மாறாக சமூக நோக்கோடு செயல்படும் அரசு நிறுவனம். ஆகவே லாபத்தோடு போனசை இணைத்து, லாபம் இல்லை, ஆகவே போனஸ் இல்லை என்று மறுப்பது தவறு.  இவ்வாண்டு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனே துவக்க வேண்டும். அப்பொழுதுதான் தீபாவளிக்கு முன்பாக போனஸ் என்பது சாத்தியமாகும் என்று  BSNL CMDக்கு NFTE-BSNL தலைமை, கடிதம் மூலம் வற்புறுத்தி  உள்ளது.
r

04-08-2013 : Bonus to BSNL staff-Request for serious consideration. Letter No.-TF-7, Dated:-04-08-2013.  CLICK HERE

பயனுள்ள டெல்லி கருத்தரங்கம் ....சில காட்சிகள்








            அனைத்து சங்கங்களை உள்ளடக்கிய ஃபோரம் (Forum) சார்பாக, டெல்லியில் மாவ்லங்கர் ஹாலில் 3-8-2013 அன்று நடந்த BSNLஐ புத்தாக்கம் செய்வது என்ற நல்ல நோக்கத்தோடு கூட்டப் பட்ட அகில இந்திய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாகவும் எழுச்சிமிக்கதாகவும் அமைந்தது.

   NFTE-BSNL சங்கத்தின் பொதுச் செயலர்,தோழர் சந்தேஷ்வர் சிங்,  " ஃபோரம் "  அமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் அந்த கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

"ஃபோரம் "அமைப்பின் கன்வீனர் என்ற அடிப்படையில் தோழர் VAN நம்பூதிரி, அந்த கருத்தரங்கத்தில் விவாதித்து நிறைவேற்ற உத்தேசித்த எழுத்துபூர்வமான தீர்மானத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

   அனைத்து  மத்திய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றும்போது, BSNLஐ மீட்பதற்கான அனைத்து சங்க முயற்சிகளுக்கு தங்களது முழுமையான ஆதரவையும் தெரிவித்தனர்.

AITUC பொதுச் செயலர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா,M.P  வழக்கமான தனது எழுச்சிமிக்க உரையில் BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.  CITU சார்பாக  ஸ்வதேஷ் தேவ் ராய், BMS சார்பாக பொதுச் செயலர் தோழர்  B.N.ரே, SC/ST ஊழியர் நல சங்கத்தின் கான்ஃபெடரேஷன் தலைவர் தோழர் உதித் ராஜ்,உள்ளிட்டோர் உரையாற்றினர்.

BSNLல் உள்ள  அனைத்து சங்களின் தலைவர்களும் தீர்மானத்தின் மீதான தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

NFTE-BSNL சார்பாக நமது துணை பொதுச் செயலர் தோழர் C.K.மதிவாணன் உரையாற்றினார். 

அவர் தனது உரையில் சமீபத்தில் மத்திய அரசு அந்நிய முதலீட்டை டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளில் உயர்த்தியதன் பின்னணியை விளக்கினார். மத்திய அரசில் ராணுவ அமைச்சராக உள்ள திரு A.K.அந்தோனி, நாட்டின் பாதுகாப்பு கருதி அந்நிய முதலீட்டை எதிர்த்துள்ளதையும், டெலிகாம் துறையில் அந்நிய முதலீட்டின் காரணமாக அரசு நிறுவனமான BSNL/MTNLக்கு எந்த பயனும் இல்லை என்று திரு.அந்தோனி தனது கடிதத்தில் விவரித்ததையும் எடுத்துரைத்தார்.அதையும் மீறி மன்மோகன் அரசு  எடுத்த நடவடிக்கை தேச விரோதமானது என்று விளக்கினார். 

டெலிகாம் துறையில் அந்நிய முதலீட்டை100 சதமாக உயர்த்தியதால், தனியார் கம்பெனிகள் மேலும் நிதி பெற்று வளர வைப்பதும், அதே சமயம் நமது அரசு நிறுவனங்களை நிதி பற்றாகுறை காரணமாக தவிக்க வைப்பதுமே அரசின் கொள்கை, அதனை எதிர்த்து அனைத்து சங்கங்களும் சமரசமற்று போராட வேண்டும் ; மேலும் ஃபோரம் தலைமை, தற்போது விடுபட்டுள்ள மற்ற சங்கங்களையும் இந்த அமைப்பில் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

   மேலும், வங்கித் துறையில், ஃபோரம் அமைக்கப்பட்ட பிறகு, அனைத்து போராட்டங்களும் அந்த ஒன்றுபட்ட ஃபோரம் சார்பாகவே நடத்தப்படுகின்றன. ஆனால் நமது பகுதியில் ஃபோரம், யுனைட்டட் ஃபோரம், ஜாயிண்ட் ஃபோரம் என்று அடிக்கடி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடக்கும் செயல்களை தவிர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.    நிர்வாகத்தின் சார்பாக ஒரு பிரதிநிதியை அழைத்து இருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்  என்று தெரிவித்தார்.  


   BSNLஐ புத்தாக்கம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கோரும்  விரிவான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களில்  ஒன்றுபட்ட  கருத்தரங்கத்தை  நடத்து 
முடிவெடுக்கப்பட்டது

Thursday, 1 August 2013

மத்திய அரசு ஊழியர்கள் ஜுலை முதல்
 10% DA  உயர்வு.

தற்போது பெறுவது   = 80%

 DA  உயர்வு          = 10%


ஜுலை முதல்        = 90%

**************************************************
பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகின்றன.
                  நீரா ராடியா "டேப் லீக்' குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? 
                                   வருமானவரித் துறைக்கு குட்டு !!
"அமைச்சரவை உருவாக்கம் குறித்து ராஜா, கனிமொழியிடம் பேசினேன்': நீரா ராடியா

புதுதில்லி:

"2ஜி' வழக்கில் தொடர்புடைய அரசியல் தரகர் நீரா ராடியாவின், தொலைபேசி உரையாடல் பதிவுகள், வெளியானது குறித்து, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. "2ஜி' வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' முன், சி.பி.ஐ., அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறியதாவது:


இவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன், நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்களின் பதிவின் மூலம், உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றப் பின்னணி உள்ளது தெரிய வருகிறது. எனவே, இந்த உரையாடல் பதிவுகளை சாட்சியாக ஏற்று, மற்றவர்களையும் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்குடன் தொடர்புடைய பத்து வழக்குகளையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுப்படி நாங்கள் செயல்பட தயாராக உள்ளோம். இவ்வாறு, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் வெளியானது குறித்து, வருமான வரித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த உரையாடல்களை வைத்து பார்க்கும்போது, பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எனவே, அனைத்து விஷயங்களையும் ஆராய வேண்டியிருப்பதால், நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கிறது. இதுபற்றி கேள்வி எழும்போது, நாங்கள் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவோம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

நன்றி: கோவை வலைதளம்