பட்டினி போர்
நிர்வாகத்தின் நியாயமற்ற போக்கை கண்டித்து சென்னை
மாநிலச் செயலாளர் சி.கே.மதிவாணன் திங்கள்கிழமை 30-12-2013 காலை 9 மணியிலிருந்து பட்டினி போராட்டத்தை
துவங்குகிறார்.
நிர்வாகம் 16/12/2013-ல் நடத்திய பேச்சு
வார்த்தையின் போது ஒப்புக்கொண்ட அம்சங்களை கூட நிறைவேற்றாமல் காலம்கடத்தும்
போக்கினை இன்று 28/12/2013 கூடிய மாநிலச் செயலகக் கூட்டம் ஆழமாக பரிசீலத்ததில்
நிர்வாகம் மாற்றுச் சங்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் பல
நிர்வாகிகளாலும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, நியாயம் காண நிர்வாகம் ஒப்புக்கொண்ட
பிரச்சனைகளில் தீர்வுகாண மாநிலச்செயலாளர் சி.கே.மதிவாணன் புரசைவாக்கம் தலைமை பொது
மேலாளர் அலுவலகத்தில் திங்கள் காலை 9 மணி முதல் பட்டினிப் போராட்டத்தை துவங்கத்
தீர்மானிக்கப்பட்டது.
தோழர்கள் அனைவரும் போராட்டத்தை ஆதரித்து
வெற்றி பெறச் செய்ய CGM அலுவலத்திற்கு பெரும் திரளாக வர அன்புடன்
வேண்டுகிறோம்.
சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்.
No comments:
Post a Comment