வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம்
பாதுகாப்பு செலவை சரிகட்ட வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம் செய்யப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.
FILE
|
பெங்களூரில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் 'கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன.
இது வங்கிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூடுதல் செலவை வங்கிகள் ஏற்க தயங்குகின்றன. எனவே அந்த செலவை வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.
தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.
இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
No comments:
Post a Comment