Saturday, 21 September 2013

 Task before us in Junagath CWC Meet !!

                                       



நம்முன்னே இருக்கும் சவால்கள்:
தோழர்களே, ஜுனாகத்தில் நமது அகில இந்திய செயற்குழு நடைபெறும் சூழலில் நம்முன்னே உள்ள சவால்கள் பற்றி நாம் உடனடி சிந்தித்து செயல்பட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அங்கீகார தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் அங்கீகாரத்திற்கு வந்தால் எம்ளாயிஸ் யூனியன் போட்ட போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த வருடம் எப்படியும் போனஸ் பெற புது உடன்பாடு போடப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டது. பூஜா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் நாம் போனஸை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.மிக மோசமான  போனஸ்ஒப்பந்தம் போட்டுவிட்டு அதனை மறக்கச் செய்ய தாங்கள் பெற்றுத் தருவோம் என கூறிக்கொண்டு அதற்கான ஒரு போலி போராட்டத்ததை வரும் 27/09/2013 நடத்த நம்பூதிரி அணியினர் தயாராகிவிட்டனர். அகில இந்திய செயற்குழுவில் மூன்று வருடமாக BSNLEU  சங்கத்தால் மறக்கடிப்பட்ட போனஸை நாம் பெற்றுத் தர போராட்டம் உட்பட சரியான முடிவுகளைஎடுக்க வேண்டும்.

12/06/2012 போட்ட 78.2 கிராக்கிப்படி இணைப்பின் ஒப்பந்தத்தால் அதன் பயன் 01/01/2007 இலிருந்து கிடைப்பதற்கு பதில் நாம் 10-06-2013 இலிருந்துதான் பெற்றோம். இது மாபெரும் அநீதி.  குறைந்தபட்சம்  12/06/2012 க்கு பிறகு பதவி ஓய்வு பெற்றவர்களாவது இதனால் பயன் அடைய வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அதிகபட்ச ஊதிய உயர்நிலையை அடைந்த நான்காம் பிரிவு தோழர்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. இந்த பாதகத்தை களைய இந்த செயற்குழு சரியான போராட்டத்தை வடிவமைக்க வேண்டும்.

நமது இலாகாவின் நிதிநிலைமை மிக மோசமான சுழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுவும் தொலைதொடர்பில் 100 சதவீதம் அந்நிய முதலீடு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதால் அதன் நேரடி பாதிப்பு நமக்குதான்.  மத்திய அரசின் இந்த முடிவுகள் BSNL/MTNL இவைகளை அதல பாதாளதிற்கு தள்ளிவிடும்.இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

நம்தலைமீது எப்போதும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதுதான் VRS. மேலும் மாதா மாதம் சம்பளம், GPF இவை தடையி ல்லாமல் நாம் பெற வேண்டும். நம்முடைய வேலை பாதுகாப்பு மற்றும் பென்ஷன் இவை இரண்டிலும் நாம் எந்த சமரசமும் செய்யக் கூடாது.

நாம் அனைவரும் மேற்கூறிய விசயங்களில் கவனம் செலுத்தி சரியான முடிவு எடுக்க ஜுனாகத்தில் சந்திப்போம தோழர்களே.

-----------------------------------------------------------------------------------------------------------
As  we are preparing to meet in our National Executive Committee meeting next week at Junagath. It is pertinent to think about our tasks. During the last verification NFTE-BSNL promised to the Employees atleast to get minimum Bonus for this year by changing THE FAULTY Bonus formula agreed upon by BSNLEU  if NFTE-BSNL obtains the status of a recognized union. Now that the Festive/ Pooja season is fastly   approaching we cannot  keep silence over this  crucial issue of Bonus as our rival union has started some sort of agitation and slated for a Day’s strike on 27/09/2013 for many issues including the Bonus. It is our bounded duty to get back the right to Bonus to our Employees which was denied to them for the last 3 years.
Eventhough the agreement signed on 12/06/2012 was faulty on many counts due to our persistent effort and unity we could get the implementation of 78.2% IDA merger with effect from 10/06/2013. However the management has betrayed the union/ Associations by not extending the same benefit to people who have retired since 01/01/2007. This is unacceptable and discriminatory. Atleast we should try to get the benefit extended to the Employees who have retired after 12/06/2012 when the agreement was signed. Further the stagnation among the Gr.D Employees is to be addressed immediately.

      The financial position of the  of the BSNL is not in very good position. Payment of salary/ GPF are not being paid on due dates. It is our duty to strengthen   and protect the financial base of our company. It is our the financial base of our company.  In this connection we have to oppose the resent hike off FDI up to 100%  in telecom sector. This policy of Central Govt will surely encourage and help the Private telecom companies where as the BSNL/MTNL companies will face further difficulties.
 The retrenchment policies  in the form of VRS is always hanging over on our head. We cannot accept the wrong agreement of the Management/Govt that only by sending out more than  a lakh workers BSNL can survive. We have to build broad based unity for facing the challenges and to protect the rights of our Employees.  Job security, Govt Pension  are the two important rights of our Employees on which no compromise is possible. Let us meet and decide to advance both our Union and the interest of the Employees.
       
                                                                      C.K.Mathivanan,Dy GS
****************************************************************************************************
     பேரெழுச்சியுடன் நடந்த தூத்துக்குடி NFTE-BSNL 
              மாவட்டச் சங்க அலுவலக திறப்பு விழா



சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்



மாவட்டச் செயலர் தோழர் பாலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்
















No comments:

Post a Comment