Saturday, 28 September 2013

ஜுனாகாத் செயற்குழு


24/09/2013 & 25/09/2013 இரு தேதிகளில் நமது அகில இந்திய செயற்குழு குஜராத்தில் உள்ள ஜுனாகத்தில் சீரும் சிறப்புடன் நடைபெற்றது. தவிர்க்கமுடியாத காரணங்களால் நமது அகில இந்திய தலைவர் இஸ்லாம் அகமது கலந்து கொள்ள முடியவில்லை. மரபுப்படி உதவித் தலைவர் சித்ராபாசு தலைமை ஏற்றார். நமது பொதுச் செயலர் சி.சிங் அஜண்டாவை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கூட்டத்தில் அனைத்து மாநிலச் செயலர்களும், செயற்குழு உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்றனர். குஜராதி மாநிலச் செயலர் தோழர்.பாட்டியா கூட்டத்தின் ஏற்பாட்டை மிகச் சிறப்பாக செய்திருந்தார்











அனைத்து மாநிலச் செயலர்கள் தாங்கள் பேசும்போது தோழர்.மதிவாணன் மீது நிர்வாகத்தால் ஏவப்பட்ட பழிவாங்குதல்களை கண்டித்து பேசினர். இனியும் தாமதம் செய்திடாமல் நமது அகில இந்திய தலைமை இதில் தலையிட்டு தீர்க்க வேண்டும் என அனைவரும் கூறினர்.

நமது உதவி பொதுச்செயலர் மதிவாணன் சுமார் ஒருமணிநேரம் உணர்ச்சிமிகு சொற்பொழிவை ஆற்றினார். ஊழலை எதிர்த்து சென்னை மாநிலச் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நிர்வாகத்தால் தாம் பழிவாங்கப்பட்டதாகக் கூறினார். அதனை விரிவாக எடுத்துரைத்துப் பேசினார். நாம் விழிப்பாக இல்லாவிட்டால நம்பூதிரி சங்கம் அவர்களது வளர்ச்சிக்கு நமது கூட்டமைப்பை பயன்படுத்தி கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்தார். இனி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புதான் (ஃபோரம்) பிரச்சனைகளை எதிர்த்து போராட முடியும் என்றார். அரசின் கொள்கை முடிவுகளான தனியார்மயம், அந்நிய முதலீடு, ஆட்குறைப்பு, பங்கு விற்பனை முதலியவைகளை நாம் மத்திய தொழிலாளர்கள் சங்கங்களின் ஒத்துழைப்போடுதான் எதிர்கொள்ளமுடியும் என்றார்.
இந்த செயற்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட 7வது ஊதிய கமிஷனை வரவேற்பதோடு நமது மூன்றாவது சம்பள மாற்றம் மற்றும் 50% கிராக்கிப்படி இணைப்பு இவை தரப்படவேண்டுமென வேண்டுகோள் விடுத்தது. அதேபோல தொலை தொடர்புத் துறையில் அந்நிய முதலீட்டை கண்டிப்பதுடன் அதுதனியாருக்குத்தான் பயன்படும் என்பதை சுட்டிக்காட்டியது.
அதேபோல இந்த செயற்குழு நம்முடைய போராட்டங்களுக்கான தயாரிப்பை வெளியிட்டது. போனஸ், 78.2% கிராக்கிப்படி இணைப்பு, ஊதியத்தில் உச்சநிலை அடைந்தவர்களுக்கு அதன் பாதிப்பை களைதல், 12/6/13 தேதி உடன்பாட்டை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம் 1/1/2007க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் அதன் முழுப்பயண் கிடைக்க வைத்தல், ஆர்ப்பாட்டம், தர்ணா மற்றும் வேலைநிறுத்தம் இவற்றில் அனைத்து சங்கங்களையும் இணைத்தல் ஆகியவை முடிவு செய்யப்பட்டது. இதனை தவிர்த்து தோழர்,.மதிவாணன் சில தீர்மானங்களை முன்வைத்தார். அவை:
   1.14 வருடங்களாக RM-களாக இருந்து கொண்டு TM-களாக பதவி உயர்வு பெறாதவர்களுக்கான காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டு அவர்கள் அதில் அமர்த்தப்பட வேண்டும்.
   2.  BSNL ஆனபிறகு புதிதாக வேலைக்குச்சேர்ந்தவர்கள் 10 வருட TSM சர்வீஸை முடித்தும் 1981 போடப்பட்ட திட்டத்தின் வழிகாட்டுதல்படி அனைவரும் RM-களாக நியமிக்கப்பட வேண்டும்.
     இந்த அகில இந்திய செயற்குழு அடுத்த அகில இந்திய மாநாட்டை மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் அல்லது ஜபல்பூரில் நடத்துவது என முடிவு செய்தது.

   நம்முடைய செயற்குழுவின் முடிவுகளை இந்தியாவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எந்தவித தாமதமும் இல்லாமல் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செயவதன் மூலமே நமது போராட்டங்களை செம்மையாக வெற்றிகரமாக நடத்த முடியும்.

வெளியீடு:
சென்னை தொலைபேசி மாநிலம், 26/09/2013


No comments:

Post a Comment