நம்முன்னே இருக்கும்
சவால்கள்:
அங்கீகார தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் அங்கீகாரத்திற்கு வந்தால் எம்ளாயிஸ் யூனியன் போட்ட போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த வருடம் எப்படியும் போனஸ் பெற புது உடன்பாடு போடப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டது. பூஜா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் நாம் போனஸை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.மிக மோசமான போனஸ்ஒப்பந்தம் போட்டுவிட்டு அதனை மறக்கச் செய்ய தாங்கள் பெற்றுத் தருவோம் என கூறிக்கொண்டு அதற்கான ஒரு போலி போராட்டத்ததை வரும் 27/09/2013 நடத்த நம்பூதிரி அணியினர் தயாராகிவிட்டனர். அகில இந்திய செயற்குழுவில் மூன்று வருடமாக BSNLEU சங்கத்தால் மறக்கடிப்பட்ட போனஸை நாம் பெற்றுத் தர போராட்டம் உட்பட சரியான முடிவுகளைஎடுக்க வேண்டும்.
12/06/2012 போட்ட 78.2 கிராக்கிப்படி இணைப்பின் ஒப்பந்தத்தால் அதன் பயன் 01/01/2007 இலிருந்து கிடைப்பதற்கு பதில் நாம் 10-06-2013 இலிருந்துதான் பெற்றோம். இது மாபெரும் அநீதி. குறைந்தபட்சம் 12/06/2012 க்கு பிறகு பதவி ஓய்வு பெற்றவர்களாவது இதனால் பயன் அடைய வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அதிகபட்ச ஊதிய உயர்நிலையை அடைந்த நான்காம் பிரிவு தோழர்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. இந்த பாதகத்தை களைய இந்த செயற்குழு சரியான போராட்டத்தை வடிவமைக்க வேண்டும்.
நமது இலாகாவின் நிதிநிலைமை மிக மோசமான சுழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுவும் தொலைதொடர்பில் 100 சதவீதம் அந்நிய முதலீடு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதால் அதன் நேரடி பாதிப்பு நமக்குதான். மத்திய அரசின் இந்த முடிவுகள் BSNL/MTNL இவைகளை அதல பாதாளதிற்கு தள்ளிவிடும்.இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
நம்தலைமீது எப்போதும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதுதான் VRS. மேலும் மாதா மாதம் சம்பளம், GPF இவை தடையில்லாமல் நாம் பெற வேண்டும். நம்முடைய வேலை பாதுகாப்பு மற்றும் பென்ஷன் இவை இரண்டிலும் நாம் எந்த சமரசமும் செய்யக் கூடாது.
நாம் அனைவரும் மேற்கூறிய விசயங்களில் கவனம் செலுத்தி சரியான முடிவு எடுக்க ஜுனாகத்தில் சந்திப்போம தோழர்களே.
கட்டுரை: C.K.MADHIVANAN DEPUTY GENERAL SECRETARY, NFTE-BSNL,18-09-2013
No comments:
Post a Comment