Monday 28 October 2013

மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!



மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!

'பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மோடி பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள நியுயார்க் டைம்ஸ், பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியால் இந்தியாவை வழி நடத்த இயலுமா? என்று அலசியது.

ஆசிரியர் குழுவின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் "மோடி பிற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ, பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு என்றாலும் நாட்டின் ஏழ்மை மிகுந்த முஸ்லிம்கள் அங்கே தான் உள்ளனர் என்றும், குஜராத்தின் பொருளாதார நிலை சிறபாக இல்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

138 மில்லியன் முஸ்லிம்கள், சிறுபான்மையினர், மற்றும் தாழ்த்தப்பட்டவர் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

- டைம் பத்திரிக்கை மோடியைப் புகழ்ந்து எழுதியதற்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள், நியூயார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரைக்கு என்ன பதில் சொல்வார்கள்?

தகவல்: NFTE கோவை

No comments:

Post a Comment