Tuesday 1 October 2013

 14ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் BSNL 

நிறுவனம் !



    வாஜ்பாயி அரசு அவசரகோலத்தில் நமது துறையை அரசுத் துறையிலிருந்து பொதுத் துறை நிறுவனமாக மாற்றி 13 ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன. 

  ஒரிரு ஆண்டுகள் கூட தாங்காது என்று அச்சுறுத்தியது நம்பூதிரி ராமன் குட்டி கூட்டம்...... அரசு பென்சன் கிடைக்காது.... NFTE ஏமாற்றுகிறது என்று எழுதினார் தோழர் D.கோபாலகிருஷ்ணன்...

MTNL சம்பளம் வேண்டும்......... MTNL பென்சன் அரசு பென்சன் போன்றதே..... சொன்னவர் யாருமல்ல சாட்சாத் நம்பூதிரி.................

கால ஓட்டத்தில் எத்தனை பெரிய மாற்றங்கள்........... ராமன் குட்டி, D.கோபாலகிருஷ்ணன் இன்று அதே பென்சனர்கள் சங்கத் தலைவர்களாகி தோழர்கள் முத்தியாலு போன்றோர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.....

  MTNL ஊழியர்கள்,  BSNL ஊழியர்களைப் போல அரசு பென்சன் பெற சம்பளத்தை குறைத்துக் கொள்ள ஒப்பந்தம் போடுகிறார்கள்...

ஒரு சங்க அங்கீகாரம் என்ற நிலை மாறி இன்று இரண்டு சங்க அங்கீகாரம் என்பது சாத்தியமாயிற்று. 

       BSNLஐ காப்போம் என்று கூறி 8 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்றவர்களின் செயல்பாட்டின்மைக்கு பிறகு,  BSNL இன்று முச்சந்தியில் உள்ளது. (BSNL is in Cross Roads) வளர்ச்சிப் பாதையா இல்லையா என்ற் கேள்வி  எல்லோர் மனதிலும் எழுந்துவிட்டது.

  நாம் எப்போதுமே eternal Optimists.ஆம்... தொழிலாளர்களின் போராட்ட உணர்விலும், வருங்காலம் நமதே என்ற நம்பிக்கையோடும் செயலாற்றுபவர்கள்....

 வீழ்ந்தாலும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கை உணர்வோடு முன்செல்பவர்கள்.

      BSNLஐ மீட்போம், இழந்த அனைத்து சலுகைகளையும் ஒவ்வொன்றாய் மீட்போம் என்ற அபரீத நம்பிக்கையோடு 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம். 

No comments:

Post a Comment