Tuesday 30 July 2013

திருவண்ணாமலையில் 30/07/2013 அன்று மத்திய தொழிற் சங்கங்களின்

 சார்பில் கட்டுமான, உடலுழைப்பு நலவாரியங்களை சீரமைத்திட கோரி

மாநிலம் தழுவிய மறியல் போர் சிறப்பாக நடைபெற்றது. இதில் AITUC, INTUC மற்றும்  HMS ஆகிய மத்திய தொழிற் சங்கங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டன. தலைமைக்குழுவாக தோழர்கள்

V.முத்தையன்-AITUC,  G.ராஜேந்திரன்-INTUC, A. ரவி-HMS 

 செயல்பட்டனர். தோழர்கள் கி.ஜீவானந்தம்-AITUC, இரா.தங்கராஜ்-மா.செ. 

CPI, J.சிவராமன்-INTUC, S.தேவராஜ்-HMS  ஆகியோர் மறியல் கண்டன 

உரையினை ஆற்றினார்கள்.

NFTE சார்பில் தோழர்கள் டி.எம்.பழநி, எம்.அய்யோத்தி, இரா.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நன்றியுரை: தோழர். இரா.செல்வராஜ் செயலாளர், தி.மலை நகர AITUC 

தொழிற்சங்க கூட்டமைப்பு.




















Monday 29 July 2013

28/07/2013 அன்று நடைபெற்ற மதுரை மாவட்ட மாநாட்டில் கீழ்கண்ட 

தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்       : தோழர். K. முருகேசன்

செயலர்        : தோழர்  S. சிவ குருநாதன்

பொருளர்      : தோழர்  R. ராஜேந்திரன்.


புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்.
வேலூர் மாவட்ட செயலரின் வேண்டுகோள்.

78.2  சத  கிராக்கிப்படி  இணைத்த  ஜூலை  மாத   ஊதியத்திலிருந்து  நன்கொடை: 

தோழர்களே,   உறுப்பினர்  சரிபார்ப்பு  தேர்தலின்  போது  நமது  சங்கம்  அளித்த  

வாக்குறுதிகளில்  மிகவும்   பிரதானமானது   78.2  சத  கிராக்கிப்படி  இணைப்பு.  அதற்கான  

உத்தரவை  வெற்றி  பெற்ற  இரண்டே  மாதத்தில்  பெற்றுள்ளோம்.   இந்த  நேரத்தில்  

நமது  அகில  இந்திய  சங்கம்  அறிவித்துள்ள  ரூ.200  நன்கொடையை  முறையாக  

வசூலித்து  அனுப்புவது  நமது  கடமை. 


மாவட்ட  மாநாடு  நடத்திட  உதவும்  வகையில்  கிளைகள்  கூடுதலாக  ரூ.100-ஐயும்  

சேர்த்து,  ஒவ்வொரு  உறுப்பினரிடமிருந்தும்  ரூ.300  வசூலித்து  தங்கள்  பங்கு  ரூ.50  

போக மீதி  தலா  ரூ.250  வீதம்  ஆகஸ்ட்  13  அன்று  திருப்பத்தூரில்  நடைபெறும்  நமது  

மாவட்ட  செயற்குழுவில்  அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.


CBI concludes its enquiry into BSNL lines to Maran's residence

PTI: New Delhi, Mon Jul 29 2013, 16:59 hrs 
Maran

CBI has concluded its two-year-long preliminary enquiry into allegations that over 300 telephone lines were allotted to the residence of DMK leader Dayanidhi Maran in Chennai and illegally linked with a television channel owned by his brother Kalanithi.
The agency which had registered the enquiry into allegations in 2011 has now wrapped up its probe and a decision on whether to file an FIR or close the matter would be taken soon by the senior officers of the CBI, the sources said.
Although the agency has gathered material which indicates the potential of converting the enquiry into a regular case, a final decision would be taken after consulting the legal department and senior officers, they said.
These 323 residential lines were allegedly in the name of BSNL General Manager connecting the Boat House residence of Maran with office of Sun TV through a dedicated underground cable during his tenure as Telecom Minister, the sources said.
The probe had started in 2011, nearly four years after getting complaints that a 'virtual' telephone exchange was set-up at the then Telecom Minister's for facilitating data transfer from Sun TV.
The agency had recommended action to the then Telecom Secretary in 2007 but the department allegedly did not give its nod in the case, they said. Finally, CBI had filed a preliminary inquiry in the case in 2011, they said.
The sources said these lines were not ordinary telephone lines but costly ISDN, capable of carrying huge data thus facilitating faster transmission of TV news and programmes across the globe.
CBI in its report to the Telecom Secretary had alleged that these lines were for use of large commercial enterprises to meet special needs such as video conferencing or transmission of huge volume of digital data for which heavy fee is charged but Sun TV got it for free.   NEWS FROM : THE INDIAN EXPRESS.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை வீட்டில் முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்துள்ளது.தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டி.வி.க்காக இந்த தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியக் குற்றச்சாட்டு.இது தொடர்பாக 2011-ம் ஆண்டில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதா அல்லது வழக்கை முடித்து விடுவதா என்பதை சிபிஐ உயரதிகாரிகள் விரைவில் முடிவு செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கின் முக்கிய ஆவணங்களை முன்னாள் CGM அழிக்க முயன்றபோது அதை அம்பலமாக்கி போராடியதால்தான் நமது துணைப் பொதுச் செயலர் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள்  இலாகா விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு  இதுவரை பென்சன் மறுக்கப்பட்டுள்ளதையும் , தினகரன் பத்திரிக்கை தொழிற்சங்க தேர்தலின் போது அவர்மீது அவதூறு செய்தியை பரப்பியதையும்   நினைவு கூற விரும்புகிறோம் ! 


                                  மகிழ்ச்சியான செய்தி






வேலூர் மாவட்ட  செயற்குழு

தோழர்களே !
நமது  மாவட்ட  சங்கத்தின்  செயற்குழு  13.08.2013  செவ்வாய்  அ ன் று  திருவள்ளுவர் 

திருமண  மண்டபம்  ( TND ), Railway Station Road, திருப்பத்தூரில்  நடைபெறும்.

நேரம்:  சரியாக  10.30  மணி  முதல்.

தலைமை  :  தோழர்  R.வெங்கடேசன்,  மாவட்டத்தலைவர்.

வாழ்த்துரை  :  தோழர்  P.சென்னக்கேசவன்,  மாநில  துணைச்செயலர்.

மற்றும்  நமது  மாவட்டச்சங்க  நிர்வாகிகள்,  தோழர்கள்.

  சிறப்புரை  :  தோழர்  R.பட்டாபிராமன் ,  மாநிலச்செயலர்.  

நன்றியுரை  :  தோழர்  M.செல்வராஜ்,  மாவட்ட  பொருளாளர்.


அனைவரும்  வருக  !
                                                                                           தோழமையுடன்,
K.அல்லிராஜா.

மாவட்டச்செயலர்


நன்றி: தினமணி 28/7/2013

Saturday 27 July 2013

                   2G.....3G......4G......அடுத்தது 5G

 அதற்கு இனவெறி இஸ்ரேலுடன் சேர்ந்து பணியாற்ற போகிறாராம் கபில் சிபல் ..   தொழில்நுட்பம் இஸ்ரேலுடையதாம்.......முதலீடும் சந்தையும் இந்தியாவுடையதாம்....... நான் அரிசி கொண்டு வ்ருகிறேன்.... நீ  உமி கோண்டு வா ....ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற கதையாய் உள்ளது அல்லவா !


  


India, Israel to jointly work for development of 5G technology

PTI Jul 24, 2013, 10.20PM IST
NEW DELHI: India and Israel have agreed to work jointly on development of fifth generation (5G) telecom technologies, sources said. The matter was discussed during the visit of telecom and IT minister Kapil Sibal to Israel last month, they said. Sibal and his Israeli counterpart Gilad Erdan in a meeting agreed that both the countries can cooperate on exploring the possibilities of standard formulation, development and manufacturing in the area of 4G and 5G telecom technologies.
"Israel has technology and innovation, India has the capital and market. The two areas which emerge out of discussion related to telecom were: reducing roaming charges between India and Israel and exploring the possibilities of standard formulation, research and development, and manufacturing in the area of 4G and 5G," a DoT official said. At present, Indian telecom operators are providing 2G, 3G and some 4G services.




No country in the world has 5G technology while some companies claim to have tested 5G technology. There have been claims by companies that 5G technology will be in place by 2020.
The versions of technology 2G, 3G etc are labelled on the basis of internet speed they offer on mobile devices. Technology experts believe 5G technology will enable people to have a fibre network like user experience on a wireless connection. It can provide speed of 10 gigabit per second internet speed, which is 100 times faster than the mobile technology used these days. the Indian government has started process to "constitute joint working group" to work in the area of 4G and 5G.



நன்றி: தினமணி 27/07/2013

லேண்ட் லைன் பகுதியில் அடுத்த தலைமுறை தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்கிறது BSNL !




BSNL தனது பழைய தொழில்நுட்பமான சுவிட்சிங்கிலிருந்து நான்காம் தலைமுறை நெட்வொர்க முறைக்கு மாற இருக்கிறது. இதன்மூலம் வருங்கால தொலைதொடர்பின் சவால்களை சந்திக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் மற்றும் சென்னை தொலைபேசியில் உள்ள அனைத்து இணைப்பகங்களும் இந்த முறைக்கு மாற்றப்படும். இதன் மூலம் நமது சந்தாதாரர்கள் அதிநவீன் தொழில் நுட்பத்தை பெற்று வாய்ஸ் மற்றும் அகன்ற அலைக்கற்றை ((voice quality and broadband) வசதியை பெறுவார்கள்.

இந்த தொழில்நுட்பம் மூலம் வீடு, அலுவலகம் மற்றும் ரோமிங் இவை ப்ராட்பேண்ட் அதி வேகத்தில் துல்லியமாக பெற இயலும். இது அகில இந்தியா முழுவதிலும் உள்ள நமது இணைப்பகங்களில் இன்னும் நான்கு வருடங்களுக்குள் செய்து முடிக்கப்படும்.
இதற்கான் வடிவமைப்பு நமது சீனாவின் ஹூவாய் கம்பெனிமூலம் பெறப்படும்.

சென்னை தொலைபேசியில் இரண்டு கட்டங்களாக 48 தொலைபேசி இணைப்பகங்கள்  NGN level-க்கு மாற்றப்படும் முதல் கட்டமாக. சுமார் 15 வருடங்களாக உள்ள பழைய தொழில்நுட்பத்துடன் வேலை செய்யும் 11 தொலைபேசி நிலையங்களில் குறிப்பாக கோடம்பாக்கம், கே.கே.நகர் மற்றும் மாம்பலம் பகுதியில் மாற்றப்படும்.

“சுமார் 55,000 தொலைதொடர்பு லைன்கள்  NGN தொழில் நுட்பத்திற்கு மாற்றப்படும்”. இது வரும் டிசம்பருக்குள் முடியும்.

இரண்டாவது கட்டத்தில் சுமார் மீதமுள்ள 37 தொலைபேசி இணைப்பகங்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு கொண்டு வரப்படும்.
மூன்று வருடத்திற்குள் சுமார் 1 மில்லியன் லேண்டலைன் இந்த நெட்வொர்கிற்குள் வரும்.

இதற்காக தமிழ் மாநில தொலைதொடர்பு வட்டம் சுமார் ரூ.11 கோடிக்கான ஆர்டரை கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 21 தொலைதொடர்பு மாவட்டங்கள் குறிப்பாக கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி இவை ஏழு மாதத்திற்குள் மாற்றப்பட்டு பயன்பெறும்.

தகவல்:The Hindu....26-07-13

Friday 26 July 2013

கோபுர வர்த்தகம் (TOWER BUSINESS ) குறித்து நமது மாநில செயலரின் சுற்றறிக்கை: படிக்க

Thursday 25 July 2013

TRAI impose Rs. 95,00,000.00/- penalty on BSNL

for not meeting the Benchmark in Basic Service

and Mobile services. To read CLICK here.

கனிமொழி மனு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு- குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மனு!ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு- குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மனு


 டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் அக்கட்சி எம்.பியுமான கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார். டாடா குழுமத்தின் யூனிடெக் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி தொலைக்காட்சிக்கு ரூ200 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது சிபிஐயின் புகார். இந்த வழக்கில் கலைஞர் டிவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த கனிமொழி கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கனிமொழிக்கு ஆதரவாக கலைஞர் டிவியின் நிர்வாகி அமிர்தம் ஏற்கெனவே சாட்சியம் அளித்திருக்கிறார். இதே வழக்கில் கனிமொழியின் பெரியம்மாவும் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவருமான தயாளு அம்மாளையும் சாட்சியம் அளிக்க சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் உடல்நலக் குறைவால் தம்மால் ஆஜராக முடியவில்லை என்று தயாளு அம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கலைஞர் டிவி நிர்வாகம் ரூ200 கோடி கடன் வாங்க முடிவு செய்த போது அங்கு நான் இயக்குநராக இருக்கவில்லை. நான் 2007ஆம் ஆண்டே அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன்..இந்த கடன் வாங்கும் முடிவு 2009ஆம் ஆண்டுதான் எடுக்கப்பட்டது. அப்போது இயக்குநர்களாக ஷரத்தும் தயாளு அம்மாளும்தான் இருந்தனர். இதனால் தமக்கும் ரூ200 கோடி பண பரிமாற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தம்மை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி கோரியுள்ளார். இந்த மனு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Tuesday 23 July 2013

ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் இனி கட்டாயம்!



புதுடெல்லி: ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளம் வாங்குபவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத சம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.

இந்தநிலையில், அவர்களும் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்கு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் முறை, எளிதானது, பாதுகாப்பானது. அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஆக. 3-ல் தில்லியில் மாநாடு :


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் ஆக. 3-ம் தேதி தில்லியில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளதாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலர் சி.கே. மதிவாணன் தெரிவித்தார். மாநாட்டில் போராட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  திருச்சியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
  எதிர்வரும் ஆக. 5-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவிகிதம் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நிறுவனத்தில் 74 சதவிகிதம் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  நாங்கள் அன்னிய முதலீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்துள்ளன. ஆனால், நமது சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு இதுபோன்ற முதலீடுகள் அனுமதிக்கப்பட வேண்டும். சீனாவில் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படிச் செய்வதில்லை. இது ஆபத்தானது.
தொலைத்தொடர்புத் துறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வகிக்கும் கேந்திரமான பாத்திரம் நீர்த்துப் போய்விடும். தனியார் நிறுவனங்களின் கொள்ளை பிஎஸ்என்எல் செல்போன் வருகைக்குப் பிறகுதான் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
   இப்போதும், கிராமப்புறங்களிலும், நாட்டின் எல்லைகளிலும், மலைப்பகுதிகளிலும்,  கடலோரங்களிலும், நக்சலைட்டுகள் சிக்கல் இருக்கும் பகுதிகளிலும் பிஎஸ்என்எல்தான் சேவை வழங்குகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
   சேவைக் குறைபாடு குறித்து பல்வேறு கேள்விகள் பிஎஸ்என்எல் முன் வைக்கப்படுகிறது. கேபிள் வழங்க மறுக்கிறார்கள். செல்போன் கோபுரம் அமைக்க ஓராண்டு ஆகிறது. ஆயிரம் இணைப்புகளுக்கு 114 ஊழியர்கள் இருந்த காலம் மாறி, இப்போது 1000 இணைப்புகளுக்கு வெறும் 6 ஊழியர்கள்தான் இருக்கிறார்கள். நெருக்கடியில்தான் இருக்கிறோம்.
 எனவே, எதிர்வரும் ஆக. 3-ம் தேதி தில்லியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலுள்ள அனைத்துத் தொழிலாளர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் போராட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்றார் மதிவாணன்.
  பேட்டியின்போது, சம்மேளனச் செயலர் ஜி. ஜெயராமன், மாவட்டச் செயலர் எஸ். பழனியப்பன், அதிகாரிகள்சங்க மாநிலத் துணைச் செயலர் செ. காமராசு ஆகியோர் உடனிருந்தனர்.
                         From Trichy Web site



The Communist Party of India deplores and disapproves the decisions of the Central Government to increase FDI cap in telecom, insurance, credit information and asset reconstruction companies and also to consider to increase the FDI cap in defence sector. companies and also to consider to increase the FDI cap in defence sector.This is a disastrous and desperate measure taken by the Congress 
led UPA-II government. The economy is already in bad shape. The value of rupee against dollar has declined to the lowest level. GDP growth rate has declined to less than 5%. Unemployment has increased, making the future of Indian Youth very bleak. Prices of essential commodities have shot up. Oil marketing companies are hiking the prices of diesel and petrol arbitrarily and frequently.   Congress led UPA-II government instead of reviewing its anti-people, neo-liberal policies, is relying upon FDI. After the multi-brand retail trade, now government has decided to open up all sectors including defence a sensitive sector and to increase the FDI cap in very strategic sectors like telecom. The country is yet to overcome the loot and losses due to the 2G spectrum scam. Now the 100% FDI in telecom sector will be disastrous not only in terms of economy but in terms of national security. After the disclosure of US spying into the affairs of other countries including India, it is a matter of serious concern.Therefore the CPI demands the government to withdraw its decisions. It also calls upon the people to resist the government’s moves strongly. 

இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் தோழர் சி.ராஜேஸ்வர ராவ் அவர்கள்.


ஜூன் 6, 1914ல் ஒரு மிகச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த அவர், காசி பெனாரஸ் இந்து பல்கலைக் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1931ல் விசாகப்பட்டினம்  மருத்தவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, படிப்பை உதறிவிட்டு சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  மார்க்சீய கருத்துக்களால் ஈர்க்கபட்ட அவர் கோடிக்கணக்கான தனது சொத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தார். இந்தியாவில் அந்நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற நிஜாமை எதிர்த்த தெலுங்கான ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். நெருக்கடியான கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பொறுப்பேற்று 1964 முதல் 1989 வரை  அதை வழி நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை அவரையே சாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பொது துறை நிறுவனங்கள் உருவாகக் காரணமானவர்.அந்நாளிலேயே கலப்பு திருமணத்தை  ஊக்குவித்தவர்.1994ல் காலமானார். அவரது நூற்றாண்டு விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப் பட்டு அவரது அளப்பரிய தியாகமும் தொழிலாளி வர்க்ககம் சுரண்டலில் இருந்து விடுபட முதிர்ச்சி நிறைந்த செயல்பாடும் நினைவு கூறப்படுகிறது.           

      
தோழர் சி.ராஜேஸ்வர ராவ் நூற்றாண்டு விழா திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.


தோழர்கள் தா.பாண்டியன், சி.கே.மதிவாணன் ஆகியோர் பங்கேற்று தோழர் சி.ஆர் அவர்களின் நற்பண்புகளை தன்னலமற்ற   போராட்ட குணங்களை எடுத்துரைத்தனர்.

Friday 19 July 2013

சி. கே. மதிவாணன் ஒரு போராளி. ஆம்

1.தேசத்தை காக்கும் போராளி – 2ஜி ஸ்பெக்ட்ரம்

2.தொழிலை காக்கும் போராளி – 323 ISDN தவறான இணைப்பு

3.மக்களை காக்கும் போராளி - விலைவாசியை கட்டுப்டுத்த தெருவில் இறங்கி போராடுகின்ற ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்கின்ற

தோழர் சி.கே.மதிவாணன் அவர்களுக்கு

திருவண்ணாமலை மாவட்ட CPI செயலாளர்

இரா. தங்கராஜ் மற்றும் தி.மலை BSNL தோழர்களின்

வீரம் செறிந்த வாழ்த்துக்கள்.



        எளிமையாய் ஆனால் கம்பீரமாய்.....
லட்சம் லட்சமாய் வசூலாகி விட்டது ! 
60 பவுன் தரப்போகிறார்கள் ! என்று                  
பிரச்சாரம் ஒருபுறம் !!
நிதி தராதே !! கூட்டத்திற்கு போகாதே 
என்று பிரச்சாரம் மறுபக்கம் !

  தடை கற்கள் உண்டென்றால், அதை தகர்க்க தடந்தோள்கள்  
எமக்கு உண்டென்று ! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும்  
ஆர்ப்பரித்தது பார் ! உண்மைத் தோழர்களின் திருக்கூட்டம் !!
                   














உணர்வுகளின் பிம்பமாய் தோழர் காமராஜ் தலைமை ஏற்க,
அமைதியின் திருவுருவம், ஆற்றலின் மறு வடிவமாம்
தோழர் எஸ்.பழனியப்பன் வரவேற்புரை நல்க, 
 திருச்சி மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க தேவர் ஹால் நிரம்பி வழிய,
நாடறிந்த நல்லோன் நல்லகண்ணு அவர்கள் 
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீ !
என்று வாழ்த்துப் பா இசைத்திடவே !! 

திருச்சி CPI மாவட்டச் செயலர் தோழர் இந்திரஜித்,
உன்னை சீதனமாய ஏற்க நாங்கள் தயார் என்று வரவேற்க,



உனது இரண்டாவது இன்னிங்க்ஸ், 
சிங்கம் இரண்டு போல மேலும் சிறப்பாய் அமைந்திடவே 
என்று  வாழ்த்துப்பா இசைத்திட்டார் !
உலக தொழிற் சங்க தலைவர் தோழர் எச். மகாதேவன் !


முழு மதியாய் நீ பிரகாசிக்க வேண்டும், 
உனது இரண்டாம் பகுதி பிறையினிலே,
என்று வாழ்த்துபா வாசித்தார் !!
நமது எளிய பாராளுமன்ற உறுப்பினர் தோழர் பொ .லிங்கம், M.P,



உன்னைப்போல் ஒரு மதிநுட்பம் மிக்க வீர தீரனுண்டோ என்று 
வியந்திட்டார் மக்கள் தொண்டன் குணசேகரன்,MLA அவர்கள்....



த்மிழக மூத்த முன்னோடிகள் R.V, ரகு, மாலி, பூபதி ஆகியோர்
போற்றிப் புகழ்ந்திடவே,










AIBSNLOA தலைவர் குணசேகர் அவர்களின் ,
மதி ! நீ எத்தனை வகையான  காற்று என்று 
அருமையான கவிதை வாசிக்க, 
மதியின் வழித்தோன்றல்கள், சென்னை எம்.கே.ராமசாமி,
புதுவை அசோகராஜ், கோவை சுப்பராயன், நெல்லை பாபநாசம்,
மதுரை தோழியர் பரிமளம், கடலூர் அன்பழகன்,
மற்றும் சம்மேளனச் செயலர் ஜெயராமன் அவர்களின்  உணர்ச்சிமிகு உரையோடு
சிறப்புற்றது  திருச்சி திருவிழா !!




உலகறிந்த சமத்துவத்திற்கான போராளி 
நெல்சன் மண்டேலா அவர்களின் ,
95வது  பிறந்த நாளை இனிதாக கொண்டாடியதும்
நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மத்திய அரசின்
FDI கொள்கைக்கு எதிராக
Declaring  War On FDI என்ற கொள்கை முழக்கத்தோடு
மேலும் சிறப்புற்றது திருச்சி விழா !!
இரண்டாவது இன்னிங்ஸில் மேலும்
சிறப்பாக விளையாடுவேன் என்று
ஏற்புரையில் முழக்கமிட்டார் !
தோழர் மதிவாணன் அவர்கள்..
விழா மலரை தோழர் RNK வெளியிட
தோழர்கள் GJ, திருச்சி சுந்தரம் பெற்றுக்கொள்ள   
தொழிலாளர் கல்வி மைய திருச்சி செயலர்
அருமைத் தோழர் பாலகுரு நன்றி கூற 
மன நிறைவோடு நிறைவுற்றது 
திருச்சி திருவிழா.....

கடும் எதிர்நீச்சல் போட்டு, 
போற்றுதலுக்குரிய செயலாற்றிய 
அனைத்து திருச்சி தோழர்களயும்
வணங்கி மகிழ்கிறோம் நாமெல்லாம் !!






அன்பினை வெளிப்படுத்தும் திருவண்ணாமலை தோழர்கள்.