Thursday 17 October 2013

குரூப்-1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்த தா. பாண்டியன் கோரிக்கை

First Published : 17 October 2013 03:44 PM IST
குரூப்-1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் 

என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் 

விடுத்துள்ளது. அதில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு எழுதுவதற்காக 

தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். குரூப்-1 தேர்வு 

எழுதுவதற்கான உச்ச வயது வரம்பு தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கு 

30 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி, எம்.பிசி, பி.சி பிரிவினருக்கு 35 ஆகவும் 

உள்ளது. 2001 முதல் 2013 வரையிலான சுமார் 12 ஆண்டு கால 

இடைவெளியில் 5 முறை மட்டுமே இந்த குரூப்-1 தேர்வு 

நடைபெற்றுள்ளது. ஆண்டு தோறும் இத்தேர்வு நடத்தப்படாததாலும், 

நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படுவதாலும், 

வயது வரம்பு மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும் 

ஏராளமானோர் குரூப்-1 தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சமூகநீதிக்கும், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் 

பெரிய பாதிப்பை உருவாக்குகிறது. கேரளாவில் குரூப்-1 தேர்வு 

எழுதுவதற்கான வயது உச்ச வரம்பு 50 ஆக உள்ளது. ஹரியானா, 

மேற்குவங்கம், அசாம், திரிபுரா, குஜராத் போன்ற மாநிலங்களில் வயது 

உச்ச வரம்பு 45 ஆக உள்ளது. எனவே, தமிழகத்தில் இட ஒதுக்கீடு உரிமை 

பெற்றோருக்கு இத்தேர்வை எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை 50 

ஆகவும், பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்தி நிர்ணயத்திட 

வேண்டுமென தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 

கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment