தமிழக அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 9 பொதுத் துறை
நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தீபாவளிப்
பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது
குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது.
அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற
விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும்
தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க
நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்
கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன்,
தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு
மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும்
தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு
கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய
பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும்,
லாபம் 2 ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ்
மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல்
மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு
பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும்
வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும்
'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ்
சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500
ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200
ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3
லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment