Sunday, 20 October 2013

                                   சரண்டர் உடன்பாடு !

  புதிய அங்கீகார விதிகளின் படி தேர்தல் முடிந்தவுடன் 19-04-13 அன்று BSNLEU சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தேர்தல் முடிவு 
ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. இனி BSNLEU,  NFTE-BSNL ஆகிய இரண்டு அங்கீகாரச் சங்கங்களும் இணைந்து ஊழியர் பிரச்னை 
-களையும் நிறுவனம் சார்ந்த பிரச்னைகளையும் எடுக்க வேண்டும் 
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால் ஒரு சில மாதங்கள் கழித்து கூடிய அதன் முதன் செயற்குழுவிலேயே அதற்கு மாறான முடிவை எடுத்தது. 

போனஸ், NEPP எனும் அரைகுறை பதவி உயர்வு திட்டத்தில் 
உள்ள குறைபாடுகளை நீக்குதல், உள்ளிட்ட பிரச்னைகளை 
முன்வைத்து த்ன்னிச்சையாக 4-09-13 அன்று ஒரு நாள் வேலை
 நிறுத்தம் என்று முடிவெடுத்தது.  

சம்பிராயத்திற்குகூடஒன்றுபட்டு போராடலாம் என்று கடிதம்  எழுதவில்லை....

            டெல்லியில் நடந்த Revival Of BSNL கன்வென்ஷனில் 
NFTE-BSNL சார்பாக உரையாற்றிய அகில இந்திய துணைப் 
பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன் அவர்கள் இது பற்றி 
நாசூக்காக எடுத்துரைத்தும் பலன் ஏதுமில்லை.

அதற்கான காரணம், ஊழியர் பிரச்னையில் BSNLEU, நமது சங்கத்துடன் சேர்ந்து போராட விரும்பவில்லை..... 

நமது சங்கத்துடன் சேர்ந்து வெளிப்படையான  பேச்சுசுவார்த்தைக்கு
BSNLEU தயாரில்லை...

மேலும் இணைந்து போராடி நமது பிரச்னைகளில்  ஏதும் முன்னேற்றம் வந்து விட்டால் அதன் பெருமை புதியதாக அங்கீகாரம் பெற்ற NFTEக்கு போய்விடுமே என்ற அச்சம் ஒற்றுமைக்கு உலை வைக்கிறது.  ..

புதியதாக தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டது என்று ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது. 

உடனடியாக, நமது NFTE சங்கத் தலைமை, போனஸ் உட்பட தேங்கிக் கிடக்கும் அனைத்து ஊழியர் பிரச்னைகளையும் தொகுத்து ஊழியர் 
தரப்பு செயலர் அபிமன்யு அவர்களுக்கு அனுப்பியது.

  இதில் அநியாயமான அடாவடி என்னவென்றால், இது நாள் வரை அபிமன்யு நிர்வாகத்திற்கு agenda item எதையும் தரவில்லை.

ஆனால் நாம் கொடுத்த பிரச்னைகளை தன்னிச்சையாக போராட்ட கோரிக்கையாக மாற்றி விட்டார்....

அவற்றை வென்று இருந்தால் பாராட்டலாம்... ஆனால் அவற்றை நிர்வாகம் நிராகரிக்க வைத்து விட்டாரே...இந்த ணுகு முறையை 
கண்டிக்காமல் இருக்க முடியுமா ! 

அல்பமாக நடந்து கொண்டதை அம்பலமாக்காமல் இருக்க முடியுமா ?

18-10-13 அன்று நிர்வாகத்தை சந்தித்த நமது சங்கத் தலைவர்கள், 
நேஷனல் கவுன்சிலை உடனடியாக கூட்டச் சொல்லி நிர்வாகத்தை வலியுறுத்திய போதுதான் இந்த உண்மை வெளிவந்தது.   

 தொடர்ந்து  தள்ளி வைத்த போராட்ட கோரிக்கைகள் குறித்த இறுதி பேச்சு வார்த்தை 18-10-13 அன்று நடைபெற்றுள்ளது.

 ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன, 

ஆனாலும் அனைத்து சங்கங்களையும் அழைத்து ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தாமல், பேச்சு வார்த்தையில் திருப்தி அடைந்து விட்டதாக கூறி BSNLEU போராட்டத்தை  காலவரையின்றி தள்ளி 
வைத்து விட்டது, BSNLEU மாறவேயில்லை என்பதை நிரூபிக்கிறது.

உதாரணத்திற்கு நிராகரிக்கப்பட்ட சில முக்கியான அம்சங்கள் :

 1. இவ்வாண்டும் மினிமம் போனஸ் கூட தர முடியாது

2. NEPP உத்திரவு வெளியான 23-3-2010க்கு முன்பு  போடப்பட்ட சராசரி 
   என்ற CR entryயை   NEPPக்கு  DPC கணக்கில்  எடுத்துக் கொள்ளக்
  கூடாது என்ற நியாயமான கோரிக்கை     நிராகரிக்கப்பட்டது.


3. பெரும்பான்மை RM/Group D ஊழியர்களை பாதிக்கும் Stagnation பிரச்னைக்கு     எந்த  தீர்வும் சாத்தியமில்லை

4.  LTC Medical Allowance மீண்டும் தர முடியாது.

 கோரிக்கைகள் rejected ,rejected என்று உள்ளதை எண்த்தான் முடியவில்லை ....  

ஒன்றுபட்டு போராடியிருந்தால் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் BSNLEUவின் One upman ship எனும் தான் ஏதோ தனித்து சாதித்து விட்டதாக காட்டவேண்டும் என்ற சுயநலபோக்கால் அது சாத்தியமில்லாமல் போயிற்று என்பதே யதார்த்தமான உண்மை 

தகவல்: NFTE கோவை

No comments:

Post a Comment