Friday, 17 May 2013

 


Kejriwal slams Sibal for taking up Vodafone case on Day I:

               ஆம் அத்மி கட்சி நிறுவனர் அரவிந் கேஜரிவால் சட்ட அமைச்சர் பொறுப்பு ஏற்ற மறுகணம் கபில் சிபில் வோடா போன் அரசுக்கு கட்ட வேண்டிய தொகை வரி ரூ11, 217/- ஐ பரஸ்பர சூமுக பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்று கூறியதை கண்டித்துள்ளார்.

முன்னால் இருந்த சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் இது குறித்து அமைச்சர் சிதம்பரம் கூறிய யோசனையை நிராகரித்ததோடு வோடாபோன் வரியை கட்டி ஆக வேண்டும் என்று நிர்பந்தித்தார். 
கபில் சிபில் அதனை பரிசீலிக்கலாம் என்று கூறியதற்கு அவரின் மகன் வோடாபோன் வழக்கிற்காக ஆஜரான வக்கீல் என்பதை தெளிவு படுத்தினார். இதிலிருந்து கபில் சிபில் எண்ணம் தமக்கு தெளிவாக புரிகிறது என் கேஜரிவால் மேலும் கூறினார். 
அடர்னி ஜெனரல் G.E. Vahanvati, வோடாபோன் அந்த தொகையை கட்டியே தீரவேண்டும் என்று கூறியும் அமைச்சர் கபில் சிபில் கட்ட வேண்டாம் என்று கூறுவது மகனுக்காகத்தான் என்றார். ஆதலால் யாராவது தொழில் அதிபர்கள் வரி செலுத்த வேண்டாம் என்றால் அவர்கள் சட்ட அமைச்சர் சிபிலை தொடர்பு கொள்ளலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.
அவருடைய நண்பரும் சக வக்கீலும் ஆகிய பிரசான்ந் பூஷன் வோடா போன் அரசிற்கு 2007 முதல் சுமார் பதினோறாயுரத்து இருநூற்று பதினேழு கோடி வரி பாக்கி வைத்துள்ளது என்று தெரிவித்தார்.

தகவல்: ஹிந்து பத்திரிக்கை 16-05-2013

No comments:

Post a Comment