ஓய்வு ஊதியம் வாங்கும் தோழர்களுக்கு இனி
அடையாள அட்டை
அடையாள அட்டை
இலாகாவிலிருந்து ஓய்வு பெற்ற அனைத்து ஊழியருக்கும் BSNL அடையாள அட்டை வழங்குவதற்கான உத்திரவை இன்று நிர்வாகம்
பிறப்பித்துள்ளது.
அதன்படி ஓய்வு பெற்றவர்கள் கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1. கடைசியாக அவர்கள் வேலை பார்த்த இடம், கேடர்,சம்பள விகிதம், மொத்த பணிக்காலம் இவை குறிப்பிடப்பட வேண்டும்.
2.அந்த அட்டையின் பின்புறம் அவர்கள் இரத்த வகை (BLOOD GROUP ) வீ ட்டு விலாசம்,
தொலைபேசி நம்பர் ஆகியன குறிப்பிடப்பட வேண்டும்.
3. கார்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
4. ஓய்வூதியர் அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்படும்.
5. அதில் அவர்களுடைய போட்டோ 10 x 8.25 CM அளவில் ஒட்டப்பட வேண்டும்.
6. அதில் இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி கையெழுத்திட வேண்டும்.
7. போட்டோ மற்றும் லேமினேஷன் செலவை ஊழியரிடம் பெற வேண்டும்
நன்றி: NFTE சென்னைதொலைபேசி மாவட்டம்
No comments:
Post a Comment