Thursday, 30 May 2013



இந்தியக்கம்யுனிஸ்ட் கடசியின் முதுபெரும் தோழர் செங்கம் ஆர்,ராமசாமி தனது 92வது வயதில், மே மாதம் 29 காலை 6 மணிக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.--ஜனசக்தி 30/5/2013

Wednesday, 29 May 2013


NFTE
வேலூர் மாவட்டம்

மாவட்டச்செயலரின்
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

இடம் : குடியாத்தம் தொலைபேசி நிலையம்
நாள் : 29.5.2013
காலம் : காலை 9.00 மணி முதல்

கோரிக்கைகள்:-

1. பேரணாம்பட்டு தொலைபேசி நிலையத்தில் பணி புரியும் ஒரே ஒரு நான்காம் பிரிவு SCSCபெண் ஊழியருக்கு அதிகாலை மற்றும் இரவுப்பணியை ரத்து செய்து, பகலில் பணிக்குக் கொண்டு வருதல்.
2. மூன்று மற்றும் நான்காம் பிரிவு SCஊழியர்களை மிரட்டும் தற்காலிகத் துணைக் கோட்ட அதிகாரியின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
3. குடியாத்தம் Groups பகுதிக்கு நிரந்தர துணைக் கோட்ட அதிகாரி நியமனம் செய்யப்படவேண்டும்.

தோழர். V .ஆறுமுகபாண்டி,
மாவட்டத் துணைத் தலைவர்,
மாவட்டச் செயலரின் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றுவார்.

கடைநிலை ஊழியர்களின் உரிமைகளை நிலை நாட்டிடத்
போராடும் மாவட்டச் செயலரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம் !

குடியாத்தம் நோக்கி அணி வகுப்போம் !

வாழ்த்துக்களுடன் தோழமையுள்ள,
K. அல்லிராஜா,
மாவட்டச்செயலர்.
28.5.2013



Monday, 27 May 2013



இரங்கல் செய்தி:

கடலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னோடியும், முன்னாள் மாவட்ட செயலருமான தோழர்.BR என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபட்ட B.ராஜேந்திரன்,PM அவர்கள் இன்று (27.05.2013) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


                                                                                                                                                                இவண்
NFTE INDOOR BRANCH
  THIRUVANNAMALI

Thursday, 23 May 2013





Com.C.K.Mathivanan,Dy.GS addressed two maasive demonstrations organised by the Forum of Unions and Associations  at Coimbatore, one at Main Telephone Exchange and another at PGM Office, Coimbatore-43. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கோவையில் Forum சார்பாக 78.2 பற்றி சென்ற ஆண்டு ஏற்பட்ட உடன்பாட்டை  அமலாக்க கோரி மெயின் தொலைபேசியகம், மேட்டுபாளையம்  ரோடு ஆகிய இரண்டு அலுவலகங்களில் 
ஆர்பாட்டம் நடைபெற்றது.

 மெயின் தொலைபேசி நிலையத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு நமது மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களும் PGM அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தோழர் C.P அவர்களும் தலைமை வகித்தனர். BSNLEU மாவட்டச் செயலர் தோழர் C.ராஜேந்திரன் வரவேற்று விளக்கவுரையாற்றினார்.

NFTE-BSNL சார்பாக தோழர் சி.கே. மதிவாணன், Dy.GS சிறப்புரையாற்றினார். 
BSNLEU சார்பாக   மாநிலத் தலைவர் தோழர் மாரிமுத்து, சேவா சங்கம் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் சிவராமன், AIBSNLEA  சார்பாக மாவட்டச் செயலர் தோழர் உஸ்மான் அலி, SNEA சார்பாக மாவட்டச் செயலர் தோழர் T.K. ப்ரசன்னன் ஆகியோர் உரையாற்றினர்.  

Courtesy:Coimbatore WEB 

Wednesday, 22 May 2013




14 உறுப்பினர்கள் கொண்ட JCM-ல் NFTE க்கு 5 இடங்களும்   BSNLEU

 சங்கத்திற்கு 9 இடங்களும் ஒதுக்குவதாக இன்று 21-05-13

 நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. 


இதனால் ஒரு இடமாவது கிடைக்கும் என்று கடைசிவரை

எதிர்பார்த்த FNTO  சங்கத்திற்கு சட்டப்படி எந்த இடமும் 

கிடைக்கவில்லை. 

Tuesday, 21 May 2013






சங்க அலுவலகம் உத்தரவு வெளியானது

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு சங்க அலுவலகம் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உடனடி வழங்கச் சொல்லி இன்று நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது.  16/05/2013 அன்று நமது சங்கத் தலைவர்கள் நிர்வாகத்தை சந்தித்து உடனடி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு  அலுவலகம் ஒதுக்க கோரி  கடிதம் கொடுத்திருந்தது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் இன்று உத்தரவு வெளியானது.


Sunday, 19 May 2013


டெல்லிச் செய்திகள்:

(BRPSE) பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு இன்னும் 78.2 கிராக்கிப்படி இணைப்பிற்கான DOT-ன் பரிந்துரை தனக்கு வரவில்லை எனக் கூறியுள்ளது. அதே சமயத்தில்   BRPSE நலிந்து போன நிறுவனங்கள்தான் தனக்கு பரிந்துரை செய்ய வேண்டும், BSNL  இன்னும் நலிவுற்ற நிறுவனமாக அறிவிக்கப் படவில்லை. ஆதலால் இந்த விஷயத்தில் DOT யே முடிவெடுக்க உரிமை உண்டு என தெரிவித்துள்ளது. ஆதலால் DOT நமக்கு கிராக்கிப்படி இணைப்பை உடனடி தரவேண்டும். இல்லையென்றால் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாய் ஆகிவிடும்.

Friday, 17 May 2013

 


Kejriwal slams Sibal for taking up Vodafone case on Day I:

               ஆம் அத்மி கட்சி நிறுவனர் அரவிந் கேஜரிவால் சட்ட அமைச்சர் பொறுப்பு ஏற்ற மறுகணம் கபில் சிபில் வோடா போன் அரசுக்கு கட்ட வேண்டிய தொகை வரி ரூ11, 217/- ஐ பரஸ்பர சூமுக பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்று கூறியதை கண்டித்துள்ளார்.

முன்னால் இருந்த சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் இது குறித்து அமைச்சர் சிதம்பரம் கூறிய யோசனையை நிராகரித்ததோடு வோடாபோன் வரியை கட்டி ஆக வேண்டும் என்று நிர்பந்தித்தார். 
கபில் சிபில் அதனை பரிசீலிக்கலாம் என்று கூறியதற்கு அவரின் மகன் வோடாபோன் வழக்கிற்காக ஆஜரான வக்கீல் என்பதை தெளிவு படுத்தினார். இதிலிருந்து கபில் சிபில் எண்ணம் தமக்கு தெளிவாக புரிகிறது என் கேஜரிவால் மேலும் கூறினார். 
அடர்னி ஜெனரல் G.E. Vahanvati, வோடாபோன் அந்த தொகையை கட்டியே தீரவேண்டும் என்று கூறியும் அமைச்சர் கபில் சிபில் கட்ட வேண்டாம் என்று கூறுவது மகனுக்காகத்தான் என்றார். ஆதலால் யாராவது தொழில் அதிபர்கள் வரி செலுத்த வேண்டாம் என்றால் அவர்கள் சட்ட அமைச்சர் சிபிலை தொடர்பு கொள்ளலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.
அவருடைய நண்பரும் சக வக்கீலும் ஆகிய பிரசான்ந் பூஷன் வோடா போன் அரசிற்கு 2007 முதல் சுமார் பதினோறாயுரத்து இருநூற்று பதினேழு கோடி வரி பாக்கி வைத்துள்ளது என்று தெரிவித்தார்.

தகவல்: ஹிந்து பத்திரிக்கை 16-05-2013


ஓய்வு ஊதியம் வாங்கும் தோழர்களுக்கு இனி 
அடையாள அட்டை

இலாகாவிலிருந்து ஓய்வு பெற்ற அனைத்து ஊழியருக்கும் BSNL அடையாள அட்டை வழங்குவதற்கான உத்திரவை இன்று நிர்வாகம்      
பிறப்பித்துள்ளது.

அதன்படி ஓய்வு பெற்றவர்கள் கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. கடைசியாக அவர்கள் வேலை பார்த்த இடம், கேடர்,சம்பள விகிதம், மொத்த பணிக்காலம் இவை குறிப்பிடப்பட  வேண்டும்.

2.அந்த அட்டையின் பின்புறம் அவர்கள் இரத்த வகை (BLOOD GROUP )  வீ ட்டு விலாசம்,
தொலைபேசி நம்பர் ஆகியன குறிப்பிடப்பட    வேண்டும்.

3. கார்டு பெறுவதற்கான விண்ணப்பப்  படிவம்     பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

4. ஓய்வூதியர் அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்படும்.

5. அதில் அவர்களுடைய போட்டோ 10 x 8.25 CM அளவில் ஒட்டப்பட வேண்டும்.

6. அதில் இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி கையெழுத்திட வேண்டும்.

7. போட்டோ மற்றும் லேமினேஷன் செலவை ஊழியரிடம் பெற வேண்டும்

நன்றி: NFTE சென்னைதொலைபேசி மாவட்டம்

Saturday, 11 May 2013

மீண்டும் களைகட்டும் போராட்டங்கள்    ஒரு ஆண்டு முடிந்துவிட்டது, நமது  சங்கங்களுடன்
ஒப்பந்தம் போட்டு!

  எனவே,

    கடந்த ஆண்டு நமது சங்களுடன் போட்ட (12-6-2012)
உடன்பாடுகளை நிறைவேற்றிட கோரி போராட்டங்கள்
நடத்த அனைத்து சங்க கூட்டமைப்பு, (FORUM) அறைகூவல்
விடுத்துள்ளது.

   மறுபடியும்,
  
     78.2 IDA இணைப்பு உட்பட,

 போராட்டங்கள்:
   22-05-2013      ஆர்பாட்டங்கள்,

   05-06-2013      தர்ணா

   12-06-2013      முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்,

                   அனைவரும் பங்கேற்று போராட்டம் வெற்றிகரமாக்குவோம்.

   

Wednesday, 8 May 2013


உற்சாகத்துடன் முடிந்த முப்பெரும் விழா காட்சிகள்!!

6-5-13 அன்று தி.நகரில் சென்னை மாநிலச் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது









மாநிலச் செயலர் மதிவாணன் நாம் பெற்ற அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். அதேபோல மேதின விழாவின் முக்கியத்துவத்தை மிக எளிமையாக அனைவரும் ரசிக்கும்படி பேசினார். பிறகு பேசியவர் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை அவர்கள். கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் என்பதால் அவரது வரலாறு, ஜென்னியுடன் அவரது குடும்ப வாழ்க்கை, மார்க்ஸ் எழுதிய தாஸ் கேப்பிடல், கம்யூனிச அறிக்கை இவைகளைப் பற்றி விரிவாக அனைவருக்கும் ரசிக்கும்படி அவருக்கே உரித்தான பாணியில் பேசி அனைவரையும் கவர்ந்தார். 

Thanks: NFTE COIMBATORE

Sunday, 5 May 2013

     தென்னக நதிகளை இணைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – தா. பண்டியன் CPI மாநில செயலர்
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மாற்று அரசியல் தேவை –தேசிய செயலர் து. ராஜா
(தினமணி)
     2G அலைக்கற்றைஒதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் இரண்டு பேர் ஆகியோரை சாட்சியங்களாக்ச் சேர்க்கவேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமனியன் சுவாமி சனிக் கிழமை மனு தாக்கல் செய்தார். (தினமணி)
மேதினம்
திருவண்ணாமலையில் AITUC, CITU  தொழிற்சங்கங்களின் சார்பில் மேதின பேரணியும், பொதுக்கூட்டமும் 01/05/2013 அன்று நடைபெற்றது. அதில் நமது NFTE  INDOOR கிளையின் செயல்ர் தோழர் எம். அய்யோத்தி மற்றும் தோழர்கள் ஆர். செல்வராஜு, பி.தேவராஜ், எம். ரேணு மற்றும் ஓய்வு பெற்ற தோழர் என், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கெடுத்தனர்.



CPI மாவட்ட செயளாலர் தோழர் தங்கராஜ் மற்றும் தோழர் திருமலையுடன் நமது தோழர்கள்