SUN குழுமம் கட்டிய ரூ. 60 கோடி அபராதம்.
ஜெட் விமானத்தை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றத்துக்காக கலாநிதி மாறன் நிர்வகிக்கும் சன் குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 60 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளது
பாம்பார்டியர் வகை சிறிய ரக விமானத்தை இறக்குமதி செய்ததில் சன் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததை வருவாய் புலனாய்வுத் துறை கண்டறிந்தது. இதையடுத்து சன் குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து சன் குழுமம் உடனடியாக ரூ.60 கோடியை அபராதமாகச் செலுத்தியது.
வரி ஏய்ப்பு செய்யப்பட்டது உறுதியானதும், வருவாய் புலனாய்வு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு எந்த முறையீடும் செய்யாமல் உடனடியாக அபராதத்தை செலுத்தியுள்ளது சன் குழுமம்.
தகவல்: ஜனசக்தி நாளிதழ் 31.03.2013
No comments:
Post a Comment