Thursday, 28 March 2013




தாம்பரம் கோட்டத்தின் சார்பாக பிரச்சார
கூட்டம் 28/03/13 அன்று தாம்பரம் 
தொலைபேசி இணைப்பகத்தில் தோழர்ராமகிருஷ்ணன் 
தலைமையில் நடைபெற்றது. 
நமதுமாநிலச்செயலர் C.K.மதிவாணன்சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும் போதுநாம் ஒரு மாதம் முன்னால் பிரச்சாரம் ஆரம்பித்தபோது, நாம் வெற்றி பெறுவது உறுதி என்று சொன்னேன்.ஆனால்,நான் ஒரு மாதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு வந்த பிறகு ,51% நாம் பெறுவது உறுதி என்று ஆகிவிட்டது.இதனை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.அபிமன்யூ இன்று நிலவும் சூழ்நிலைக்கு  NFTE தான் காரணம் என்று கூறுவது எப்படி இருக்கிறது என்றால், ””மன்மோகன் சிங், இன்று இந்தியாவில் உள்ள விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம்,பாலியல் பலாத்காரங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணம் வாஜ்பாய் அரசுதான் காரணம்”” என்று சொன்னால் எப்படி இருக்குமோ? அது போல் உள்ளது.ஆதலால் மக்கள் இதனை நம்ப தயாராக இல்லை. அனைவரும் இனி ஏமாறவும் தயாரில்லை .நம்மை பொருத்தவரை நாம் கூறுகிறோம் நாம் இந்த போனஸை கிடைக்க வைப்போம்” “போனஸ் கிடைக்கும் இதனை பார்த்து உங்களிடம் என்ன திட்டம் இருக்கிரது என்று அபிமன்யூ கோபத்தோடு கேட்கிறார், நான் சொல்கிறேன் போனஸ் என்பது கொடுபடா ஊதியம்” நீங்கள் உதாரணமாக ரூ10,000/- சம்பளம் என்றால் அதில் 300 பிடித்தம் செய்யப்பட்டு மீதம் தான் நம்க்கு சம்பளமாக தரப்படுகிறது,பிடித்தம் செய்த பணத்தை 12 ஆல் பெருக்கி அதனை 13வது மாத சம்பளமாக தருவதுதான் போனஸ்.ஆதலால் அதனை பெற லாபம் வந்தால் போனஸ் கொடுங்கள் என்று நம்பூதிரி ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டு.அதனை நாம் நிச்சயமாக செய்து போனஸ் வாங்கி தருவோம்.Productivity Linked Bonus குப்தா போட்ட ஒப்பந்தம் Profit linked bonus நம்பூதிரி போட்ட ஒப்பந்தம...நம்பூதிரி போட்ட ஒப்பந்தத்தால் போனஸ் கிடைக்கவில்லை.. ஆகவே அனைத்து இழந்த  சலுகைகளையும் திரும்ப பெற்று தருவோம்.ஆதலால்  அனைவரும் NFTE-BSNL க்கு வரிசை எண்:15 – ல் வாக்களிக்க வேண்டும்.




நன்றி: NFTE காஞ்சிபுரம் வலைதளம்

No comments:

Post a Comment