Tuesday, 19 March 2013

 அமைச்சர் கபில் சிபலின் மனம் திறந்த பதில் :

  BSNL & MTNL உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்கும் கம்பெனிகள் அல்ல அவர்கள்  நஷ்டம் தரும் கபெனியாக எப்படி ஆனார்கள் ?ஸ்பெக்ட்ரம் வாங்க அவர்கள் 28,000 கோடி ரூபாய் கட்டினார்கள் !அந்த அளவு பணம் கட்ட நிர்பந்திக்கப்பட்டனர். MTNL வங்கிகளிடம் கடன் வாங்கி அரசுக்கு அந்த பணத்தி கட்டினார்கள். வங்கி கடனுக்கு வட்டி கட்டுவதால்தான் நஷ்டம் ஏற்பட்டது. அதே போலத்தான் BSNLன் நிலையும் ....
இந்நிலையில் அரசு ஏதாவது வகையில் அவர்களுக்கு நஷ்டத்திலிருந்து மீள ஒரு வழி கண்டாக வேண்டும் ! ஏனென்றால், 28,000 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு விட்டு அவர்களை நலிந்த கம்பெனி என்று கூறி, மேலும் சம்பாதியுங்கள் என்று கூறுவது சரியாக இருக்காது.இந்த மோசமான சூழலில் அந்த கம்பெனிகளின் ஷேர்களை தனியாருக்கு விற்பது சாதமாக இருக்காது .நல்ல மதிப்புள்ள தங்கத்தை அடிமாட்டு விலைக்கு விற்க முடியாது.ஆகவே,ஸ்பெக்ட்ரத்திற்கு கொடுத்த பணத்தை எப்படியாவது ஈடு செய்யவேண்டும் என்று அரசிடம் கூறுவோம் !   


தகவல்: NFTE-கோவை.  

No comments:

Post a Comment