தினம் ஒரு கேள்வி - இரண்டு
புதிய பதவி உயர்வு திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் மிகப் பெரும் சாதனையாக சொல்லிக் கொள்கிறது. பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவி பெறுகிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கோ 8 ஆண்டு இடைவெளி என்பதால் இரண்டு பதவி உயர்வுகள் மட்டுமே பெறுகிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்? பதவி உயர்வு காரணமாக பெறவேண்டிய ஊதிய நிலுவையை பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சரண்டர் செய்தது ஏன்? பதவி உயர்வில் நியாயமாக எஸ்.சி / எஸ்.டி ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டினை நிர்வாகம் மறுத்ததை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏன் ஏற்றுக் கொண்டது? பதவி உயர்வுக்கான சேவையில் 2000 க்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் 2000 க்குப் பின் வேலையில் சேர்ந்தவர்கள் என வேறுபாடு காட்டுவதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஒப்புக் கொண்டது ஏன்?
நன்றி: சென்னை இணைய தளம்
No comments:
Post a Comment