அபிமன்யு என்ற புதிய 
மாணவன்
நாம் 
BSNLEU 18-10-2013 
அன்று போனஸ் 
பிரச்சனையில் அந்தர்பல்டி அடித்து சரணாகதி அடைந்த அபிமன்யுவிடம் சில கேள்விகள் 
கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளிக்காமல் நம்மை பார்த்து உவகை பொங்க போனஸ் சட்டம் 
பற்றி தெரியுமா? என வினா எழுப்பியுள்ளார்.  அவருக்கு NFTE-BSNL 
சார்பாக சொல்கிறோம், 
எங்களுக்கு எல்லா சட்டமும் தெரியும் அதைவிட போனஸ் கிடைக்காமல் இருக்க அபிமன்யு 
செய்கின்ற வேலைகளைப் பற்றியும் தெரியும் என 
சொல்கிறோம்.
உதாரணத்திற்கு ஒன்றை 
கூறுகிறோம். DOT  
கார்ப்பரேசனாக மாறிய 
சமயத்தில், அய்யோ, பென்ஷன் நமக்கு போய்விட்டதே என்று கூரை மீது ஏறி கூப்பாடு 
போட்டது நம்பூதிரி சங்கம். ஆனால் உடனடியாக NFTE 
சங்கம் அதனை எதிர்த்து 
போராடி அரசு தொகுப்பிலிருந்து நமக்கு பென்ஷனை பெற்றுத் தரவில்லையா? அது ஒரு இமாலாய 
சாதனை என்று அனைவரும் பாராட்டவில்லையா?
2003இல் பி.எஸ்.என்.எல் 
நிர்வாகம் DPE 
பரிந்துரைப்படி 5 
சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்ட லாபம் மட்டுமே போனஸ் என்று அறிவித்தபோது அந்த 
சமயத்தில் அங்கீகாரம் இல்லாத BSNLEU 
சங்கத்தையும் சேர்த்து 
கொண்டு வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கவில்லையா? அதன் பிறகு லேபர் கமிஷனர் முன்பு 
ஒப்பந்தம் போட்டு 75 சதவீதம் போனஸ் முதலிலும் பிறகு 25 சதவீத போனஸும் பெற வில்லையா? 
அப்போதும் இந்த போனஸ் சட்டம் அமுலில் இருந்தது அபிமன்யுவிற்கு மறந்து விட்டதா? அந்த 
உடன்பாட்டில் மேன்மை பொறுந்திய அபிமன்யு Dy.General Secretary 
of BSNLEU என்ற முறையில் 
கையெழுத்து இடவில்லையா!!
ஒருவிஷயத்தை 
ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 78.2 கிராக்கிபடி இணைப்பின் போது என்னை 
“சந்தேகப்படும் தாமஸ்” என்று குறிப்பிட்டு Competent Authority 
என்பது BSNL 
போர்டுதான் தவிர 
DOT. 
இல்லை என்று 
சிறுபிள்ளைதனமாக எழுதியது யார்? இதே அபிமன்யுதான். அந்த அளவுக்கு குறைந்தபட்ச ஞானம் 
இல்லாதவர் மேன்மை பொறுந்திய அபிமன்யு என்பது அனைவரும் அறிந்ததே. 
இதுபோன்ற விதண்டாவாதங்களை விட்டுவிட்டு நேரடியாகவே கேட்கிறோம், 
18-10-2013 நிர்வாகம் போனஸ் தரமுடியாது என்று மறுத்தபோது உடனடியாக அனைத்து 
சங்கங்களையும் திரட்டி ஏன் ஒரு போராட்ட அறைகூவல் விடவில்லை? மனமில்லையா அல்லது 
தைரியமில்லையா?
அனைவருக்கும் உள்ளங்கை 
நெல்லிக்கனி போல நன்றாக விளங்குகிறது, இப்போது போனஸ் கிடைத்துவிட்டால் அதன் வெற்றி 
NFTE-BSNL 
ஐ 
சார்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல் NFTE-BSNL 
மூன்று வருடங்களாக நாம் 
இழந்த போனஸை பெற்றுத்தந்த பெருமையை பெற்றுவிடும். விடுவாரா 
அபிமன்யு??
இணைப்புச்செய்தி: 
தோழர்.ராமன்குட்டி எங்கே தனக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று அஞ்சி அவரை 
கடைகோடிக்கு விரட்டி அடித்தது யார்? அவர் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான சங்கத்தை 
ஏற்படுத்திய போது அதற்கு எதிராக போட்டி சங்கத்தை அபிமன்யு தன் நண்பர்களை வைத்து 
தொடங்கவில்லையா? ஏன்,. சென்னையில் தோழர்.ஆர்.குணசேகரன் தனக்கு போட்டியாக 
பொதுச்செயலராக வந்து விடுவாரோ என பயந்து அவரை சங்கத்தைவிட்டே துரத்தி 
அடிக்கவில்லையா? நாங்கள் இறுதியாக சொல்கிறோம் அவர் எங்கள் தலைவர் இஸ்லாம் 
அகமதுக்காக முதலைக் கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு தன் சங்கத்தை ஒழுங்குபடுத்தும் 
வேலையை முதலில் செய்யட்டும்.
--சி.கே.மதிவாணன், Dy.GS(NFTE-BSNL)
Dated:07/11/2013

 
No comments:
Post a Comment