Monday, 25 November 2013


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக் குழு உறுப்பினர் போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இப்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

No comments:

Post a Comment