"தருமம் மறுபடியும் வெல்லும்"
தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் என்று பாஞ்சாலி சபதத்தில் எடுத்துரைத்தான் புரட்சிக் கவி பாரதி.
அதுதான் உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
பணி ஓய்வு பெற்ற CGM வேலுசாமி, அலுவலகத்திற்கு கள்ளத்தனமாக
வந்து ரகசியமாக சன் டீவிக்கு 323 ISDN இணைப்பு வழங்கிய தயாநிதி மாறனுக்கு எதிரான ஆவணங்களை அழிப்பதாக செய்தி வந்ததையடுத்து, அதை தடுத்து நிறுத்த போராடிய தோழர் மதிவாணன் அவர்களுக்கு கடும்
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாடகம அரங்கேறியது.
அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களின் விடாமுயற்சி காரணமாகவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு நல்ல உள்ளங்களின் நல்லாதரவு காரணமாகவும்
அவர் மீது மேற்கொண்ட விசாரணை அறிக்கை மீது எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளத் தேவையில்லை என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இனி தோழர் மதிவாணன் ஓய்வூதிய பலன்களைப் பெற தடையேதுமில்லை.
விசாரணையின் போது defence Assistant என்ற அடிப்படையில் தனது
நீண்ட அனுபவ முத்திரையை பதித்த தோழர் மாலி அவர்களின்
செயல் பாராட்டத்தக்கது.
தண்டனையைக் கண்டு அஞ்சாமல் செயலாற்றிய தோழர் மதிவாணன் அவர்களின் செயல் நாமெல்லாம் பின்பற்றத்தக்கது. சிறிய பிரச்னை என்றாலும் பெரும்பாலானோர் கலங்கிப் போய் அங்கும் இங்கும் பிரச்னையை கொண்டு செல்வார்கள்.
ஆனால், தோழர் மதி அவர்களோ, M.P அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் பிரச்னையை நான் பேசட்டுமா என்று கேட்டபோது,
" வேண்டாம், எனது சங்கத் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று கௌரவமாக கூறியது மெச்சத் தகுந்தது.
ஊழல், ஏமாற்றுவேலை, அநீதி போன்றவை எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் எதிர்வினையைப்பற்றி அஞ்சாமல் வானமே எல்லையாகக் கருதி செயலாற்றும் தோழர் மதிவாணன் அவர்களின் மகுடத்தில் வைத்த வைரமாக அமைந்து விட்டது அவரது இந்த செயல்பாடு.
No comments:
Post a Comment