Saturday, 30 November 2013

உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியீடு!!!

உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா. இவர் பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இந்நிலையில், 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை Ôகுலைல்Õ என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டு ள்ளது. அந்த பெண்ணின் பெயர் மாதுரி என்று கூறியுள்ள குலைல், அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்.

இளம்பெண்  மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக,  நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.

அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். 
 
தகவல்: NFTE புதுவை

Friday, 29 November 2013










                                       
        "தருமம் மறுபடியும் வெல்லும்"

தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் என்று பாஞ்சாலி சபதத்தில்  எடுத்துரைத்தான்  புரட்சிக் கவி பாரதி.

  அதுதான் உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

    பணி ஓய்வு பெற்ற CGM வேலுசாமி, அலுவலகத்திற்கு கள்ளத்தனமாக 
வந்து ரகசியமாக சன் டீவிக்கு  323 ISDN இணைப்பு வழங்கிய தயாநிதி மாறனுக்கு எதிரான ஆவணங்களை அழிப்பதாக செய்தி வந்ததையடுத்து, அதை  தடுத்து நிறுத்த போராடிய தோழர் மதிவாணன் அவர்களுக்கு கடும் 
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாடகம அரங்கேறியது.

  அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களின் விடாமுயற்சி காரணமாகவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு நல்ல உள்ளங்களின்  நல்லாதரவு காரணமாகவும் 
அவர் மீது மேற்கொண்ட விசாரணை அறிக்கை மீது எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளத் தேவையில்லை என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இனி தோழர் மதிவாணன் ஓய்வூதிய பலன்களைப் பெற தடையேதுமில்லை.

விசாரணையின் போது defence Assistant என்ற அடிப்படையில்  தனது 
நீண்ட அனுபவ முத்திரையை பதித்த தோழர் மாலி அவர்களின் 
செயல் பாராட்டத்தக்கது.

தண்டனையைக் கண்டு அஞ்சாமல் செயலாற்றிய தோழர் மதிவாணன் அவர்களின் செயல் நாமெல்லாம் பின்பற்றத்தக்கது. சிறிய பிரச்னை என்றாலும் பெரும்பாலானோர் கலங்கிப் போய் அங்கும் இங்கும் பிரச்னையை கொண்டு செல்வார்கள். 

ஆனால், தோழர் மதி அவர்களோ, M.P அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் பிரச்னையை நான் பேசட்டுமா என்று கேட்டபோது, 
" வேண்டாம், எனது சங்கத் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று கௌரவமாக கூறியது மெச்சத் தகுந்தது.

 ஊழல், ஏமாற்றுவேலை, அநீதி போன்றவை எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் எதிர்வினையைப்பற்றி அஞ்சாமல் வானமே எல்லையாகக் கருதி செயலாற்றும் தோழர் மதிவாணன் அவர்களின் மகுடத்தில் வைத்த வைரமாக அமைந்து விட்டது அவரது இந்த செயல்பாடு.

போலீசாரின் குடும்பத்தினருக்கு சலுகை விலையில் 

                                                    BSNL சிம் கார்டுகள்


                                             

காவல் துறையினர் அனைவருக்கும் இலவச சிம் கார்டுகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு சலுகை விலையிலான சிம் கார்டுகளும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.3.47 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக காவல் துறையில் 1.20 லட்சம் பேர் உள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் முதல் கண்காணிப்பாளர் வரை உள்ளவர்களுக்கு 2008-ம் ஆண்டில் 12,181 பி.எஸ்.என்.எல். சியூஜி (குளோஸ்டு யூசர் குரூப்) சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மாத கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.2.05 கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது இந்த சியூஜி சிம் கார்டு திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி சாதாரண முதல் நிலை காவலர் முதல் காவல் துறை இயக்குநர் வரையிலும், காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இலவச சியூஜி சிம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. சியூஜி சிம் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தங்களுக்குள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 50 இலவச எஸ்.எம்.எஸ்.களும் அனுப்பிக் கொள்ளலாம். காவலர்கள் ஓய்வு பெறும் வரை இந்த சிம் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு காவலரும் தங்கள் குடும்பத்தினரின் தேவைக்காக 7 சியூஜி சிம் கார்டுகளை சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ஆண்டு கட்டணமாக ரூ.264 மட்டும் செலுத்தினால் போதும். ஏற்கெனவே இலவச சிம் கார்டுகள் வைத்திருப்பவர்களும் இந்த சியூஜி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். போஸ்ட் பெய்ட் சிம் கார்டு வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு சில செலவுகளுக்காக மாதம் ரூ.1,200 அரசு கொடுக்கிறது. அவர்கள் மட்டும் மாத வாடகை தொகையை அரசு கொடுக்கும் தொகையில் இருந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், உளவுப் பிரிவு காவலர்களின் வயர்லெஸ் தொலைபேசி சேவைக்காக 1,819 சிம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன.

வயர்லெஸ் தொலைபேசி சேவை சிம் கார்டுகள் தலா ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.18.2 லட்சமும், 1.20 லட்சம் காவலர்களுக்கு வழங்கப்படும் சிம் கார்டுகள் தலா ஒன்றுக்கு ரூ.274 வீதம் ரூ.3.28 கோடியும் செலவாகிறது. இவை அனைத்துக்கும் சேர்த்து ரூ.3.47 கோடி தற்போது ஒதுக்கப்படுகிறது" என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

NFPTE-60th Federation Day Celebration at Chennai on 27/11/2013
தோழர் சி.கே.மதிவாணன் தலைமையுரை
"முதல் முழக்கம்" ஆசிரியர் தோழர் ஏ.சோமசுந்தரம் சிறப்புரை
FNTO முன்னாள் பொதுச் செயலர் தோழர் கே..வள்ளிநாயகம் சிறப்புரை

End of an harassment!
  At last the harassment finally is over. The CGM, Chennai telephones finally closed the disciplinary proceedings against comrade C.K. Mathivanan and the letter communicating the displeasure of CMD was received by him on 25/11/2013.   We Hope the necessary vigilance clearance will be issued without any further delay so that Com. C.K.Mathivanan could get his retirement benefit atleast by the end of this year. However, We extend our sincere thanks to our National president Com. Isalm Ahamad who consistently took up the case of victimization with the coporate office and helped to solve this case without any punishment or monetary loss. We also thank Com. S. Mahalingam, former CS, Tamil Nadu who acted as Defence Assistant in the disciplinary case and helped Com. C.K. Mathivanan by his intelligent questions during the enquiry. In the last we congratulate all those comrades who stood like rock behind Com. C.K.Mathivanan during this difficult period and expressed sympathies, affection to him. We proved once again that any number of false cases cannot shake the leaders of NFTE.  We will continue to fight  against corruption, high handedness and discrimination without fear. We will also serve the working people with renewed energy and commitment.
Circle union, NFTE_BSNL Chennai telephones.
Dated:26/11/2013

Monday, 25 November 2013

NFTE-BSNL ACHIEVED IT!
Atlast the management announced the formation of a Committee to decide upon the new bonus formulae. Our National President Com . Islam Ahamed is in the committee in his capacity as the Leader of the Staff Side. Only due to persistent and continuous effort by the NFTE-BSNL Management now agreed to consider a change in the Bonus Formulae which caused denial of Bonus for the last four consecutive years. This faulty formula was agreed too by BSNLEU. We all knew that this faulty formula was agreed upon by BSNLEU since it was the only recognized Union at that time. NFTE-BSNL was not a recognized Union for a long time and hence could not compel the Management to change the said faulty Bonus Formulae. Now NFTE-BSNL is a Recognized Union and was able to convince the Management for a need to change the Bonus Formula so that our employees get Bonus irrespective of PROFIT/LOSS. IT IS AN ACHIEVEMENT BY NFTE-BSNL INDEED. However some leaders of BSNLEU without any justification started claiming Victory for this achievement. It is utterly ridicules and false claim. They could do it now as they claim now Why they could not do the same for the last 4 years. Every employee knew only after NFTE-BSNL Union was recognized 78.2% IDA Merger order was implemented. Now the faulty Bonus formula is to be changed. 

ANY NUMBER OF FALSE PROPAGANDA BY BSNLEU WILL NOT FOOL OUR EMPLOYEES ANY MORE

COURTESY: NFTE CHENNAI

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக் குழு உறுப்பினர் போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இப்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

Tuesday, 12 November 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் 11-11-2013 அன்று ஆர்.டி.ஒ அலுவலகம் முன்பாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் “ கண்டன ஆர்ப்பாட்டம் “ நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இரா. தங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாககுழு தோழர்கள் பி.கே.பாஷா, கு.ஜோதி, பெ. அன்பு, அ.கி.அரசு, சு.கிருஷ்ணராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர் என். பாலகிருஷ்ணன் (ஒய்வு) பி.எஸ்.என்.எல் நன்றி உரையாற்றினார்.



Saturday, 9 November 2013

அபிமன்யு என்ற புதிய மாணவன்
நாம் BSNLEU 18-10-2013 அன்று போனஸ் பிரச்சனையில் அந்தர்பல்டி அடித்து சரணாகதி அடைந்த அபிமன்யுவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளிக்காமல் நம்மை பார்த்து உவகை பொங்க போனஸ் சட்டம் பற்றி தெரியுமா? என வினா எழுப்பியுள்ளார்.  அவருக்கு NFTE-BSNL சார்பாக சொல்கிறோம், எங்களுக்கு எல்லா சட்டமும் தெரியும் அதைவிட போனஸ் கிடைக்காமல் இருக்க அபிமன்யு செய்கின்ற வேலைகளைப் பற்றியும் தெரியும் என சொல்கிறோம்.

உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறோம். DOT  கார்ப்பரேசனாக மாறிய சமயத்தில், அய்யோ, பென்ஷன் நமக்கு போய்விட்டதே என்று கூரை மீது ஏறி கூப்பாடு போட்டது நம்பூதிரி சங்கம். ஆனால் உடனடியாக NFTE சங்கம் அதனை எதிர்த்து போராடி அரசு தொகுப்பிலிருந்து நமக்கு பென்ஷனை பெற்றுத் தரவில்லையா? அது ஒரு இமாலாய சாதனை என்று அனைவரும் பாராட்டவில்லையா?

2003இல் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் DPE பரிந்துரைப்படி 5 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்ட லாபம் மட்டுமே போனஸ் என்று அறிவித்தபோது அந்த சமயத்தில் அங்கீகாரம் இல்லாத BSNLEU சங்கத்தையும் சேர்த்து கொண்டு வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கவில்லையா? அதன் பிறகு லேபர் கமிஷனர் முன்பு ஒப்பந்தம் போட்டு 75 சதவீதம் போனஸ் முதலிலும் பிறகு 25 சதவீத போனஸும் பெற வில்லையா? அப்போதும் இந்த போனஸ் சட்டம் அமுலில் இருந்தது அபிமன்யுவிற்கு மறந்து விட்டதா? அந்த உடன்பாட்டில் மேன்மை பொறுந்திய அபிமன்யு Dy.General Secretary of BSNLEU என்ற முறையில் கையெழுத்து இடவில்லையா!!

ஒருவிஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 78.2 கிராக்கிபடி இணைப்பின் போது என்னை “சந்தேகப்படும் தாமஸ்” என்று குறிப்பிட்டு Competent Authority என்பது BSNL போர்டுதான் தவிர DOT. இல்லை என்று சிறுபிள்ளைதனமாக எழுதியது யார்? இதே அபிமன்யுதான். அந்த அளவுக்கு குறைந்தபட்ச ஞானம் இல்லாதவர் மேன்மை பொறுந்திய அபிமன்யு என்பது அனைவரும் அறிந்ததே.


இதுபோன்ற விதண்டாவாதங்களை விட்டுவிட்டு நேரடியாகவே கேட்கிறோம், 18-10-2013 நிர்வாகம் போனஸ் தரமுடியாது என்று மறுத்தபோது உடனடியாக அனைத்து சங்கங்களையும் திரட்டி ஏன் ஒரு போராட்ட அறைகூவல் விடவில்லை? மனமில்லையா அல்லது தைரியமில்லையா?

அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல நன்றாக விளங்குகிறது, இப்போது போனஸ் கிடைத்துவிட்டால் அதன் வெற்றி NFTE-BSNL ஐ சார்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல் NFTE-BSNL மூன்று வருடங்களாக நாம் இழந்த போனஸை பெற்றுத்தந்த பெருமையை பெற்றுவிடும். விடுவாரா அபிமன்யு??

இணைப்புச்செய்தி: தோழர்.ராமன்குட்டி எங்கே தனக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று அஞ்சி அவரை கடைகோடிக்கு விரட்டி அடித்தது யார்? அவர் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான சங்கத்தை ஏற்படுத்திய போது அதற்கு எதிராக போட்டி சங்கத்தை அபிமன்யு தன் நண்பர்களை வைத்து தொடங்கவில்லையா? ஏன்,. சென்னையில் தோழர்.ஆர்.குணசேகரன் தனக்கு போட்டியாக பொதுச்செயலராக வந்து விடுவாரோ என பயந்து அவரை சங்கத்தைவிட்டே துரத்தி அடிக்கவில்லையா? நாங்கள் இறுதியாக சொல்கிறோம் அவர் எங்கள் தலைவர் இஸ்லாம் அகமதுக்காக முதலைக் கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு தன் சங்கத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை முதலில் செய்யட்டும்.

--சி.கே.மதிவாணன், Dy.GS(NFTE-BSNL)
Dated:07/11/2013

Monday, 4 November 2013

Face book -லிருந்து




தமிழகத்தில் தீபாவளி சீசன் ஸ்பெஷல் விற்பனை ரூ330 கோடி..!

தமிழகத்தில் தீபாவளியொட்டி 3 நாட்களில் நடந்த டாஸ்மாக் மது விற்பனை ரூ330 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது..!
இது கடந்த ஆண்டை விட 80கோடி அதிகம் ஆகும்.
சென்னையில் மட்டும் ரூ43கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

# தீபாவளி சீசனுக்கு வெடி கூட இவ்வளவுக்கு வித்திருக்காது போல..! 


  comment:  330 கோடியை வச்சு அரசு ஆஸ்பத்திரிக்கு ரோடு போடுங்கப்பா?
மீதி  இருந்ததுன்னா அப்படியே சுடுகாட்டுக்கும் ரோடு போடுங்கப்பா?

தகவல்: NFTE கோவை 
                பொறுப்பின்மையின் உச்சகட்டம் !

              30-10-13 அன்று சென்னையில் NFTE-BSNL நடத்திய  உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது, " இவ்வாண்டும் போனஸ் கிடைக்காததற்கு BSNLEU சங்கம்தான் காரணம், ஏனென்றால், அச்சங்கம்தான்,  லாபமில்லை என்றால்  போனஸ் கிடையாது    என்ற நிர்வாகத்தின் தவறான நிலபாட்டை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டது"  என்று கூறினேன்.

       இதனைக் கேட்டு  மன உறுத்தலாலும்,   வெதும்பலாலும்  BSNLEU 
பொதுச் செயலர் தோழர் அபிமன்யு, BSNLEU CHQ செப் சைட்டில் 

              " போனஸ் பிரச்னை: NFTE-BSNL தப்பிக்கும் வழி "  

என்று தலைப்பிட்டு  ஒரு  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதை படித்தவுடன், போனஸ் பிரச்னையில் தோழர் அபிமன்யூவின் உச்ச கட்ட பொறுப்பின்மையையும் உணர்ச்சியில்லா தன்மையைக் கண்டு   அதிர்ச்சி அடைந்தேன்.

  BSNL நிர்வாகம் படுசாமார்த்தியமாக கம்பெனியின் லாபத்துடன்  போனஸை இணைத்ததையும்  அதை அன்றைய ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்த BSNLEU தட்டிக் கேட்காமல் எந்த எதிர்ப்புமின்றி தண்டனிட்டு ஒப்புக்கொண்டதும் யாவரும் அறிந்ததே ! அதன்
 காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் போனஸ் 
பெறாமல் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

' லாபமில்லை என்றால் போனஸ் இல்லை"  என்ற தவறான திட்டம், உழைக்கும் வர்க்கம் போற்றி மனம் லயித்துப்    " போனஸ் என்பது கொடுபடா  ஊதியமே ! "  என்ற கொள்கை நிலைபாட்டிற்கு 
நேர்மாறானது ஆகும்

 சென்ற ஆறாவது அங்கீகாரத் தேர்தலின் போது NFTE-BSNL 
அங்கீகாரம் பெற்றவுடன்,  78.2 % IDA Mergerஐ பெறுவோம், 
போனஸ் உரிமையை மீட்போம் என்று நாம் வாக்குறுதி அளித்தது உண்மையே.

 ஆனால், துரதிர்ஷ்டவசமாக  நாம் இரண்டாம் சங்க அங்கீகாரத்தைத் தான் பெ முடிந்தது. அதன் காரணமாக, எல்லா மட்டங்களிலும் ஊழியர் தரப்பு செயலராக BSNLEUவைச் சார்த்தவர்தான் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், நாம் அங்கீகாரம் பெற்ற 90 நாட்களுக்குள் முழுமனதோடு ஒற்றுமையான போராட்டத்தை உருவாக்கி 78.2 சத IDA Mergerஐப் பெற முடிந்தது.

அதேபோல போனஸ் பிரச்னையிலும் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் குறைந்த பட்ச போனசையாவது பெற வேண்டும் என்று நம்மால் 
இயன்ற அளவு பெருமுயற்சி மேற்கொண்டோம்.

ஆனால் அபிமன்யூவும் அவரது சகாக்களும் வேறு மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் இருந்தார்கள். 

NFTE-BSNL அங்கிகாரம் பெற்றவுடன்தான்  78.2 சத IDA இணைப்பு கிடைத்தது என்ற ஒரு நல்ல அபிப்ராயம்  ஊழியரிடையே வந்துவிட்டது. போனசையும் NFTE-BSNL சங்கத்தோடு சேர்ந்து போராடி பெற்று விட்டால் அந்த நல்ல அபிப்ராயம் மேலும் வலுப்பெற்றுவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள்   அபிமன்யு போன்றோர்.  

 ஆகவே, நிர்வாகத்தோடு சேர்ந்து சதியில் ஈடுபடத் துவங்கி , போனஸ் பற்றிய  எந்தவிதமான உருப்படியான உடன்பாடும் இன்றி 24-10-13 அன்று தங்களது ஒரு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டனர்.  

  நமது அச்சம் சரியானதுதான் என்று ஒரு சில தினங்களிலேயே நிரூபணமானது.  

29-10-13 அன்று சென்னையில் BSNLEU நடத்திய ஒரு ஹால் கூட்டத்தில் பேசிய தோழர் அபிமன்யூ, கீழ்க்கண்டவாறு பேசியதாக மிகவும் நம்பத்  தகுந்த செய்தி நமக்கு கிடைத்து உள்ளது :
 '"நமது கம்பெனி கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தில் இயங்குகிற காரணத்தால், இனிமேல் நமது ஊழியர்களுக்கு போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை ; வருங்காலத்தில் மாதாமாதம் சம்பளம் கொடுப்பதற்கே கம்பெனி  கஷ்டப்படுகிறது "

மேற்கண்டவாறு பேசிவிட்டு அடுத்த நாளே மனசாட்சி இல்லாமல்  


"அங்கீகாரம் பெற்றவுடன் போனஸ் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை NFTE-BSNL நிறவேற்றவில்லை" 

என்று நமமை குறை கூறி எழுத அபிமன்யூவிற்கு  என்ன நியாயம் இருக்கிறது ?  

நாம் அபிமன்யூவிற்கு கீழ்க்கண்ட கேள் விகளை தொடுக்க விரும்புகிறாம், அவர் பதிலளிக்க  மறுத்தாலும் கூட.....

1. கம்பெனியின் நிதி நிலை மிகவும் மோசமானது என்று நன்றாக தெரிந்த பின்னும் போனஸ் கோரிக்கையை வேலநிறுத்த அறிவிப்பில் ஒரு கோரிக்கையாக சேர்த்தது ஏன் ?

2. அவர் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக/பகிரங்கமாக இனி போனஸ் கிடைக்காது என்று    பேசத் தயாரா ?

BSNLEU சங்கத்தின் ஒவ்வொரு செயலையும் ஊழியர்கள்  கூர்ந்து கவனித்து வருகிறார்கள், போனஸ் பிரச்னையில் அதன் இரட்டை 
வேடம் உட்பட.

வேலை நிறுத்த பேச்சுவார்த்தையின் போது BSNLEU போனஸ் பிரச்னையில்  பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்பதையும் உணர்ந்தே உள்ளனர்.
  
 கிரிகெட்டில் மேட்ச் பிக்சிங் ( வெற்றி தோல்வியை முதலே நிர்ணயித்து விடுவது) பற்றி கேள்வி பட்டுள்ளோம் !

ஆனால் இப்போது  BSNLEU வின் Strike fixing ஐ உணர்ந்துள்ளோம் !!

                                                             சி.கே.மதிவாணன்,
                                                       துணைப் பொதுச் செயலர்
                                                               NFTE-BSNL     

Friday, 1 November 2013



CHQ NEWS

01-11-2013 : Move to victimize Com. C.K. Mathivanan, Dy. GS and circle Secy, Chennai TD thwarted:- 

There has been move to victimise and harm Com. C.K.M. Dy. GS and circle Secy for organizing 

protest demonstration against CGM. It has been completely thwarted due to timely, systematic and 

sustained efforts and pursuance at CHQ level. Earlier, due to intervention of BSNL HQR the Dies-non 

cases with break-in-service of more than 70 employees were also regularized. The NFTE has ensured 

that there is no vindictive and punitive action against him after the retirement. NFTE HQR has 

succeeded. We record our sincere thanks to BSNL management for appreciating and realizing the 

serious concerns in course of discussions.