Thursday, 2 January 2014




சென்னை மாநிலச் செயலரின் பட்டினிப் போராட்டமும் உடன்பாடும்:

 
மாநிலச் செயலர் இருந்த இரண்டு நாள் பட்டினிப் போராட்டம் தலைமை பொது மேலாளருடன் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
நமது மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் ஆறுமுக்கிய கோரிக்கைகளில் தீர்வை வேண்டி திங்கள்கிழமை 30 டிசம்பர் காலை 9 மணி முதல் பட்டினிப்போராட்டத்தை தொடங்கினார். தலைமை பொதுமேலாளர் மற்றும் சீனியர் பொதுமேலாளர்(HR & Admn) இவர்களுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டு பிரச்சனைகள் தீர்வுக்காண கடிதத்தை தலைமை பொதுமேலாளர் ( CGM) கையெழுத்திட்டு நமது மாநிலச் செயலரிடம் சமர்பிக்கப்பட்டது. 31டிசம்பர் இரவு 10மணியளவில் மாநிலச் செயலர் மற்ற மாநில நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில்
 மூத்த தோழர் ஆர்.கே
 பழரசம் கொடுத்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம்  சுமார் முப்பத்துநான்கு மணிநேரம் தன் உடலை வருத்தி பட்டினிப் போர் நடத்திய மாநிலச் செயலரின் போராட்டம் நிர்வாகத்துடன் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக முடிவிற்கு வந்தது.
நம்முடைய மாநிலச் செயலரின் பட்டினிப் போராட்டத்திற்கு பல்வேறு ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் ஆதரவு அளித்தன. குறிப்பாக தலைவர்கள்
RK, பட்டாபி ராமன் (Circle Secretary NFTE Tamilnadu),
S.லிங்கமூர்த்தி (FNTO Circle Secretary),J.விஜயகுமார் (TEPU Circle Secretary),R.குணசேகரன்  (BSNLDEU Circle Secretary) P.உதயசூரியன் (AIBSNLOA Circle Secretary) ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.  சுமார் நானூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்  இரண்டு நாட்களாக கூடவே இருந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
 மாநிலத் தலைவர் M.K.ராமசாமி தலைமையேற்று நடத்திய கூட்டத்தில் மூத்த தோழர்கள் V.K.கோபாலன், P.கணபதி,K சபாபதி, M.முனுசாமி ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்.
நமது முக்கிய கோரிக்கையான சென்னையில் மிகச் சிறந்த மருத்துவமனைகள் மியாட், பில்ராத், எம்.வி.டையாபடீஸ் போன்ற சில மருத்துவமனைகளை அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் பட்டியலில் கொண்டு வர நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. இதற்கான செயல்களை மூன்றுமாத கால அவகாசத்தில் முடித்து தருவதாகவும் சொல்லியுள்ளது.
 BSNL தொழிலாளியின் சராசரிவயது ஐம்பது ஆகும்.ஆதலால் முக்கிய மருத்துவமனைகளில் நாம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதற்கு தரமான மருத்துவ மனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் கண்டிப்பாக வரவேண்டும். தமிழமாநிலம், STR, STP தொலைதொடர்பு வட்டங்கள் இவைகளில் சென்னையில் இருக்கும் தரமான மருத்துவ மனைகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருக்கும்போது சென்னை தொலைபேசியில் இல்லை என்பது பாரபட்சமானது. இந்த பாரபட்சத்தை போக்குவதற்காகவே நமது மாநிலச் சங்கம் இந்த பிரச்சனையை தலையாய பிரச்சனையாக எடுத்து போராட்டத்தில் இறங்கியது. நிர்வாகம் சுமார் எழுபதிற்கும் மெற்பட்ட மருத்துவமனைகளை அங்கீகாரம் செய்துள்ளாலும் அவையாவுமே நாம் பணம் செலுத்திதான்(ON PAYMENT) சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைமை உள்ளது. இதன் காரணமாகவே நமது சங்கம் இந்த மருத்துவமனைகள் BSNLMRS –ல் கொண்டுவரப்பட வேண்டும் என முடிவெடுத்தது.  இதன் பயனாக நமது தொழிலாளிகள் தரமான மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு முதலில் பணம் செலுத்திவிட்டு பிறகு அதனை கேட்டு பெற வேண்டிய கட்டாயம் இருக்காது.
ஆதலால், நிர்வாகம் இந்த பிரச்சனையின்
 அவசியத்தை உணர்ந்து மூன்று மாதத்திற்குள்
 சரியான முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.இதன்மூலம் தொழிலாளி BSNLMRS திட்டத்தின்கீழ் சிகிச்சை எடுக்கும்போது தேவையில்லாத பண இழப்பும் மன வேதனையிலிருந்தும் தப்பிக்க முடியும்.
--NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநிலம்

நோட்டீஸ் போர்டில் போட இங்கே கிளிக் செய்க
Agreement copy:


No comments:

Post a Comment