Wednesday, 31 December 2014





I D A  INCREASE TO = 2.2%
PRESENT IDA           = 98.1%
FROM 01-01-2015 = 100.3%
WISH YOU ALL “ A HAPPY AND PROPEROUS NEW YEAR-2015


Tuesday, 30 December 2014



இனி 01-02-2015 முதல் BSNL ஊழியர்களின் வீட்டு தொலைபேசி இணைப்பிற்கு டெலிபோன் பில் தபாலில் அனுப்பப்படமாட்டாது. இமெயிலில் தான் அனுப்பப்படும்.

உத்தரவை காண இங்கே கிளிக் செய்யவும்
டிலாய்ட் அறிக்கை அமலாக்கம் !  சங்கங்களின் கருத்துக்களை கேட்கிறது BSNL நிர்வாகம் !!

     ERP அமலாக்கம் ஒருபக்கம் !!  டிலாய்ட் அமலாக்கம் மறுபக்கம் என்று இரண்டு பக்கமும் இடிக்கிறது நிவாகம் !!

Deloitte அறிக்கையின் முக்கிய அம்சங்களை கொடுத்து 3 நாட்கள் அவகாசமும் கொடுத்து சங்கத்தின் கருத்துக்களை கேட்டுள்ளது நிர்வாகம்,

  இந்த அறிக்கையின்படி அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது ! ஊழியர்கள் எண்ணிக்கை குறைகிறது !!

புதிய அளவீடுகளின்படி Justified strengthஐ மட்டும் ஊழியர் கணக்கில் காட்டிவிட்டு மற்றவர்களை Supernumerary post என்று காட்டி,அந்த பதவிகளில் உள்ள ஊழியர்களின்பணி ஓய்வுக்கு பிறகு அந்த பதவிகள் தானாக ஒழிந்துவிடும்.

  தேவைக்கு அதிகமான ஊழியர்கள், சேல்ஸ், மார்கெட்டிங், CSC போன்ற பகுதிகளில் மாற்றல் மூலம் பயன்படுத்தப்படுவார்கள்.

           Non-Executive
Sanctioned       Working      Proposed 
TTA                  19691             24000
Sr. TOA            30000            30000
TM                    87484            72000
RM                    25941              nil

Others               31507             1500

Total                198223          127500


           Executives 
Working Strength   Proposed   
    415852                  55780



From NFTE-CBT.

Monday, 29 December 2014

வெல்லட்டும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்.....29ம் தேதி திங்கட்கிழமை துவங்குவதாக இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 28ம்தேதி ஞாயிறு பிற்பகல் முதலே தொடங்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். தமிழக முதலமைச்சரும் உயர் அதிகாரிகளும் சட்டத்தினால் தண்டிக்கப் பட்ட ஒரு குற்றவாளியின் விடுதலைக்கு வேண்டி தமிழகம் எங்கும் பல்வேறு யாகங்களும் வேள்விகளும் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்திவருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டு அவற்றுக்கு எவ்வித பலனும் இல்லாது போகவே வேறு வழியின்றி முறைப்படி முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் துவங்கியுள்ள இவ்வேலை நிறுத்ததை தவிர்க்க தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வேலை நிறுத்ததில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ள அண்ணா தி.மு.க. தொழிற்சங்கத்தை மட்டுமே தமிழக அரசு பெரிதும் நம்பியுள்ளதாகத் தெரிகிறது. இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக பயணிகள் அடைந்துவரும் அவதிக்கு தமிழக அரசின் பொறுப்பற்ற அலட்சியமே காரணமாகும்.

Circle Executive notified on Dec 30th is postponed on account of Transport employees Strike.. Sorry for the inconvenience- C.S, NFTETN.ORG

Thursday, 30 October 2014

           பிரம்மாண்டமான பாராட்டு விழா !

    ஜபல்பூரில் நடந்த நமது சங்கத்தின் அகில இந்திய  மாநாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி 
மாநிலம் சார்ந்த  அகில இந்திய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியும்
அவர்களது வருங்கால செயல்பாடு சிறக்க வாழ்த்தவும் தோழர்
 எம்.கே ராமசாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்த பாராட்டு விழா பிரம்மாண்டமாய் அமைந்தது.

 மழை அச்சுறுத்தும் வேளையிலும் அரங்கம் நிறைந்த பெருங்
கூட்டத்தை கண்டு வியந்தார் கர்னாடக மாநிலத் தலைவரும் 
பெங்களூரு தொலைபேசி மாவட்டச் செயலருமான தோழர் கிருஷ்ணமோகன். 

தமிழகமும் சென்னை தொலைபேசியும் மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான துவக்கமாக அமையும் இந்த விழாவை 
மனதார வரவேற்பதாக தோழர் கிருஷ்ணமோகன் அவருக்கே 
உரிய கொஞ்சு தமிழில் கூறியதை அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். 

தோழர்கள் ஆர்.கே, C.K. மதிவாணன், மாலி, மதுரை சேது, 
எல். சுப்பராயன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பாராட்டியும், 
மாநாட்டு நிகழ்வுகளை விளக்கியும் உரையாற்றினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.அப்பாதுரை 
அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ,நினைவுபப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கூட்டத்தின் சிறப்பு அம்சமாக BSNLEU சங்கத்திலிருந்து தோழர் யூசுப் பாட்சா தலைமையில் ஏராளமான தோழர்களோடு நமது சங்கத்தில் இணைந்தார்.
 
புதிய நிர்வாகிகள் 

தோழர் கோ.ஜெயராமன், எஸ்.எஸ்.கோபால கிருஷ்ணன் , டி.ஆர்.ராஜசேகரன்,  சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை P.காமராஜ்,
சென்னை கே.எம்,இளங்கோவன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர் 
மாநில பொருளர் தோழர் ரவி நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.  
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday, 26 October 2014

நேற்றையதினம் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் NFTCL மாநில சங்கம்  ஆர்ப்பாட்டம்  நடத்தியது.


Wednesday, 22 October 2014

Monday, 20 October 2014

               NFTCL

           மீண்டும் போனஸ் 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட 

வழக்கின் காரணமாக LEO அவர்கள் நடத்திய 

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் CONTRACTOR மற்றும் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றதன் அடிப்படையில் குறைந்தபட்ச   BONUS CONTRACTOR வழங்க   LEO உத்தரவிட்டார்.


கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நமது 


தோழர்கள் குறைந்த பட்ச BONUS ரூ.3500/- பெற 


வழி வகுத்திட்ட LEO அவர்களுக்கும்,பெற்று தந்த 


மாவட்ட சங்கத்திற்கும், மாவட்ட   நிர்வாகத் 


திற்கும்  நன்றி ... நன்றி ...நன்றி ....


                                     NFTCL CUDDALORE
 
இந்த ஆண்டும் இதுவரை நாம் போனஸ் பெறவில்லை. ஆனால்  ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.3,500 போனஸ் பெற்றுக்கொடுத்த NFTCL  கடலூர் மாவட்டசங்கத்தை  திருவண்ணாமலை கிளை மனதார பாராட்டுகிறது..

Saturday, 18 October 2014



திருவண்ணாமலை மாவட்ட 9வது ஏஐடியுசி மாநாடு 17-10-2014 முதல் 18-10-2014 வரை செங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.  17-10-2014ல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொது கூட்டத்தில் தோழ டி.எம்.மூர்த்தி மாநில பொதுச்செயலாளர் AITUC சிறப்பிரையாற்றினார்கள்.  18-10-2014 அன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.  அதில் NFTE-BSNL சார்பில் ஆர். செல்வராஜு, கே. இராஜேந்திரன், ந.பாலகிருஷ்ணன் பிரதிநிதிகளாக பங்ககெடுத்தனர். புதிய பொருப்பாளர்களாக தோழர்கள் ஜீவா, எம்.எஸ்.மாதேஸ்வரன், த. இராஜேந்திரன் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொருப்பாளர்கள் பணி சிறக்க நமது NFTE-BSNL (INDOOR கிளை)திருவண்ணாமலை சார்பாக வாழ்த்துகிறோம்.