Monday, 29 December 2014

வெல்லட்டும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்.....29ம் தேதி திங்கட்கிழமை துவங்குவதாக இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 28ம்தேதி ஞாயிறு பிற்பகல் முதலே தொடங்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். தமிழக முதலமைச்சரும் உயர் அதிகாரிகளும் சட்டத்தினால் தண்டிக்கப் பட்ட ஒரு குற்றவாளியின் விடுதலைக்கு வேண்டி தமிழகம் எங்கும் பல்வேறு யாகங்களும் வேள்விகளும் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்திவருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டு அவற்றுக்கு எவ்வித பலனும் இல்லாது போகவே வேறு வழியின்றி முறைப்படி முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் துவங்கியுள்ள இவ்வேலை நிறுத்ததை தவிர்க்க தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வேலை நிறுத்ததில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ள அண்ணா தி.மு.க. தொழிற்சங்கத்தை மட்டுமே தமிழக அரசு பெரிதும் நம்பியுள்ளதாகத் தெரிகிறது. இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக பயணிகள் அடைந்துவரும் அவதிக்கு தமிழக அரசின் பொறுப்பற்ற அலட்சியமே காரணமாகும்.

No comments:

Post a Comment