Thursday, 30 October 2014

           பிரம்மாண்டமான பாராட்டு விழா !

    ஜபல்பூரில் நடந்த நமது சங்கத்தின் அகில இந்திய  மாநாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி 
மாநிலம் சார்ந்த  அகில இந்திய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியும்
அவர்களது வருங்கால செயல்பாடு சிறக்க வாழ்த்தவும் தோழர்
 எம்.கே ராமசாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்த பாராட்டு விழா பிரம்மாண்டமாய் அமைந்தது.

 மழை அச்சுறுத்தும் வேளையிலும் அரங்கம் நிறைந்த பெருங்
கூட்டத்தை கண்டு வியந்தார் கர்னாடக மாநிலத் தலைவரும் 
பெங்களூரு தொலைபேசி மாவட்டச் செயலருமான தோழர் கிருஷ்ணமோகன். 

தமிழகமும் சென்னை தொலைபேசியும் மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான துவக்கமாக அமையும் இந்த விழாவை 
மனதார வரவேற்பதாக தோழர் கிருஷ்ணமோகன் அவருக்கே 
உரிய கொஞ்சு தமிழில் கூறியதை அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். 

தோழர்கள் ஆர்.கே, C.K. மதிவாணன், மாலி, மதுரை சேது, 
எல். சுப்பராயன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பாராட்டியும், 
மாநாட்டு நிகழ்வுகளை விளக்கியும் உரையாற்றினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.அப்பாதுரை 
அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ,நினைவுபப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கூட்டத்தின் சிறப்பு அம்சமாக BSNLEU சங்கத்திலிருந்து தோழர் யூசுப் பாட்சா தலைமையில் ஏராளமான தோழர்களோடு நமது சங்கத்தில் இணைந்தார்.
 
புதிய நிர்வாகிகள் 

தோழர் கோ.ஜெயராமன், எஸ்.எஸ்.கோபால கிருஷ்ணன் , டி.ஆர்.ராஜசேகரன்,  சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை P.காமராஜ்,
சென்னை கே.எம்,இளங்கோவன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர் 
மாநில பொருளர் தோழர் ரவி நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.  
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment