Thursday 13 February 2014

அன்று சொன்னதும் இதே அபிமன்யூ !

                                      இன்று சொல்வதும் அதே அபிமன்யூ !!

  தேர்தலின் போது , போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ! அதை
 மூன்று ஆண்டுகளாக BSNLEU சரண்டர் செய்தது தவறு என்று 
தோழர் சி.கே.மதிவாணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது BSNLEUவின் பொதுச் செயலரான தோழர் அபிமன்யூ, நமது ஊழியர்கள் போனஸ் சட்டத்தின்படியான உச்சரவரம்பிற்கும் மேலாக பன்மடங்கு அதிகமாக சம்பளம் பெறுவதால் போனஸ் என்பது 
கொடுபடா ஊதியம் என்ற நிலைபாடு நமக்கு பொருந்தாது , 
இது தோழர் மதிவாணன்  அவர்களுக்கு தெரியுமா என்று கேள்வி கேட்டார்.

தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்ற BSNLEU செயற்குழுவில் 
பொதுச் செயலர் அபிமன்யூ சொன்னது தவறு என்று முடிவெடுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

  தோழர் மதிவாணன் அவர்களின் கூற்றை (Bonus is a deferred wage ) ஏற்று அதை  நிர்வாகத்திற்கு அபிமன்யூ இன்று கடிதம் எழுதியுள்ளார்.   

நன்றி: NFTE கோவை

No comments:

Post a Comment