Friday, 6 December 2013

டிசம்பர் - 6 - அண்ணல் அம்பேத்கார் நினைவு நாள்

அம்பேத்கர் - பொன்மொழிகள்

Print E-mail
  • ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

  • எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

  • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

  • சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

  • உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

  • முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

  ஆபரேஷன் சக்சஸ் ஆனால் ......

                                          


      Operation success but patient out என்றொரு சொல்லாடல் உண்டு;  
அதுபோல, 2012-13 ஆண்டிற்கான grading  (மிக சிறப்பானது) Excellent.

  ஆனால், நம்பூதிரி போட்ட உடன்பாடு காரணமாக நமக்கு 
இவ்வாண்டும் போனஸ் இல்லாமல் போனது 

BSNL is awarded  "Excellent" grade for Corporate Governance. 
The DPE, vide it's letter dated 27-11-2013, has awarded Excellent grade for BSNL. The DPE is awarding grades to Central Public Sector Enterprises, on the basis of their compliances with guidelines on Corporate governance. For the year 2012-13 BSNL is awarded Excellent grade since it has scored 100%. <<view letter>>

Thursday, 5 December 2013

40 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 30 டிவி சேனல் பார்க்கலாம்!

BSNL மொபைல்-லில் 251 ரூபாய் recharge செய்தால் இரண்டு GB க்கு இன்டர்நெட் டவுன்லோட் செயலாம். 

மேலும் 40 ரூபாய் சேர்த்து 291 ரூபாய் recharge செய்தால் இரண்டு GB க்கு இன்டர்நெட் டவுன்லோட் உடன் 30 சேனல் டிவி யும் பார்க்கலாம்!

மேலும் படிக்க 

Wednesday, 4 December 2013

EGoM approves M&A guidelines for telecom sector

2ஜி: ஜேபிசி அறிக்கை நாளை தாக்கல் பிரச்னை எழுப்ப பாஜக, திமுக முடிவு

2ஜி அலைக்கற்றை தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, அந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து பாஜக, திமுக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தில்லியில் மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறியது:
சுஷ்மா ஸ்வராஜ் (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்): எதிர்க்கட்சிகளின் அதிருப்தியுடன் ஜேபிசி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வரைவு அறிக்கை தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் பதிவு செய்த அதிருப்தி குறிப்புகளை வசதிக்கு தக்கபடி ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ வெட்டிச் சுருக்கியுள்ளார்.
மக்களவையில் வியாழக்கிழமை அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது இது பற்றி பிரச்னை எழுப்புவோம்.
டி.ஆர். பாலு (திமுக): அலைக்கற்றை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அவர் அளித்த விளக்கக் கடிதத்தை அறிக்கையில் முழுமையாக இடம்பெறச் செய்யாமல் பி.சி.சாக்கோ தவிர்த்துள்ளார்.
பல உண்மைகளை மூடி மறைக்க சாக்கோ முயன்றுள்ளார்.
இப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்புவர்.
குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்): நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம் ஜேபிசி. அதன் எந்தவொரு நடவடிக்கையும் விவாதத்துக்கு உள்பட்டது. அந்த வகையில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அதன் தலைவர் சாக்கோவின் செயல்பாடு குறித்து விவாதிப்போம் என்றார்.
முன்னதாக, ஜேபிசி அறிக்கையை இறுதி செய்வதற்காக குழுவின் கடைசி கூட்டத்தை கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி பி.சி.சாக்கோ கூட்டினார். அந்த அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து பாஜக, திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சாக்கோவுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால், தங்கள் கடிதத்தில் இடம்பெற்றிருந்த முக்கியமான ஆட்சேபக் குறிப்புகளை நீக்கிவிட்டு சாக்கோ அறிக்கை தயாரித்ததாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு கடிதம் அனுப்பினர். மேலும், சாக்கோ அளித்த அறிக்கையை அவரிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்றும் திமுக, பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந் நிலையில், மக்களவைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ஜேபிசி அறிக்கை மக்களவை, மாநிலங்களவையில் முறைப்படி வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Sunday, 1 December 2013

அந்த நாள் ஞாபகம் - எங்கல்ஸ் பிறந்த நாள்

21 வயதில் ராணுவப்பணியில் எங்கல்ஸ்
கம்யூனிச ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் (1820 –1895) இன்றுதான் பிறந்தார்.
அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.
எங்கல்ஸ் 20க்கும் மேற்பட்ட மொழிகளை பயின்றவர்.அந்த காலகட்டத்தில் வெளியான அறிவியலின் பல பிரிவுகளை அவர் கரைத்துக் குடித்து இருந்தார்.அவர் ராணுவத்திலும் பணியாற்றினார். கம்யூனிச தத்துவம் உருவாக காரணமான முக்கியமான கருத்துக்களை மார்க்சுக்கு அறிமுகப்படுத்தியவராக எங்கல்ஸ் இருந்தார். எங்கல்சின் பண உதவி இல்லாமல் இருந்தால் மார்க்ஸ் பட்டினியால் செத்திருப்பார்.
குடும்பம், தனிச்சொத்து ,அரசு ஆகியவற்றின் தோற்றம், இயற்கையின் இயக்கவியல் போன்ற நூல்களை எங்கல்ஸ் எழுதியுள்ளார். மார்க்சின் நூல்களுக்கும் எங்கல்ஸ் உதவி உள்ளார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது.
தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு 1895-ஆகஸ்டு 5-ல் எங்கல்ஸ் இறந்தார்.
 
நன்றி. NFTE- காஞ்சிபுரம்
நிர்வாகம் அனைத்து சங்கங்களுடான சந்திப்பு-30-11-2013
இன்று CMD, Director(HR), Director (Enterprise), Director(F) and Director(CFA) and the PGMs, Sr. GMs, and GMs இவர்கள் அனைத்து சங்கப் பிரதிநிதிகளுடன் பி.எஸ்.என்.எல். சீரமைப்பு குறித்து விவாதித்தனர்.
விவாதத்தில் இடம்பெற்ற விபரங்கள்:
1.நமது கம்பெனியை சிரமமின்றி நடத்த நிதி ஆதாரம் திரட்டுதல்.
2. அனைத்து உபகரணங்களும் இருந்தும் சேவை மேம்பாடு அடையாமல் இருத்தல்.
3. செல் சேவை மேம்பட வெண்டும்.
4. அதிகப்படியான சரண்டர் கம்பெனியின் நிலைமையை மோசமாக்குகிறது.
5. BSNL சேவைகான புதிய சேவைகளுக்கு நம்மிடம் உள்ள 2.5 லட்சம் ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.
6.கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் இவை அதிக லாபத்தை ஈட்டுகின்றன.மற்ற மாநிலங்களும் முன்னேறி வருகின்றன.ஆனால் கொல்கத்தா, சென்னை மற்றும் ஜார்கண்ட் பின் தங்கி உள்ளன. இதில்முன்னேற்றம் காண தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு தேவை.
7. தொலைபேசி உபகரணங்கள், கேபிள்கள் அந்தந்த மாநில ஸ்டோர்களில் தாரளமாக உள்ளன.
8. மேற்கு பகுதியில் உபகரணங்கள் வாங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
9. BSNL டவர்களை,கட்டிடங்கள் மற்றும் காலி இடங்களை  வாடகைக்குவிட முயற்சி.
10. மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதை குறைக்கும் வழிகளை கண்டறிதல்,
11. Enterprise Business and Leased Circuit இவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
12.  44 High level SSAs கண்டறியப்பட்டு அதனை முன்னேற்ற அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு தேவையானன அனைத்து உபகரணங்களையும் தடையில்லாமல் வழங்குதல்..

இனி இதுபோன்ற கூட்டங்கள் அடிக்கடி கூட்டப்படும் என நிர்வாகம் தெரிவித்து உள்ளது.