Wednesday, 14 August 2013

Holding of any agitational programme in the BSNL premises, viz dharna, demonstration etc guidelines-reg. see the co order.

Tuesday, 13 August 2013


ONGC  நிறுவனத்தில் VRS அறிவிக்கப்பட்டுள்ளது 

அதன் சில சிறப்பு அம்சங்கள்:

1.40 வயது அல்லது 15 வருட சர்வீஸ் .


2. EX-GRATIA தொகைஇதுவரை சர்வீஸ் செய்த வருடங்களுக்கு

 வருடத்திற்கு 60 நாள் சம்பளம் அல்லது மீதி இருக்கும் 

வருடங்கள் X 60 நாள் சம்பளம் எது குறைவு அந்த தொகை (Salary 

Means only Basic Pay + DA only)



மற்றபடி GPF, Leave Encashment, Commutation, கிராஜுவிட்டி 

 முதலியன வழக்கம் போல் தரபடும்.

தோழர்களே , இதேபோல் நமக்கும் வருமா? என்று கேட்டால் 

தெரியாது. நம்மை பொறுத்தவரை VRS அனைத்து சங்ககளாலும் 

கடுமையாக எதிர்க்கபடுகிறது ? 

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

       கிங் ஃபிஷெர்க்கு ஏற்பட்ட கதி !

   சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் King Fisher என்னும் விமான கம்பெனி பல்வேறு கவர்ச்சிகளில் இறங்கி ஏர் இந்தியா உட்பட மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ள முயன்றது. வங்கிகளிடம் தில்லுமுல்லு செய்து கடன் பெற்று இயங்கியது. 

  அதற்கு உதவ மன்மோகன் சிங் உட்பட பலர் முன் வந்தனர். ஆனால யாராலும் தில்லுமுல்லு செய்த அந்த நிறுவனத்தை காப்பாற்ற முடியவில்லை.

 இன்று கடன் கொடுத்த வங்கிகள் எல்லாம் அந்த கம்பெனியை முற்றுகை இடுகின்றன. தலைமை அலுவலகத்தையே கைப்பற்றியுள்ளன.

    பொய்மையும் ஏமாற்றுவேலையும்  நீண்ட நாள் நிலைக்காது.


                              Vijay Mallya

Saturday, 10 August 2013

                                 ஏற்கப்பட்ட நமது  நிலைபாடு !

                                  

      தனி ஆவர்த்தனம் ஏன்? தோழர்.மதிவாணன் கேள்வி?


சென்ற தேர்தல் முடிந்தவுடன் BSNLEU சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது.  அதில் இனி இரண்டு அங்கீகாரச் சங்கங்களும்  ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் முடிந்து கல்கத்தாவில் 7-9,ஜூன்- 2013 தேதிகளில் கூடிய  முதல் செயற் குழுவிலேயே தனித்த போராட்டத்திற்கான அறைகூவல் விடப்பட்டது. உடனடியாக தனி ஆவர்த்தனம் ஏன்? என்று கேள்வி கேட்டு ஒரு கட்டுரையை நாம் வெளியிட்டோம்.

 3-8-13 அன்று டெல்லியில் நடந்த கருத்தரங்கத்திற்கு வந்திருந்த  நமது அகில இந்திய சங்க நிர்வாகிகள்,  மாநிலச் செயலர்கள் 3,4-8-13 தேதிகளில் நடத்திய கலந்துரையாடலில் அதே கருத்து வலுவாக வெளிப்பட்டு தீர்மானமாக வெளிவந்துள்ளது  மகிழ்வை அளிக்கிறது.

அந்த கூட்டத்தில், இவ்வாண்டு  போனசை கண்டிப்பாக வழங்க வேண்டும், அது குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், 78.2 IDA இணைப்பின் போது, பெரும்பாலான  குரூப் D மற்றும்  RM ஊழியர்க்கு Stagnation காரணமாக மறுக்கப்படுவது அநியாயம், அதை சரிசெய்ய மாற்று வழி காண வேண்டும் என்று வலியுறுத்தியதும் சரியான முடிவுகளாகும்.

அதே சமயம் நமது துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன், டெல்லி கருத்தரங்கில் நாசூக்காக தெரிவித்தது போல,  BSNLEU தனது தனித்த போராட்ட அறைகூவலை கைவிட்டு விட்டு  ஒன்றுபட்ட போராட்ட அறைகூவலாக ஆக்கிட முன்முயற்சி மேற்கொள்ளும் வகையில் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், BSNLEU தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் தனித்து போராடுவது என்ற தீர்மானமும் வரவேற்கத்தக்கது.       
 -------------------------------------------------------------------------------------------------------------                      
                                  

தனக்கு தேவையென்றால்  BSNLEU ஒற்றுமை வேடத்தை புனையும் : தனது நோக்கம் நிறைவேறியவுடன் அந்த வேடத்தை கலைத்து விடும் என்பது நாம் அறிந்தே ! 

தேர்தல் முடிந்து 78.2 சத உத்திரவு வரும்வரை ஒற்றுமை வேடம் புனைந்த BSNLEU, தற்போது அந்த வேடத்தை கலைத்து விட்டு போரம் அமைப்பை தூக்கி பரண் மேல் வைத்துவிட்டதாக தெரிகிறது.

 காலாவதியாகிப் போன தந்தி சேவையை தொடர வேண்டும் என்று கோரி    கடைசி கடமைக்காக ஒரு தர்ணா தன்னந்தனியே !!

 கல்கத்தா செயற்குழுவில் கூடி 8 ஆண்டுகளாக தனியே பேசி தீர்க்க முடியாத பிரச்னைகளுக்காக மீண்டும் ஒரு போராட்ட திட்ட அறிவிப்பாம் !!!

நேற்றுவரை ஒன்று படுவோம்! போராடுவோம் !! இனி ஒன்றாகத்தான் போராடவேண்டும் என்றெல்லாம் கூறியவர்கள், தற்போது திடீரென்று தனி ஆவர்த்தனம் நடத்துவது ஏன் ?  

BSNLEUவிற்கு  கண்ணை மூடிக் கொண்டு வக்காலத்து வாங்கும் நமது தலைவர்கள் சிந்திப்பார்களா ?   


நன்றி: கோவை வலைதளம்

Friday, 9 August 2013

என் குணம் appease அல்ல! போராட்டமே என நிரூபித்த தலைவன் தோழர் CKM




From Kanchipuram Website
இன்று மதியம் சென்னை தொலைபேசியின் முன்னாள் தலைமை மேலாளர் திரு.M.P.வேலுச்சாமி அவர்களின் வீட்டை CBI அதிகாரிகள் திரு.தயாநிதி மாறன் வீட்டிற்கு 323 ISDN இணைப்புகள் வழங்கிய புகார் சம்மந்தமாக சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு தஸ்தாவேஜ்களை கைப்பைற்றினர். வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
     2011 அக்டோபரில் நம்முடைய மாநிலச் செயலர் தோழர்.C.K.மதிவாணன் தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். எதற்காகத் தெரியுமா? தயாநிதி மாறன் வீட்டிற்கு சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 323 ISDN இணைப்புகள் சம்மந்தமான CBI விசாரணை துவங்கிய நேரத்தில் திரு.வேலுச்சாமி பணி ஓய்வில் சென்றபிறகும் CGM அலுவலகத்திற்கு வந்து முக்கியமான கோப்புகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை அப்போதைய பொது மேலாளர் திரு.A.சுப்ரமணியன் கண்டும் காணாமல் அனுமதித்தார். இந்த மோசடியை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற நிர்வாகம் 70க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு FR17-A விதியின் கீழ் சேவை முறிவு தண்டனையை தந்தது. தோழர். C.K.மதிவாணன் மீது மட்டும் CDA விதி 36 பிரிவின் கீழ் விசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு அவர் பணிஓய்வு பெற்றபோது ஓய்வுகால பலன்கள் கிடைக்காதவாறு முடக்கப்பட்டது.
     தோழர். C.K.மதிவாணன் 30/6/2013 பணிஓய்வு பெற்றபோதிலும் இன்றுவரை அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய ஓய்வுகாலப் பலன்கள் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
     எனினும் காலம் கடந்த பிறகாவது நமது குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை CBI –இன் இன்றைய Raid-உம் வீட்டை சீல்செய்த நடவடிக்கையும் நீரூபித்துள்ளன. அந்த வகையில் நமது மாநிலச் சங்கத்தின் முன்முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. இந்த பிரச்சனையில் வேறு எந்த அகில இந்திய சங்கமும் ஏன் எந்த மாநிலச் சங்கமும் எடுக்கத் துணியாத நடவடிக்கைகளை அசாத்திய துணிச்சலுடன் மேற்கொண்ட தோழர். C.K.மதிவாணன் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி இறுதியில் கிடைத்தே தீரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62ஆக உயர்த்த உள்ளதாக செய்தி. படிக்க

Thursday, 8 August 2013

அனைத்து முஸ்லீம் சமூகத்து தோழர்களுக்கும்


“ இரமலான் நல் வாழ்த்துக்கள் “