என்.எல்.சி.யில் துப்பாக்கிச் சூடு:
தா. பாண்டியன் கண்டனம் :
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்
(என்.எல்.சி.) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான
சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.
பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில்
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளியான ராஜா பலியாகி
உள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற
ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
கடலுர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் தொழிலகப் பாதுகாப்பு படையினர்
நடத்திய தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். தொழிலாளர்கள் பலரும்
தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத இந்த
சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக கைது
செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment