மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் ...!!
மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா"
8-.3.-2014 அன்று நம்நாடு உட்பட உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த
ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை
முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம்
ஆண்டின் மார்ச்த் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்"
என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த
விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.
பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியோடு
எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட
உறுதியேற்போம்......!
No comments:
Post a Comment