Monday, 31 March 2014



வேலூர் மாவட்டத்தில் இன்று 31-03-2014 

பணிநிறைவு செய்யும் தோழர்கள் மன

அமைதியும், உடல் ஆரோக்கியமும், நீண்ட

ஆயுலும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

1.    ஆர். இரமேஷ்பாபு       SrTS    VLR

2.    ஜி.  ஜீவமணி           SrTS    TPT

3.    எம். தியாகராஜன்       TTA      ABR

4.    வி. காத்தவராயன்      TM       TPT

5.    அ. கெர்லினா           TM      VLR

6.    ப. கிருஷ்ணமூர்த்தி     TM      CTP

7.    எம். தனபால்           TM       VLR

8.    ஆர். விஜயன்           TM      VNB

Friday, 28 March 2014



வேலூர் மாவட்டத்தில் 27-03-2014 அன்று நடைபெற்ற RGB  உறுப்பினர்கள் தேர்தலில் NFTE  கூட்டணி வெற்றிபெற்றது. வாக்குகள் விபரம்.

1.   சி. ராஜு           = 632
2.   ஜி. ராஜ்குமார்      = 593
3.   எம். சதீஷ்குமார்    = 587
4.   ஜி. ரகு             = 558
5.   சி. செல்வராஜ்      = 550
6.   எல். அமரன்        = 549
7.   எஸ். வீரராகவன்    = 542
8.   கே. செல்வராஜ்     = 525
9.   எம். சிவராஜ்        = 514
==================================

மொத்த வாக்குகள்        = 941
.பதிவான வாக்குகள்       = 881
செல்லாத வாக்குகள்      =  25
செல்லத்தக்க வாக்குகள்   = 856
======================================

Tuesday, 25 March 2014

வாழ்த்துக்கள் தோழா,

வாழ்த்துக்கள் தோழா,
நமது சங்க இளைய தளபதி தோழர் ஆனந்தன் மாநில செயலராக
தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் மனதார பாராட்டுகிறோம்.
நாம்  கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் என்ற பதத்தையே  மறந்துவிட்டோம்,
(மறக்கடிக்கப்பட்டோம்) ஆனால் தோழர் ஆனந்தன்,  கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும்
நமது கேசுவல் தோழர்களுக்கு வருடம் தவறாமல் போனஸ் பெற்றுக்கொடுத்ததை
நாம பெருமையாக கூறலாம். எனவே கேசுவல் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல
தலைவராக வருங்காலத்தில் செயல்படுவார் என நம்பிக்கை பிறக்கின்றது.
 

கடலூரில் 24-3-14 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தலைவர்கள்

சி.கே.மதிவாணன், மாலி, கடலூர் செயராமன்,கோவை சுப்புராயன், பாண்டியின் அசோக்ராஜ், முதுபெரும் தலைவர் கடலூர் ரகு, கம்யூனிச இயக்கத்தின் தலைவர் அப்பாதுரை மற்றும் தொழிற்சங்க முன்னோடிகள் பங்கேற்றனர். விழா நடந்த கடலூர் தொலைபேசி நிலைய வளாகள் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. அவ்விழாவில் சில காட்சிகள் உங்களுக்காக....














Tuesday, 18 March 2014






    அவதூறு பரப்பாளர்கள்  தோல்வி தழுவுவர்  !
                            
சென்ற ஆண்டு நடந்த  சங்கத் தேர்தலின்போது அவதூறு நாயகர்களான BSNLEU சங்கத்தார் 
தோழர் C.K.மதிவாணன் அவர்களைப் பற்றி ஒரு அவதூறைப் பரப்பி ஆதாயம் பெற முயற்சித்தனர்.  தேர்தல் முடிந்தவுடன் அது புஸ்வானமானது ! 

 தற்போது அதே அவதூறு பரப்பாளர்கள், வேலூர் BSNLEU வெப் சைட்டில் ஒரு அவதூறை பரப்பி டிஜிட்டல் பேனர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தோழர் மதிவாணன் மற்றும் தோழர் வீரராகவன் ஆகியோர் 1300 கோடி ரூபாய் மெகா ஊழல் நடத்த திட்டமிட்டு இருப்பதை தடுக்க BSNLEUவுக்கு வாக்களிக்க வேண்டுமாம் !

  நமது கேள்வியெல்லாம், தோழர் வீரராகவனை தலைவராக முன் மொழிந்து தேர்ந்தெடுத்து நான்கு ஆண்டுகள் அவரை நல்லவர், வல்லவர் என்று புகழ்ந்தது யார் ?  BSNLEU சங்கத்தினர் தானே ?


 இவர்களின் கட்சிக் கட்டளையை ஏற்று இயக்குநர் குழு கூட்டத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக டைரக்டர் என்ற முறையில் ஒரு ஓட்டும், தலைவர் என்ற முறையில் இன்னொரு ஓட்டும் போட்டு மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்க ஒத்துழைக்காத காரணத்தால் தானே இன்று வேறு மாதிரி பேசுகின்றனர் ?

  நான்கு வருடங்களாக இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் தானே சொஸைட்டி இருந்தது ? 

இந்த காலத்தில் ஏன் இவர்களால்  நிலத்தை பிரித்து கொடுக்க முடியவில்லை ?  

நிலத்தை சைட்டாக பிரிக்க CMDA வின் அனுமதியை ஏன் பெற முடியவில்லை ? 

நிலத்தை  விற்று அதில் வரும் லாபத்தில் 40000 ரூபாயை ஊழியர்க்கு இனாமாக வழங்க முடியவில்லை ?

 700 உறுப்பினர்களுக்கு நிலத்தை  பிரித்து கொடுப்பது அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?

  ஆயிரக்கணக்கான  அடுக்கு மாடி கட்டுவதால் அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?

 சொஸைட்டி விதிகளின்படி டிவிடெண்ட் தவிர வேறு வகைகளில் உறுப்பினர்களுக்கு பணமாக 
 தர முடியாது  என்பது இவர்களுக்கு தெரியாதா ? இல்லை தெரிந்தும் நடிக்கிறார்களா ?

    2G ஊழலை, தயாநிதி மாறனின்  323 ISDN முறைகேட்டை   எதிர்த்து சமரசமின்றி போராடிய 
Whistle Blower தோழர் மதிவாணன் அவர்களைப் பற்றி, 2G ஊழலுக்கு ஒத்து ஊதிய BSNLEUவின் இந்த அவதூறு பிரச்சாரம்  தமிழக BSNL ஊழியர்களிடம் எடுபடாது. 

    NFTE கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

        BSNLEUவின் கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவும் என்பது உறுதி.  


அவதூறு பரப்பி  தோல்வியை  தழுவ உள்ளோர்  !

              


















என்.எல்.சி.யில் துப்பாக்கிச் சூடு: 

தா. பாண்டியன் கண்டனம் :

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளியான ராஜா பலியாகி உள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலுர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் தொழிலகப் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். தொழிலாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக கைது செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 

Wednesday, 12 March 2014



திருவண்ணாமலையில் NFTE  சங்கத்தின் மூத்த தோழரும், வழிகாட்டியுமான தோழர் T.M. பழனி STS  அவர்களின் மகள் 
 P. இராஜேஸ்வரி A. பிரபாகரன் இவர்களின் திருமணம் 12-03-2014 அன்று ஆற்காடு நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தோழர்கள் கு.ஜோதி, இரா.தங்கராஜ், G. சுப்ரமணி, T. இராஜேந்திரன், மற்றும்  NFTE  தோழர்களும், சகோதர சங்கத்தோழர்களும் பெறுமளவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.