Thursday, 13 February 2014

இயற்கை எரிவாயு விலை விவகாரம்: மொய்லி,அம்பானி மீது வழக்கு!!


   இயற்கை எரிவாயு மீதான விலையை நிர்ணயப்பதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ்அதிபர் முகேஷஅம்பானி, முன்னாள்பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோராமீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கோதாவரி நதிக்கரைகளில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிப்பபதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கப்பல்படை முன்னாள் தளபதி கிலியானி வக்கீல் காமினிஜெய்ஸ்வால்உட்பட பலர் புதுடில்லி அரசின்ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளி்ததனர்.
 

புதுடில்லி முதல்வர் உத்தரவு: புகாரின் பேரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா, ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி மீது விசாரணை நடத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பி்றப்பித்தார். மேலும் கெஜ்ரிவால் பிரதமர் மன்மோகன்சிங் கிறகு எழுதியள்ள கடிதம் ஒன்றில் மேற்கண்ட வழக்கு விசாரணை முடியும் வரையில் எரிவாயுவிற்கானவிலையை உயர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment