Friday, 28 February 2014

இதுவே முடிவு



  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் பஞ்சப்படி உயர்வு
  • EPFO  திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம்
  • ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி
இவையே 28.02.2014 அன்று 2014 தேர்தலுக்கு முன் கூடிய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்
 
நன்றி: ஈரோடு NFTE


வேலூர் மாவட்டத்தில் இன்று (28-02-2014) 

பணிநிறைவு பெறும் நமது தோழர்கள் அணைவரும் 

அமைதியும், ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு

 வாழ நமது கிளையின் சார்பில் வாழ்த்துவோமாக.


1.  திரு. சமரசம் . K                      SDE
2.  திரு. வாசுதேவன். M.             STS
3.  திரு. சிவபிரகாசம். A.C          TM
4.  திரு. பசுபதி. R TM        TM

Thursday, 27 February 2014


                                  Logo
ஓய்வு பெறும் வயது 62 ஆகிறது?: மத்திய அரசு நாளை அறிவிப்பு
                                       

                                ஓய்வு பெறும் வயது 62 ஆகிறது?: மத்திய அரசு நாளை அறிவிப்பு

புதுடெல்லி, பிப். 27–

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மேலும் 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதம் ஆனது.
இப்போது வழங்கப்பட உள்ள 10 சதவீத அகவிலைப் படி உயர்வுக்கு நாளை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்குகிறது. அதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து, மத்திய அரசு ஊழியர்கள் 100 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள். இதனால் 50 லட்சம் ஊழியர்களும், 3 லட்சம் 
ய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் உயர்வு தற்போது 60 ஆக உள்ளது. இதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
நாளை நடைபெறும் மத்திய மந்திரி சபையில் இதற்கான முடிவும் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மார்ச் 1–ந்தேதி முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மார்ச் 1–ந்தேதிக்குப் பிறகு ஓய்வு பெற இருப்பவர்கள் பயன்படுவா         ர்கள்.

Wednesday, 26 February 2014

 
Business Standard

Centre may raise age of retirement 

 by 2 years to 62    To Read "CLICK"Here.

Monday, 24 February 2014

                  தேசிய தொலைத்தொடர்பு  
ஒப்பந்த    தொழிலாளர்கள்    சம்மேளனம் (NFTCL)
  
              எழுச்சிமிகு   NFTCL துவக்க விழா 







 தொலைத் தொடர்புத் துறையில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த  தொழிலாளர் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..

   இந்த சுரண்டலை எதிர்த்திடவும் அந்த தோழர்களின் துயர் துடைக்கவும்  சமரசமின்றி போராடக் கூடிய ஒர் அமைப்பின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று (23-2-2014)  மாலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  உள்ள இந்திய தொழிற்சங்கங்களின் தாயாக திகழும் AITUC சங்கத்தின் மாநில மைய அலுவலகத்தில், NFTCL எனும் தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழ் மாநில சங்க துவக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது.

   வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டத்திற்கு NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் தலைவர் தோழர் M.K. ராமசாமி தலைமை ஏற்றார்.

  300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பங்கேற்ற இந்த  மாநாட்டினை துவக்கி வைத்து தோழர் C.K. மதிவாணன் அவர்கள்  எழுச்சி உரை யாற்றினார். 

இந்திய திருநாட்டில் மிகவும் வளமிக்க துறையாக உள்ளது தொலைத் தொடர்புத் துறை. அதனால்தான், உலகில் உள்ள பெரிய  அந்நிய பகாசூர கம்பெனிகள் எல்லாம் இந்திய தொலைத் தொடர்புத் துறை நோக்கி வந்து லாப வேட்டை நடத்துகின்றன.

இந்த துறையில் பணியாற்றும்  ஊழியர்களுக்கு மிக குறைந்த அளவில் கூலி கொடுத்து சுரண்டுவதன் மூலம் லாபத்தை பன்மடங்கு பெருக்கி  கொள்ளையடிக்கலாம் என்ற குறுகிய அவர்களின் படையெடுப்புக்கான காரணம். ஆகவே சுரண்டப்படுகின்ற  அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்னையை எடுக்கவும் தீர்க்கவும் ஒரு பரந்துபட்ட அமைப்பு இன்றைய காலத்தின் தேவை. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இது போன்ற ஜீவா NLC ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், NLCயில் பல்லாண்டுகளாக சுரண்டலுக்கு ஆளாகியுள்ள  ஒப்பந்த ஊழியர்களுக்காக போராடி, சாதனைகள் பல படைப்பதை எடுத்துரைத்தார்.         

அதுபோல,  இன்று NFTCL (National Federation of Telecom Contract Labours), தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம் உதயமாகிறது. 

இந்த அமைப்பு, தொலைத் தொடர்புத் துறையில்  இந்தியாவெங்கும் பரந்து விரிந்து ஆல் போல் வளர்ந்து, தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறும் சுரண்டலை ஒழித்துக்கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்ச்சியோடு துவக்கி வைப்பதாக பலத்த கரகோஷத்தோடு தனது உரையை நிறைவு செய்தார்.  

NFTE-BSNL சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார்.

கடலூரிலும் திருச்சியிலும் ஒப்பந்த தொழிலாளர்கள்  மாவட்டச்  சங்கங்களின் செயலர்களாக சிறப்புடன் செயலாற்றும் தோழர்கள் எஸ்.ஆனந்தன், மில்ட்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

   தன்னெழுச்சியாக ஒப்பந்த தொழிலாளர்கள் பலரும் வழங்கிய நன்கொடை ரூ 5,000 த்தை தாண்டியது. 

தமிழ்நாட்டிற்கான புதிய நிர்வாகிகளாக 25 தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்    : தோழர் M.அப்பாதுரை Ex-MP 

செயல் தலைவர் : தோழர் S.மாலி ஈரோடு

மாநிலச் செயலர் தோழர் S.ஆனந்தன் கடலூர்

மாநில துணைச் செயலர் தோழர் A. நமச்சிவாயம்,                                                                                     சென்னை  

மாநிலப் பொருளர் : தோழர் V.பாபு சென்னை  

  கோவை மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களிடையே பணியாற்றி வரும் தோழர் K.M. குமரேசன் மாநில அமைப்புச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன :

1. NFTCLன் தேசிய செயற் குழுவையும் சிறப்பு  மாநாட்டினையும் சென்னையில் ஜூலை முதல் வாரத்தில் சிறப்புடன் நடத்துவது.      

2. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்புகளை ஜூன் இறுதிக்குள் உருவாக்குவது.

3. மாநில அமைப்பில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது

  புதியதாக மாநிலச் செயலராக பொறுப்பேற்ற தோழர் எஸ்.ஆனந்தன், பல மாவட்டங்களிலும் நடந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கான இயக்கங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டு வருங்காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் நலன் காக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும் என்று உறுதி கூறினார்.

  இந்த துவக்க விழாவினை சிறப்பாக  நடக்க முன்முயற்சிகள் மேற் கொண்ட புதிய மாநிலப் பொருளர் தொழர் V.பாபு நன்றியுரை ஆற்ற 
விழா எழுச்சியுடன்  நிறைவுற்றது. 

தனது இளம் வயதிலேயே கடலூர் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலராக பொறுப்பேற்று சுறுசுறுப்புடனும் திறமையாகவும் போராடியும், லேபர் கமிஷனர் மூலம் பல்வேறு தொழிற் தாவாக்களை எழுப்பி பல நல்ல உத்திரவுகளை பெற்றும் சிறப்புடன் பணியாற்றும் தோழர் ஆனந்தன் மாநிலச் செயலராக பொறுப்பேற்றது சாலச் சிறந்தது ஆகும். அவரது சேவை தமிழகத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்க்கும் தேவை. அவரது பணி சிறப்புடன் அமைந்து, தோழர்கள் அப்பாதுரை, மாலி ஆகிய மூத்த தோழர்களின் வழிகாட்டுதலோடு  NFTCL சங்கம் இந்தியாவெங்கும் பரவி விரவி தனது வர்க்க கடமையை ஆற்ற கோவை மாவட்டச் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 மது மாவட்டத்தின் தோழர் K.M. குமரேசன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்  !   

தகவல்: NFTE கோவை


23-02-2014 அன்று தோழர் மு.கலியபெருமாள், TNSTC, AITUC,திருகோவிலூர் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு விழா. தோழர்கள் ஆர். நல்லக்க்ண்ணு, எம்.அப்பாதுரை, சேகர், இரா.காமராசு,எ.வி.சரவணன், கே.இராமசாமி, இரா.தங்கராஜ், வி.முத்தையன் மற்றும் பல முன்னனி தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.





Wednesday, 19 February 2014



திருவண்ணாமலையில் 18/02/2014 அன்று மாலை 04.00 ம்ணியளவில் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC  சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் NFTE-BSNL  சங்கத்தின் சார்பில் நமது தோழர்கள் எம்.அயோத்தி, ஆர்.செல்வராஜு, எம்.ரேனு, எஸ். அம்பிகாபதி ஆகியோர் பங்கேற்றனர். AITUC நகர கூட்டமைப்பின் சார்பில் தோழர் ஆர். செல்வராஜு ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தியும், ஆதரவையும் தெரிவித்தார்.







Saturday, 15 February 2014

                                                            கொள்கைக் குன்று !

Live: Arvind Kejriwal, Delhi Cabinet resign after 49 days in power
Arvind Kejriwal's government has tendered its resignation after the Jan Lokpal Bill was stalled in the Assembly on Friday.

பதவிக்காக சிலர் கொண்ட கொள்கையை ஒதுக்கித் தள்ளிவிடும் 
இந்த காலத்தில் கொண்ட கொள்கைக்காக தன்னை தேடி வந்த முதலமைச்சர் பதவியை உதறித் தள்ளிய அரவிந் கஜ்ரேவால் 
உ ண்மையிலேயே  கொள்கைக் குன்று!!   

Thursday, 13 February 2014

இயற்கை எரிவாயு விலை விவகாரம்: மொய்லி,அம்பானி மீது வழக்கு!!


   இயற்கை எரிவாயு மீதான விலையை நிர்ணயப்பதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ்அதிபர் முகேஷஅம்பானி, முன்னாள்பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோராமீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கோதாவரி நதிக்கரைகளில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிப்பபதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கப்பல்படை முன்னாள் தளபதி கிலியானி வக்கீல் காமினிஜெய்ஸ்வால்உட்பட பலர் புதுடில்லி அரசின்ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளி்ததனர்.
 

புதுடில்லி முதல்வர் உத்தரவு: புகாரின் பேரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா, ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி மீது விசாரணை நடத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பி்றப்பித்தார். மேலும் கெஜ்ரிவால் பிரதமர் மன்மோகன்சிங் கிறகு எழுதியள்ள கடிதம் ஒன்றில் மேற்கண்ட வழக்கு விசாரணை முடியும் வரையில் எரிவாயுவிற்கானவிலையை உயர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்று சொன்னதும் இதே அபிமன்யூ !

                                      இன்று சொல்வதும் அதே அபிமன்யூ !!

  தேர்தலின் போது , போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ! அதை
 மூன்று ஆண்டுகளாக BSNLEU சரண்டர் செய்தது தவறு என்று 
தோழர் சி.கே.மதிவாணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது BSNLEUவின் பொதுச் செயலரான தோழர் அபிமன்யூ, நமது ஊழியர்கள் போனஸ் சட்டத்தின்படியான உச்சரவரம்பிற்கும் மேலாக பன்மடங்கு அதிகமாக சம்பளம் பெறுவதால் போனஸ் என்பது 
கொடுபடா ஊதியம் என்ற நிலைபாடு நமக்கு பொருந்தாது , 
இது தோழர் மதிவாணன்  அவர்களுக்கு தெரியுமா என்று கேள்வி கேட்டார்.

தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்ற BSNLEU செயற்குழுவில் 
பொதுச் செயலர் அபிமன்யூ சொன்னது தவறு என்று முடிவெடுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

  தோழர் மதிவாணன் அவர்களின் கூற்றை (Bonus is a deferred wage ) ஏற்று அதை  நிர்வாகத்திற்கு அபிமன்யூ இன்று கடிதம் எழுதியுள்ளார்.   

நன்றி: NFTE கோவை

Sunday, 9 February 2014

ஓய்வுபெறும் வயது 65ஆக உயர்வு????


 சமீபத்தில் கூடிய பாராளுமன்ற குழு மத்திய அரசு 
 
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தலாம் 
 
என சிபாரிசு செய்துள்ளதாக அறிந்துள்ளோம். இதுபற்றி அரசு 
 
முடிவெடுக்கும்முன் இன்றைய வேலையில்லா திண்டாட்டம் 
 
எந்த அளவுக்கு இளைஞர்களை பாதித்துள்ளது என்பதனை 
 
கணக்கில் எடுக்கும் என நினைக்கிறோம். ஆனால் ஒரு 
 
தொழிற்சங்கம் என்றமுறையில் நாம் இதனை கடுமையாக 
 
எதிர்க்கிறோம்.அதுமட்டுமல்லாமல் மூன்று மற்றும் நான்காம் 
 
பிரிவு ஊழியர்களுக்கு உள்ள ஆளெடுப்புத் தடைச் 
 
சட்டத்தையும் திரும்பபெற வலியுறுத்துகிறோம்.  இதனால் 
 
30வருடங்களாக நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். அதேபோல 
 
காசுவல் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் 
 
என்ற கோரிக்கையும் எழுப்புவோம்.
 
தகவல்: NFTE காஞ்சி